சேயோன் யாழ்வேந்தன் காற்றும் வேண்டும் காகிதம் வேண்டும் நூலும் வேண்டும் வாலும் வேண்டும் கையும் வேண்டும் பறக்கவைக்கும் பக்குவம் வேண்டும் எதுவும் புரியாமல் எழுதவும் தெரியாமல் எளிதாய் வாங்க இது என்ன கவிஞன் என்ற பட்டமா என்ன? seyonyazhvaendhan@gmail.com
மு. கோபி சரபோஜி அகத்துறவு வெளியீடாக வந்திருக்கும் யாழிசை மணிவண்ணனின் முகநூல் பதிவுகளின் தொகுப்பு “தேவதைகள் தூவும் மழை”. இத் தொகுப்பில் முகநூலுக்கே உரிய வகையில் அமைந்த பதிவுகள் பல்வேறு தன்மைகளில் தன் தகவமைப்புகளால் நீண்டும், குறுகியும் சித்திரங்களாலான கூடாய் விரிந்து கிடக்கிறது. முகநூல் நட்பு வட்டத்தில் இருப்பவர்களைக் கிளர்ச்சியடைய வைத்து விருப்பக்குறி இட வைக்கும் காதல் – காதலி – காதலன் சார்ந்த பதிவுகள் பரவலாக இருந்தாலும் அதை எல்லாம் களைந்தும், கடந்தும் பார்த்தால் நம்மை […]
என் செல்வராஜ் இந்த தொகுப்பு பாவண்ணனின் 15 ஆவது சிறுகதைத் தொகுதி. இந்த தொகுப்பில் 13 கதைகள் உள்ளன. இந்த தொகுப்பு 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான சுஜாதா விருது பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாமே பழைய தென்னாற்காடு மாவட்ட மொழி நடையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக வட்டார மொழியில் கதைகள் எழுதப்படும்போது பல வார்த்தைகள் புரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது.ஆனால் இந்தக் கதைகளில் கையாளப்படும் மொழி நடையில் அந்த மாதிரியான பிரச்சினை […]
2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம். ( கவிதை, நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும் அடங்கும் ) ஒரு பிரதி மட்டுமே போதும், அனுப்பக் கடைசி தேதி: ஜீலை 30., 2015 முகவரி: சு.ஸ்ரீமுகி, 7/271 குருவாயூரப்பன் நகர் 7வது தெரு, போயம்பாளையம், திருப்பூர் 641 602 /கைபேசி 90434 09113
1 சில சமயம் பேருந்தில் _ சில சமயம் மின்ரயிலில் _ ஆட்டோ, ஷேர் – ஆட்டோ _ ‘நேயம் நாய்ப்பிழைப்பல்லோ’ என்று உச்சஸ்தாயியில் நெக்குருகிப் பாடும் ஆண்குரல் உச்சிமண்டையில் ஓங்கியறைய விரையும் ‘மாக்ஸி cab’ _ பல நேரம் பொடிநடையாய்…….. பப்பாதி ஓட்டமாய் இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன் வலியினூடாய். 2 மொட்டைமாடிக்குச் சென்று இன்னமும் நிழல் நிற்கும் மூன்று இடங்களில் இறைக்கிறேன் அரிசியையும் கோதுமையையும்; இரண்டொரு வாயகன்ற பாத்திரங்களில் நீரூற்றிவைக்கிறேன். காகங்களும் புறாக்களும் ஆரவாரக்கூச்சலிட்டவாறு […]
’என் வீடு’. ’உன் வீடு போல் என் வீடு இது. ’என் வீடு கல் வீடு’ ‘என் வீடு நூல் வீடு, அதனாலென்ன?’ என் வீடு ‘பெரிய’ வீடு என் வீடு ஓலை வீடாய்க் கூட இல்லாத ஏழை வீடு தான், என்ன செய்ய? ‘வெளியே போ’ ஏன்? உன் வீடு பக்கத்தில் இருப்பது அழகாக இல்லை. உன் வீட்டைக் காட்டி பயமுறுத்துவது நன்றாக இல்லை. ‘நான் உழைத்துக் கட்டிய வீடு இது ’. ‘நான் உழைத்தும் […]
பிரபஞ்ச அரங்கமே பிரம்மா படிப்படியாத் திட்டமிட்டு விரியும் பெருங் குமிழியே ! தானாய் எதுவும் உதிக்க வில்லை ! வீணாய் இந்தப் பேரண்டம் தோன்ற வில்லை ! ஒன்றி லிருந்து ஒன்று சீராகி உருவாகி வந்துள்ளது ! இல்லாத ஒன்றிலிருந்து, எதுவும் இயக்காத ஒன்றின் மூலம், திட்ட மிடப் படாமல் எதுவும் கட்டப்பட வில்லை ! பிரபஞ்சப் படைப்புகள் அனைத்தும் காரண-விளைவு நியதியால் சீரொழுங்கு இயக்க முறைகளில் நேரான தொடர்ச்சியில் வேராக நிலைத்து வளர்பவை ! தாறு […]
ராஜா ராஜேந்திரன் சதா போனில் பேசிக்கொண்டும், பைக்கில் ஆங்காங்கே அலைந்தபடியும் பிஸியாய் இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய நான், இப்படி கயிற்றுக் கட்டிலில் முடங்கிக் கிடப்பேனென்று பத்துமணி நேரம் முன்புவரை கூட எனக்குத் தெரியாது ! இன்று விடிவதற்கு முன், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு வட நாட்டு வியாபாரி பதட்டத்துடன், ’தான் லோட் ஏற்றி அனுப்பி வைத்த வெந்தய லாரி, ஆந்திரா அருகே ஒர் ஆற்றுப்பாலத்திலிருந்து கவிழ்ந்து விட்டதாகவும், உடனடியாக அங்குச் […]
இவையத்தனையும் முதலில் சொல்லிவிட்டு, இப்பொழுது நாம் கூத்தின் முதல் நாளின் அரங்கேற்றத்துக்குத் திரும்பப் போவோம், அதாவது திருவிழாவின் 10-வது நாள். அன்று திரௌபதியின் திருமணம். பாஞ்சால மன்னனின் அரண்மனையில் நடக்கும் சுயம்வரத்தில் ஆரம்பிக்கிறது நாடகம். அரசர் வில்லை எடுத்து வர ஆணையிடும் கட்டத்தில் மேடையில் நாடகம் நின்று போகிறது. இதற்குள் நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மல்லர்கள் போல் வேடமணிந்த சில நடிகர்கள் (பழந்தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் போர்வீரர்கள்/ மல்யுத்தக்காரர்கள் இவர்கள்) கோவிலுக்குச் சென்று 30 அடிக்கு 40 […]