ருத்ரா சிலருக்கு ஆழ்கடல் முத்து. பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள். வாளின் காயம் ஒன்றுமில்லை. வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும். பேசவேண்டும் என்று மூளை சமுத்திரத்தில் இறங்குமுன்னமேயே ஒரு பெரிய சுநாமியாய் வந்த வார்த்தையில் மூளைக்கபாலமே மண் மூடிப்போகிறது. மனிதன் ஏன் இப்படி கனமான கற்களைத்தூக்கி தூக்கி என் மீது எறிகிறான். கடவுளுக்கு இன்னும் புரியவில்லை. “சஹஸ்ரநாமத்தை” அவனுக்கு எப்படித்தான் புரிய வைப்பது? நமக்கு இன்னும் புரியவில்லை. வானம் வாய்பிளந்து கற்பலகையில் சொன்னது என்றான் மோசஸ். […]