தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

அரசியல் சமூகம்

நீங்காத நினைவுகள் – 50

ஜோதிர்லதா கிரிஜா 1970 களின் நடுவில் ஒரு தமிழ் எழுத்தாளர் எங்கள் அலுவலகத்துக்கு வந்தார். வரவேற்பு நங்கையாகப் பணி புரிந்துகொண்டிருந்த அமரர் குயிலி ராஜேஸ்வரியை முதலில் அவர் மயிலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாள நண்பருடன்…

திண்ணையின் இலக்கியத் தடம்-39

சத்யானந்தன் ஜனவரி 6 2006 இதழ்: புத்தக அறிமுகம் - நரிக்குறவர் இனவரைவியல் -வெங்கட் ரமணன் தொல்குடியினரான நரிக்குறவர்கள் வேளாண் கலாச்சாரத்திற்கு முந்துபட்ட வேட்டைக் கலாச்சாரத்தை அடியொற்றி வாழ்பவர்கள். இணைப்பு பிறவழிப்பாதைகள் - குலக்கல்வியா…

தொடுவானம்    20. மனதில் உண்டான வலி

                                                                                                                    டாக்டர் ஜி. ஜான்சன்           20.  மனதில் உண்டான வலி           கார்கள் கிரீச்சிட்டு நின்றதைக்  கண்ட இளைஞர்கள் அங்கு ஓடி அவரைத்  தூக்கினர்.நல்ல வேளையாக அவர் விபத்துக்குள்ளாகவில்லை. அங்கிருந்த சில பெரியவர்கள் சமாதானம் சொல்லி எங்களை அனுப்பி வைத்தனர். எனக்கு அவருடன் செல்ல பயமாக இருந்தது. அன்று இரவும் பயத்தால் விடிய விடிய  தூங்காமல் விழித்திருந்தேன்.…

தினம் என் பயணங்கள் -21 தேர்விற்கான நான்காம் நாள் பயணம்

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி (22.05.2014) வாழ்க்கையை ரசிப்பு வட்டத்திற்கு கொண்டு வர பல அனுபவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்தையும் ருசித்துப் பருகுவதான முயற்சிதான் என்னுடையது. வாழ்வோ சாவோ அதை ரம்மியத்தோடு கடந்து…

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அகில ஈர்ப்பு விசை அலைகள்  இணைப் பிரபஞ்சங்கள் இருப்பைச்  சுட்டிக் காட்டும்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dhGRV8cD_tY  [Evidence of Gravitational Waves Points to Multiple Universes (VIDEO)] “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.” லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி…

இலக்கியக்கட்டுரைகள்

புதியதைத் தேடுகிறார் {வளவ.துரையனின் “ஒரு சிறு தூறல்” கவிதைத் தொகுப்பை முன் வைத்து}

கோ. மன்றவாணன் இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும்- புதுப்பொலிவோடு சிறப்பதற்கும், ஒரு காரணம் உண்டு. அது, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான்! இதில் கவிதைக்கு விதிவிலக்கு இல்லை. காலத்துக்கேற்ப கவிதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு…

முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத் தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர்…

ரோல் மாடல் என்னுடைய பார்வையில்.:-

வாழ்க்கையில் சாதிக்கத்துடிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் யாராவது ஒருத்தர் ரோல் மாடலாக இருந்திருப்பார்கள். சிலருக்கு அவர்கள் குடும்பங்களில் இருப்பவர்களே ரோல்மாடல்களாக இருப்பார்கள். சிலருக்கு சாதனை புரிந்தவர்கள். வெற்றிபெற்ற ஒவ்வொருவரின் பின்னும் ரோல்மாடல்களின் பங்கு…

பெரு நகர மக்களின் வாழ்வியல் நிஜந்தனின் ” பேரலை “ நாவலை முன் வைத்து….

சுப்ரபாரதிமணியன் ஏழு நாவல்களை இதுவரை எழுதி வெளியிட்டிருக்கிறார் நிஜந்தன். “ பேரலை “ நிஜந்தனின் ஆறாவது நாவல்.முந்தின நாவல்களைப் போலவே இதிலும் பெரு நகர மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்திருக்கிறார்.இவரின் முதல் நாவல் “ மேக…

மல்லாங்கிணறு தந்த தமிழச்சி தங்கபாண்டியனும் கவிதையும்

  தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது எனக்கு அவரை அவரை அறிமுகப்படுத்தியது கணையாழியில் அப்போது இருந்த யுகபாரதி. அதற்கு முன்னர் அவரை ஒரு இலக்கிய விழாவில் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகப் பார்த்தது…

கடிதங்கள் அறிவிப்புகள்

ஜோதிர்லதா கிரிஜாவின் ஆக்கத்தில் வால்மீகி ராமாயணம் ஆங்கில கவிதைகளாக

1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும்…

கதைகள்

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 8

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 8 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 29, 30, 31,…

வாழ்க்கை ஒரு வானவில் 7.

ஜோதிர்லதா கிரிஜா ரங்கன் சேதுரத்தினத்தை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்ததன் பிறகு தானும் ஒன்றில் அமர்ந்துகொண்டான். சேதுரத்தினம் தலை குனிந்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். லலிதா அவனை ஓரத்துப்பார்வை பார்ததவாறு சமையற்கட்டினுள் நுழைந்தாள். ஒரே ஒரு…

ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1

சிவக்குமார் அசோகன் ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்-1 மழை வலுத்தது. சாலையின் இருபுறமும் நடந்து செல்பவர்கள் அங்குமிங்கும் ஓடி ஒதுங்கினார்கள். கார்கள் தங்கள் ப்ளாஸ்டிக் குச்சி விரல்களால் கண்ணாடியை துடைத்தபடி ஓடின. ஜெர்கின் வாலாக்களும்,…

கவிதைகள்

காவல்

தாயுமானவன் மதிக்குமார் விற்பனைக்காக துகிலுரிக்கப்பட்டு விலைமாதர்களாக வீட்டுப்பெண்கள். சதுர அடி விற்பனையில் சமாதியான விளைநிலங்கள் ! ஆவின்பால் ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட வீட்டுத்தொழுவங்கள் ! பதப்படுத்திய பாலின் ராசியால் மறந்துபோன சீம்பால் ருசி ! பாதாளத்தில்…

நீள் வழியில்

சத்யானந்தன் தேடிச் சென்றவன் விருப்ப விடை உரிமையை நிலை நாட்ட இயலும் மடிக்கணினி கைபேசி இங்கித விதிவிலக்குப் பெற்றவை வரவேற்பு அறை பாதுகாப்பின் இறுதிக் கோடு தலையசைப்புடன் எழுந்தேன் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாள்…

நிலை மயக்கம்

ஸ்வரூப் மணிகண்டன்  நிலா தெரியாத இரவில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். பின் நிலவு தெரிந்த பொழுதில், எண்ணி முடித்த நட்சத்திரங்களைப் பறித்து நமது தோட்டத்தில் நட்டு வைத்தோம். விரிந்து நிற்கும் நட்சத்திரங்களின் வாசத்தில் மயங்கி நின்றது…

எல்லா அப்பாக்களிலும் தெரியும் என் அப்பாவிற்காக !!!

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழிப் பாதையின் குறுக்காக சர சர வெனக் கடந்த போது, வேகச் சீற்றத்துடன் தலை குத்தி வழிந்த போது, சாரல் மறைத்த பார்வையில் சாலை…

வார்த்தைகள்

ருத்ரா சிலருக்கு ஆழ்கடல் முத்து. பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள். வாளின் காயம் ஒன்றுமில்லை. வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும். பேசவேண்டும் என்று மூளை சமுத்திரத்தில் இறங்குமுன்னமேயே ஒரு பெரிய சுநாமியாய் வந்த…