க. அசோகன் ஏதோ இன்று நான் போகவேண்டிய தூரம் ரொம்பவும் தொலைவாகத் தோன்றியது எனக்கு.
ஸிந்துஜா சமீபத்தில் படித்த ஒரு புத்தகம்: “கு.ப.ரா.கதைகள்”. அடையாளம் வெளியீடு. உள்ளே நுழையும் போதே “ஆய்வுப்பதிப்பு” என்று முன்னெச்சரிக்கிறார்கள் ! கு.ப.ரா. கதைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்துதொகுப்பை அளித்திருக்கும் திரு சதீஷ் பாராட்டுக்குரியவர். இக் கதைகள் படைப்பாளியின் கலையாழம் பற்றிய பிரக்ஞை , மனித மனங்களின் இடையே ஊடாடும் உணர்வுகளின் மீதான நுண்ணிய அவதானிப்பு, பெண்களிடம் கொண்ட எல்லையற்ற பரிவு ஆகியவற்றைக் கு.ப.ரா.கொண்டாடினார் என்று தெரிவிக்கின்றன. இவரைக் குருவாக வரித்துக் கொண்ட தி. ஜானகிராமன் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதினர்: “ராஜகோபாலனைப் போல ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகுகால ஆசை. அது […]
கடல்புத்திரன் நாலு அடுத்த நாட்காலை, கனகன் நண்பர்களுடன் வாசிகசாலையில் வீரகேசரி பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த போது லிங்கனின் ஆள் ஒருத்தன் வந்தான். “கூட்டத்திற்கு உங்களை உடனடியாக வரட்டாம்” என்று அன்டனுக்கும் நகுலனுக்கும் செய்தியை தெரிவித்தான். “கனகன் உன்ரை சைக்கிளை ஒருக்காத் தாரியோ” என்று அன்டன் கேட்டான். நகுலனிடமும் சைக்கிள் இருக்கவில்லை. வாசிகசாலைக் குழு அடிபட்ட பிறகு இயக்கத்துக்கு உதவுவதை வெறுப்பாகப் பார்த்தது. “கொண்டு போ என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்தான்’ முந்தின மாதிரி இருந்தால் வளர்ந்தவனாய் […]
வாய்எழப் புகைந்து கீழ்வயிற்றெரிந்து மண்டுசெந் தீஎழுக் கொளுந்திஅன்ன குஞ்சி வெஞ்சிரத்தவே. [121] [மண்டுசெந்தீ=மிகுதியான பசி நெருப்பு; கொளுந்தி=எரிவது;குஞ்சி=தலைமுடி’] பேய்களின் அடிவயிற்றில் பசித்தீ பற்றி எரிகிறது. அது வாய்வழியே வெளியேறுவது போலத் தோன்றுகிறது. அப்பேய்கள் சிவந்த செம்பட்டை நிறமுடைய தலைகளைக் கொண்டிருப்பனவாகும். ===================================================================================== புரண்டு போத வேரி வாரி போன போன பூமிபுக்கு இரண்டு போதும் உண்டும் உண்டிலாதபோல் இருப்பவே [122] [வேரிவாரி=மதுக்கடல்; புக்கு=சென்று] பேய்கள் மதுவானது கடல் போல […]
கண்ணம்மா மனித குல வரலாறு பல நூறாயிரம் ஆண்டுகளை தன்னகத்தே கொண்டது. இதில் மனிதன் என்பதும் அவன் கொண்ட செயல் என மார்தட்டிக் கொள்வதும் மிக மிக குறுகியது. நூற்றாண்டு நிகழ்வுகள் என மனித இனம் நினைகூறுவது, அறிவியல் கண்டுபிடிப்புகள், மாபெரும் சமுதாய மறுமலர்ச்சி, பேரழிவுகள் ஆகியவனவற்றையே. பேரழிவுகளில், ஊழிப்பேரலை, பஞ்சம் மற்றும் நோய்தொற்று ஆகியவை புரட்டிப் போட்டிருக்கிறது. ஒவ்வொரு பேரழிவிற்குப் பின்னும் மனிதர்களின் வாழ்க்கை முறை மாறுவது திண்ணம். அதிலும் தோற்று நோயால் […]
வே.ம.அருச்சுணன் -மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும், ‘அப்பாடா…!’ பெருமூச்சு விடுகிறேன். இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும் விடுமுறை. இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று, மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா…கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன். இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் […]
மஞ்சுளா ஒரு சூரியனையும் ஒரு சந்திரனையும் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நாளின் படகில் எந்த தேசம் கடந்து போவேன்? ஒரு பகலையும் ஒரு இரவையும் கடந்து கொண்டே பட படக்கும் நாட்காட்டியை கிழித்துப் போடுவதை தவிர -மஞ்சுளா -மஞ்சுளா
1.பாழ் இந்தக் கதவுகள் தாமாகத் திறந்து தாமாக மூடிக் கொள்வன. வெட்ட வெளியில் அலையும் காற்று கதவின் மீது மோதி போர் தொடுப்பதில்லை. தானாகத் திறக்கும் போது சுதந்தரமாய் நுழைந்தால் போச்சு என்ற திடத்துடன். இந்தக் கதவுகளுக்குப் பின்னால் விரிந்து கிடக்கின்றன பெரிய கூடமும் அகலமான அறைகளும். அன்றொருநாள் தவழ்ந்த குழந்தையின் உடல் மென்மை கூடத்துத் தரையில் படுத்து கிடக்கிறது. சுவர்களைத் தட்டினால் முன்னர் மாலைகளில் பரவிய பெண்களின் கீச்சொலியும் சிரிப்பும் சத்தத்துடன் வருகின்றன. இரவென்றால் […]
சி. ஜெயபாரதன், கனடா நானூறு ஆண்டுகளாய் அமெரிக்க நாகரீக நாடுகளில் கறுப்பு இன வெறுப்பு விதை முளைத்து மாபெரும் ஆலமரமாய் வளர்ந்து கிளைவிட்டு விழுதுகள் தாங்கி ஆழமாய்ப் பூமியில் வேரிட்டு உள்ளது. நாள்தோறும் கொலை நடந்து வருவது நாமறிந்ததே ! கறுப்பு இனம் விடுதலை பெற்றாலும், தற்போது கறுப்பும் வெள்ளையும் சமமல்ல ! வெறுப்பும், வேற்றுமையும் வெள்ளைக் கோமான்கள் குருதியில் இருக்குது. சட்டம் நீக்க முடிய வில்லை சமயம் நீக்க முடிய வில்லை. சமூகம் நீக்க முடிய வில்லை. ஜன நாயக அரசும் நீக்க […]
நேர்காணல் தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில் மகா திறமைசாலி அந்தப் பெண் என்று பார்த்தாலே தெரிந்தது. மேலும், அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும். அழகாகவே இருந்தாள். அவளுடைய அடுத்த இலக்கு வெள்ளித்திரையாக இருக்கலாம். அதில் எனக்கென்ன வந்தது? கேட்ட கேள்விகளுக்கான பதில்களை அவள் பொருட்படுத்தவேயில்லை. அப்படி எதிர்பார்ப்பது நியாயம்தானா என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் முகம் எதற்குப் புன்னகைக்கவேண்டும் எதற்கு ஆர்வமாகத் தலையசைக்கவேண்டும், எதற்கு ‘அடடா ‘பாவ’த்தைத் தாங்கவேண்டும், எதற்கு […]