‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 8 of 18 in the series 21 ஜூன் 2020

வாசிப்பின் சுயம் அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால் இவர் கத்தித்தீர்க்கிறார் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் எதிர்க்கருத்துகளையொத்தகருத்துகளை அத்தகைய கருத்துகள் மொத்தம் எட்டுபத்திருக்குமளவில் புத்தம்புதிய வாசகர்களுக்கு அவர்களிருவருமே உலகம் உய்யவந்த எழுத்துவித்தகர்களாய் விடுபடா இலக்கியப் பெரும்புதிர்களாய் இத்தனையத்தனை யென்றில்லாமல் அத்தனை சத்தமாய் ஆர்ப்பரிக்கும் கடலைக் குடத்திலிட்டதாய் குத்துமதிப்பாய் ஒரு நூறு வானவிற்களை பத்திரப்படுத்திவைத்திருப்பவர்களாய் பித்தேறச்செய்கிறார்கள் நித்திரையிலும் அவர்களைப் போற்றிப் பாடிக்கொண்டேயிருக்கும் குரல்களுக்குரியவர்களுக்கு ஒருகாலை தட்டுப்படலாகும் ஆழ்கடலும் நல்முத்தும் […]

தவம்

This entry is part 7 of 18 in the series 21 ஜூன் 2020

        என் தெளிவான கேள்வி ஒரு குழப்பமான சூழலில் தத்தளிக்கிறது சொற்கள் சுழலும் மனத்தில் என் கேள்விக்கான உன் பதிலை ஏந்தி மகிழக் காத்திருக்கிறேன் அதிக மௌனத்தை உருவாக்கி மலையாய்க் குவித்து வைத்திருக்கிறாய் நீ தேடும் என் கரங்களுக்கு அகப்படாமல் ஓடி ஒளிந்துகொள்ள உன் சொற்களுக்குத் தெரிந்திருக்கிறது உன் மௌனம் திறப்பதற்காக என் தவம் நீள்கிறது ….. நீண்டுகொண்டே இருக்கிறது            ————-

கிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை

This entry is part 6 of 18 in the series 21 ஜூன் 2020

    ந சி கந்தையா பிள்ளை.. இவர் தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவர் . மொழியியல் , சமூகம் , அறிவியல் என பல்துறை ஞானம் மிக்கவர். அனைத்துறைகள் குறித்தும் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார் ந.சி.கந்தையா பிள்ளைதமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படும் அளவு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்வதாக” பேராசிரியர் கா.சிவத்தம்பி  குறிப்பிட்டுள்ளார்.. தான் பிறந்து வாழ்ந்து மறைந்த தேசத்தை விட பிற இடங்களில் புகழ் வாழ்வு வாழ்வது பெருமைதான் என்றாலும் , […]

சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல…

This entry is part 5 of 18 in the series 21 ஜூன் 2020

கோ. மன்றவாணன்       சாலை நெடுகிலும் விளம்பரப் பதாகைகள் கண்ணில் பட்டவண்ணம் உள்ளன. அழகுத் தமிழை அலங்கோலப் படுத்தியே அந்த விளம்பர வாசகங்கள் உள்ளன. அதுபற்றி எந்தத் தமிழருக்கும் கவலை இல்லை. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற கண்ணதாசன் பாடல் ஒன்றில் “இங்குச் சரியாத் தமிழ் பேசறவங்க யாருமில்ல” என்று எழுதி இருப்பார். அதுபோல் “இங்குச் சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல” என்று நாமும் பாடலாம்.       அரசியல் கட்சியினர் வைக்கும் பதாகைகள் சிலவற்றுள் தமிழ் தலைகுனிந்து […]

இந்தக் கரோனா காலத்தில், இரக்கமற்ற வீட்டுக்காரன் விரட்டியடித்ததால், கைக்குழந்தையுடன் வீதிக்கு வந்த உதவி இயக்குநர் குடும்பம்

This entry is part 4 of 18 in the series 21 ஜூன் 2020

– நவின் சீதாராமன் அதிகாலை….. வழக்கத்திற்கு மாறாக எந்தவிதப் பரபரப்புமின்றி அமைதியாக இருக்கிறது சென்னை மாநகர வீதிகள். வழக்கம்போல் ஒருவர் அதன் வழியாக நடைப்பயிற்சிக்குச் செல்கிறார். எதிர் ப்ளாட்பாரத்தில், நடக்கிற காட்சியிலிருந்து அவர் கண்களை அகற்ற இயலவில்லை. முதல் நாள் அந்தத் தாய் தன் பெண் குழந்தையை குளிக்கச் செய்கிறார். இரண்டாவது நாள் கணவர் பக்கத்தில் இருந்த பாய் டீக்கடையில், வாங்கி வந்த டீயை மனைவிக்குத் தந்துவிட்டு, தன் குழந்தைக்கு பாலில் நனைத்து, பிஸ்கட் ஊட்டி விடுகிறார். […]

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

This entry is part 3 of 18 in the series 21 ஜூன் 2020

முனைவர் பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், இராணிபேட்டை மாவட்டம் –632521. தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் – periyaswamydeva@gmail.com முன்னுரை தமிழர் பண்பாட்டு வெளியில் என்றும் சிறப்புடையதாகக் கருதப்படுவது விருந்தோம்பல் ஆகும். இப்பண்பு சங்ககாலம் தொட்டு இன்றுவரை பின்பற்றி வருவதாகும். காலந்தோறும் பல்வேறு சமயம், ஆட்சிமுறை, அரசியல், இலக்கிய இலக்கண வெளிகளில் பண்பாடுகள் ஆட்கொள்ளப்பட்ட சூழலிலும் என்றும் மாறாது தொடரும் இந்த விருந்தோம்பல் பண்பினைச் சங்க இலக்கியத்தில் எவ்வாறெல்லாம் கூறியுள்ளனர் என்பதை […]

கட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)

This entry is part 2 of 18 in the series 21 ஜூன் 2020

                        எஸ்.ஜெயஸ்ரீ   பெண்ணுரிமை பற்றி முண்டாசுக் கவிஞன் பேச ஆரம்பித்தான். பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று. ஆனால், உடனடியாக இந்த தைர்யம் பெண்களுக்கு வந்ததா என்றால் அப்படி இல்லை. ஒரு இந்திரா காந்தி, ஒரு சரோஜினி நாயுடு, ஒரு ஜெயலலிதா சட்டங்கள் இயற்றும் நிலைக்கு வந்து விட்டதாலேயே, பெண்கள் முழு விடுதலை அடைந்து விட்டார்கள் என்று இந்த தேசம் முழுக்கவே ஒரு உற்சாகம் கொப்பளிக்க மேடைதோறும் முழக்கம் கேட்டது. […]

திருப்பூரில் தமிழறிஞர் புலவர் மணியன் மரணம்.

This entry is part 1 of 18 in the series 21 ஜூன் 2020

திருப்பூரில் தமிழறிஞர் மரணம் திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம்  அடைந்தார்.புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது. அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள். சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன் (1936-2020) இரங்கற்குறிப்பு             மூத்ததமிழ்ஆய்வறிஞர்முனைவர்புலவர்மணியன்அவர்கள்இன்றுகாலை 5 மணிஅளவில்திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம்வயதில்காலமானார்என்றதுன்பமானசெய்தியைமுனைவர்கே.எஸ்.கமலேஸ்வரன்அவர்கள்மூலம்அறிந்துசொல்லொணாத்துன்பமுற்றோம்.அவர்அண்மைக்காலமாகப்புற்றுநோயால்துன்புற்றுவந்தார். தஞ்சைமாவட்டம்திருமயிலாடியில்மரபுவழித்தமிழ்ப்புலமைக்குடும்பத்தில் 29.04.1936 பிறந்தமுனைவர்திருபுலவர்மணியன்அவர்கள்பெரும்புலவர்ச.தண்டபாணிதேசிகரிடம்தமிழ்கற்றபெருமையினர்.அவருடன்இணைந்துஅக்காலத்தியேசங்கஇலக்கியஅகராதியைவெளியிட்டபுலமையாளர்.அவர்தொடர்ந்துசிலம்புக்கும்மணிமேகலைக்கும்அத்தகையகருவிநூல்சமைத்தவர்.தொடர்ந்துஅவர்கள்பேராசிரியர்வ.ஐ.சுப்பிரமணியனார்வழிகாட்டச்சங்கஇலக்கியவினைவடிவங்கள்என்றஅரியஅகராதித்தொகுப்பைச்செய்துசங்கஇலக்கியமொழிக்குஅரியஒருகருவிநூலைப்படைத்துத்திருவனந்தபுரம்திராவிடமொழியியல்கழகம்வழிவெளியிட்டார்..தொடர்ந்துஅவர்அருட்செல்வர்நா.மகாலிங்கம்ஆதரவில்தேவாரம்சொல்லகராதி,அருட்பாஅகராதி,திருமந்திரஅகராதி,ஒன்பதாம்திருமுறைஅகராதி,பத்தாம்திருமுறைஅகராதிஎன்றுகருவிநூல்பணியில்முனைந்துசெயல்பட்டுப்பலஅரியகருவிநூல்களைவழங்கியவர்.அவர்அரிதின்முயன்றுதொகுத்துவெளியிட்டுள்ளகொங்குவட்டாரச்சொல்லகராதிபற்றியும்இங்குவிதந்துகுறிப்பிடவேண்டும்.அதன்திருந்தியபதிப்பொன்றைத்தான்இறக்குந்தறுவாயிலும்கவனமுடன்வெளியிட்டதைநாம்மறக்கமுடியாது.அவர்தயாரித்துள்ளபதினொராந்திருமுறைஅகராதிஅருட்செல்வர்மகனார்திரு.ம.மாணிக்கம்அவர்கள்ஆதரவில்அண்மையில்வெளியாகியிருக்கிறது.அவர்தமிழ்ப்பணிக்காககற்பகம்பல்கலைக்கழகம்முனைவர்பட்டம்வழங்கியசிறப்புடையவர்.பலநல்லஆராய்ச்சிக்கட்டுரைகளையும்எழுதியவர்புலவர்மணியனார்அவர்கள்.துணைவியைஇழந்தமுதுமைத்துன்பத்திலும்தமிழைத்துணையாகக்கொண்டுவாழ்ந்துவந்தார். வைணவஇலக்கியமரபில்நாலாயிரம்முதலியதோத்திரப்பாடல்களுக்குஉரைமரபுசைவத்தில்வேரூன்றவில்லை .எனினும்இருபதாம்நூற்றாண்டிற்குப்பின்இந்நிலைமாற்றமடைந்தது.திருவாசகம்போன்றவற்றைபோப்போன்றவர்கள்மொழிபெயர்த்தபின்தமிழர்களும்உரைமுயற்சியில்இறங்கினர்.பண்டிதமணிகதிரேசஞ்செட்டியார், திருவாசகமணிபாலசுப்பிரமணியன்போன்றோரைத்தொடர்ந்துஇத்துறையில்முயல்பவர்களைக்காணலாம்.அத்துடன்செங்கலவராய பிள்ளைஅவர்களின்ஒளிநெறிவரிசைஆழமானஒருபுலமைமரபுசைவஇலக்கியஆராய்ச்சியிலும்வளர்ந்துவருவதைக்காட்டுகிறது.அப்புலமைமரபின்கான்முளையாகத்தோன்றிப்பேரா.வ.ஐ.சுப்பிரமணியம்போன்றவர்கள்வழிப்புதுநெறிகளைஏற்றுத்தமிழ்ப்புலமைமரபைச்செழுமைப்படுத்தியவர்புலவர்மணியன்என்றமணியானபுலவர்மணிஅவர்கள்.ஆராய்ச்சிக்குஉரியஅரியகருவிநூல்களைஉருவாக்குவதுஎன்றஅடிப்படைத்தமிழாய்வைவளப்படுத்தியவர்அவர்.நிறுவனஆதரவு ,அரசுஆதரவுகிடைக்காமல்நல்லதமிழறிஞர்கள்திருமடங்களையும்புரவலர்களையும்நாடிச்சென்றுதம்புலமையைவெளிப்படுத்தமுயன்றுஉரியசிறப்புக்களைதக்கநேரத்தில்பெறாமற்போனவரலாற்றிற்குச்சொந்தக்காரர்மணியனார்அவர்கள். சோழவளநாட்டில்பிறந்திருந்தாலும்கொங்குவளநாட்டைத்தன்தாயகமாகக்கொண்டுஅவர்கொங்குநாட்டில்விஜயமங்கலம்போன்றஇடங்களில்தமிழாசிரியராகப்பணியாற்றிப்பணிநிறைவில்அவர்கோவையில்குடிபுகுந்துஆற்றிவந்ததமிழ்ப்பணிகளைநினைவுகூர்ந்துஅவருக்குச்சிறப்புச்செய்வதுகொங்குமண்ணின்மாண்புக்குத்தக்கது. அவர்மறைவுதமிழாய்வுக்குப்பேரிழப்பு .அவரைஇழந்துவாடும்அவர்குடும்பத்தார் ,நண்பர்கள்ஆய்வாளர்கள்முதலியஅனைவருக்கும்ஆழ்ந்தஇரங்கல்கள்.அவர்உயிர்இயற்கையில்கையில்அமைதியாகஉறங்கட்டும்.- டாக்.கி.நாச்சிமுத்து குறிப்புகள்