கிழவனும் குமரியும் ஒரு ஊரில் காமாதுரன் என்றொரு கிழட்டு வியாபாரி இருந்தான். அவன் மனைவி இறந்து போய்விட்டாள். அவனுக்குக் காமத்தால் அறிவு மழுங்கி விட்டது. நிறையப் பணம் கொடுத்து ஒரு ஏழை வியாபாரியின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அந்தப் பெண்ணுக்கு ஒரே துக்கமாயிருந்தது. அந்தக் கிழட்டு வியாபாரியை ஏறெடுத்துப் பார்க்கவும் அவளுக்கு முடியவில்லை. அது நியாயந்தானே? இறந்த சடலங்களைக் கொலையாளி எறிந்து விட்டதால் வெள்ளெலும்புகள் நிறைந்து கிடக்கும் ஒரு கிணறு போலத்தான் தலைநரைந்த பேர்வழிகளும் காணப்படுகிறார்கள். […]
சிறகு இரவிச்சந்திரன். சினிமாவுக்கான கோணங்களைக் கொண்டு, ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுத்தால் எப்படியிருக்கும்? இந்தப்படத்தைப் போல் இருக்கும். அப்படி வரும் எண்ணத்தை மனதை விட்டு பிடுங்கி எறிய முற்பட்டாலும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியை முறியடித்து விடுகிறார், க்ளோஸப்பில் முகம் காட்டி, டி டி எஸ்ஸில் குரல் காட்டி. ஒரு சராசரிக் கதையைத், தேர்ந்த நடிகர்களே, இன்னொரு தளத்துக்குக் கொண்டு போவார்கள் என்று, திடமாக நம்புபவன் நான். அதே சமயம், ஒரு திறமையான இயக்குனர் பளிச்சிட, தேர்ந்த நடிகர்கள் […]
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” – திருவள்ளுவர் இந்த ஜூன் மாதம், சென்னை நகரம் நான்காவது முறையாக தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (Lesbian, Gay, Bisexual, Transgender) ஆதரிக்கவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் எங்களின் பாலின மற்றும் பாலியல் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடுவதே ஒரு மாத காலம் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் நோக்கம். இந்தியாவில் முதல்முறையாக 1999 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வானவில் விழா கொண்டாடப்பட்டது. […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நம்பிக்கை விதைத்த கவிஞர்கள் எந்த ஒரு காலத்திலும் படைப்பாளன் சமுதாய மக்களுக்கு அவநம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில் தனது படைப்புகளை படைத்தல் கூடாது. அவ்வாறு படைத்தால் அப்படைப்பாளன் அச்சமுதாயத்திற்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். விரக்தியான நிலையில் மனச்சோர்வடைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விதத்தில் படைப்புகளைப் படைத்து, மக்களை வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும். இது ஒவ்வொரு படைப்பாளனுடைய கடமையாகும். நல்ல கவிஞர்களுக்கான அடையாளமாக நம்பிக்கை […]
கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை அத்துனை சிறிய இரும்புப் பொருட்களும் தயார் செய்கிறார்கள். அம்பத்தூர் கிளையில் கட்டடங்கள் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நவீன தொழில் முறையில் இராட்சச இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கியிருந்தன. இன்று புதிதாக கட்டப்படும் ஷெட்டிற்கு மேலே சிமெண்ட்டு அட்டை போடுவதற்காக இரும்பு கம்பி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. 30 அடியில் நெடிதுயர்ந்த கட்டிடம். நெருப்பில் வேலை […]
தர்மத்தில் கொஞ்சம் சுயநலம் குற்றமில்லை வியாபாரத்தில் கொஞ்சம் பொய் குற்றமில்லை சீரான நலத்தில் சில்லரை நோய்கள் குற்றமில்லை வளமான பயிரில் கொஞ்சம் களைகள் குற்றமில்லை களிப்பில் கொஞ்சம் கவலைகள் குற்றமில்லை விசுவாசத்தில் கொஞ்சம் விளம்பரம் குற்றமில்லை நட்பில் சில முட்கள் குற்றமில்லை நல்ல பேச்சில் ஒரு நச்சுச் சொல் சுற்றமே இல்லை வெள்ளத்தில் ஓடம் நல்ல சொல் ஓடத்துக்குள் வெள்ளம் நச்சுச் சொல் அமீதாம்மாள்
எப்போதும் இல்லாத முன்னிரவு… முடிவெடுப்பதுதான் இப்பொழுது முக்கியம் எனப்பட்டது எனக்கு. இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்காக எனக்கு நானே கூனிக்குறுகும் தருணம். எனக்குள்ளே திமிர்ந்த ஏகப்பட்ட கேள்விகள் வல்லாயுதங்களோடு வரிசைபிடித்து நின்றன. இருட்டுக் குகையிலிருந்து வெளிப்படும் பறவை வாயிலிலிருந்து உலகைத் தரிசிப்பதற்கு முன், அந்தத் திருப்பத்தில் புதிய உலகைக் குறித்து ஏற்கெனவே ஒரு கனவு கண்டிருக்குமே, அது போலத்தான். இப்பொழுது ஊரடங்கிய அர்த்த இராத்திரியில்… யாவும் வெறிச்சோடிக் கிடக்கின்ற இந்த நிசப்தத்தில்… எனது பழைய வாழ்க்கை ஞாபகத்திற்கு […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]
++++++++++++++++++++++++++++++++ காதல் சமப்படுத்தும் இதயங்களை ++++++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தீவிர வலிபோல் தாக்கியது என் ஆத்மாவை உன் கீதத்தின் இசை ! என் இதயம் எப்படித் துடித்தது என்று அறியும் இதயம் மட்டுமே ! பற்றிக் கொண்டு உன்னை பகல் இரவாய்க் காத்து வருகிறேன் உற்று உன் முகம் நோக்கி முற்றுகை செய்யும் என் விழிகள் ! உனக்காகத் தான் செய்கிறேன் உந்தும் தாகம் அதிகம் வழிபட்டுச் செய்யும் அவசியம் பெரு மகிழ்ச்சியில் […]