இரா முருகன் பொது யுகம் 5000 புறப்படுங்கள். மூன்றாம் நூற்றாண்டு சென்றடைவீர் இருவரும். நீலன் மருத்துவரை நம் காலத்துக்கு அழைத்து வருக. அன்பால் அழைத்து வருக. வருவார். சென்று வருக. பெருந்தேளர் குயிலியையும் வானம்பாடியையும் அனுப்பி வைத்தார். நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் பின்னே போகும் காலப் பயணம். ஒரு வினாடி நேரத்தில் ஒரு வருடம் பின்னால் போகத் தொழில்நுட்ப வசதி இருந்தாலும் அதை முழுக்கச் சார்ந்து பயணப்படாமல் மெல்ல மெல்லப் பயணப்படுவதை இந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள். […]
அன்புடையீர், 12 மார்ச் 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல் – நம்பி தமிழ்ப் பண்பாட்டின் குரல் – கிருஷ்ணன் சங்கரன் (டி எம் சௌந்திரராஜன் பற்றி) அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம் – ஜெகன்நாதன் லண்டானா கமாரா – லோகமாதேவி மயக்கமா, கலக்கமா, அறிந்ததில் குழப்பமா, அறிவதே சிக்கலா? – உத்ரா பாபிலோனின் மாபெரும் பணக்காரர் -கேஷவ் கேதார்நாத் – லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 7) மரத்தில் மறைந்தது மாமதயானை – பானுமதி ந. சக்குராவின் சலனம் – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் -20) சிறுகதைகள்: ரத்னா – வி. விக்னேஷ் […]
அண்ணாகண்ணன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.
சுப்ரபாரதிமணியன் காசு வேலாயுதன்பத்திரிக்கையாளர் என்ற முறையில் பலம் வாய்ந்தவர். பத்திரிகையாளர் என்பவர் படைப்பிலக்கியம் பொறுத்த அளவில் பலவீனமானவர். பத்திரிகை பாணியும் எழுத்துமுறையும் படைப்பிலக்கியத்தில் மரியாதை பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் பத்திரிகையாளர் என்ற முறையில் தான் பெற்ற அனுபவங்களை ஒரு அருமையான நாவலாக கொடுத்த வகையில் அவர் ஒரு பலமான பத்திரிக்கையாளராக விளங்கியதை இந்த நாவல் நிருபித்திருக்கிறது. “ பொழுது கால் மின்னல்” என்ற ஒரு கொங்கு நாட்டு பாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு நாவலை எழுதி சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னால் அவர் இந்த இரண்டாவது […]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : […]
லாவண்யா சத்யநாதன் பம்பரமாய் சுழலும்தலையுடனிருந்த ஒருவன்உதார்கள் கப்சாக்கள் சவடால்கள்மற்றும் மாயங்களைநாற்சந்திக் கூட்டத்தில்எருமைக்குரலில் பரப்பிக் கொண்டிருந்தான்.பாதி உண்மைகளை, மெய்போலும் பொய்களைவரலாறாக்கும் ஒருவன்பிரசங்கியின் கப்சாக்களில் ஒன்றின் மீதானபுகாரை நிரப்பினான் தினசரியில்.காகிதம் தினம் தின்று கழிசடையான ஒருவன்ஊர்தின்னி மாசிலாமணியை உசுப்பிவிட்டான்.கடலின் உப்புக்கும் காற்றின் நச்சுக்கும்ஆண்மலடுக்கும் ஆன்லைன் ரம்மியாடிகளின் தற்கொலைக்கும்எருமைக்குரல் காரணமென்று தீக்குச்சியைக் கொளுத்திவேலாயுதம் தண்டாயுதம் இருவரிடம் தந்தான் ஊர்தின்னி.நகர்நடுவில் தடியர் கூட்டம் கூடலாச்சு.போக்குவரத்து நின்னு போச்சுகடைகள் சேதமாச்சு. கார்கள் எரிஞ்சு போச்சு.அப்பிராணிகள் இரண்டு சவமாச்சுஉடலில் பாதி தெரியும் உடையில்கடைவீதிக்குச் சென்ற ஆண்டிக்கு […]
லாவண்யா சத்யநாதன் தாய் மகள் உறவிலும்தாவணிப் பரவும் மாறியபின் திரைகளுண்டு.வடிவும் வனப்பும்கூடதந்தை மகள் உறவில் திரைகளுண்டுசெழிப்புகூடி சேலையுடுத்தசகோதர உறவில் திரைகளுண்டு.ரத்த உறவுகளென்றாலும் அவைமனதளவிலான உறவுகளாய் மாறும்.நம் உறவு உடலும் உள்ளமும் இணைந்த உறவு.உயிருள்ளவரை மாறா உறவு.திரைகளில்லா உறவு.எச்சிலும் வேர்வையும் இன்னபிறவும் கலந்த உறவு.உன் ஒவ்வொரு மயிர்க்காலின் நினைப்பும்என்னாலறியமுடியும் உறவு.எவளைப் பார்க்கினும் ரம்பையாய் தெரியும்கிளியைவிட்டுக் குரங்கைத் தேடும்நடுவயதுக் கிறுக்கு உன்னைப் பிடித்திருப்பதைநானறியும் உறவு.மோரில் நனைத்த கரண்டியைபாலில் கலக்கமுடியாதென்றுஉன் காதைத் திருகிஉன்னைக் கட்டிப்போடும் உறவு.—-லாவண்யா சத்யநாதன்
ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும் புதிய ஓலிச்சித்திரம் வெளியீடுமார்ச் 19, 2023 மாலை 6.30 மணி அளவளாவல் தொடர்ந்து குவிகம் […]
1 மனிதன் தேடும் ‘சுகம்’ ஒரு நாணயமாகத்தான் தரப்படுகிறது அதன் மறுபக்கம் ‘வலி’ 2 வெறுப்பை விரோதத்தை கோபத்தை பகையை நோக்கி எடுத்துவைக்கும் காலடிகளே ‘விவாதங்கள்’ 3 நான் எப்படிப்பட்டவன் என்று நான் சொல்வதும் பொய் அவன் சொல்வதும் பொய் அவனவன் சொல்வதும் பொய் 4 சிவப்பு பச்சை விதி வாகனங்களுக்கு மட்டுமல்ல வார்த்தைகளுக்கும்தான் 5 பேச்சால் யாரையும் துன்புறுத்தாமல் பேசுவது ஓர் இன்பமான துன்பம் 6 நீ தந்த முதல் தேநீரைச் சுவைக்கையில் ஒரு சொட்டு […]
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ +++++++++++++ காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை இடையேபெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு உள்ளேகட்டுப் பாடுடன் இயங்கியும்நிறுத்தம் அடைந்தும்விட்டு விட்டு வேலை செய்வது !வெளிக் கருவிலேகனல் குழம்பைச் சமைத்துக்கொதிக்க வைக்குது ! கனல் குழம்புகுவல யத்தைக்குத்தூசி போல் குடைந்துபீறிட்டெழும் எரிமலைகள் !தாறு மாறாய்ஏறி, இறங்கி ஊர்ந்திடும்தாரணியின் குடல் தட்டுகள் !அங்கிங் கெனாதபடிபொங்கிப் பீறிடும்பூதக் கனல் எரிமலைகள் […]