ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த சிறப்பான பள்ளியாக விக்டோரியா உயர்நிலைப் பள்ளி திகழ்ந்தது. அதில் ஆனந்தன் மாணவன். கேன் எங் செங் பள்ளியில் சபாபதி பயின்றான். உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியில் கோவிந்தசாமி மாணவன். இவர்கள் மூலமாக முதலில் எங்கள் நான்கு பள்ளிகளுக்கிடையில் சிறப்பான பட்டிமன்றம் நடத்தி சரித்திரம் படைத்தோம். அதன் செய்தியை தமிழ் முரசில் வெளியிட்டோம். அதைப் பார்த்த மற்ற ஆங்கிலப் பள்ளி தமிழ் மாணவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டனர். அவ்வாறு மாணவர்களிடையே […]
கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் மாவட்டக்காரர் என்பதில் எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் பெருமை உண்டு. அவர் மதுரைப் பக்கத்துக் கொச்சைத் தழிழில் படைத்த கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப் போர் ஆகியவை அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் இனங்காட்டின என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அவர் ஊரான வடுகபட்டி எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஊராகும். போற்றுதலுக்குரிய இந்நாவல்களை வைரமுத்து படைப்பதற்குப் பல நாள்களுக்கு முன்னால் கவிஞர் அமரர் வாலி அவர்களைப் பற்றிய கட்டுரை […]
பேரா. க. பஞ்சாங்கம். புதுச்சேரி. 90030 37904 வேறெந்த இலக்கிய வகைகளை விடவும் கவிதை அதிகமாக, அதை எழுதுகின்றவரின் சுயம் சார்ந்தது. அந்த எழுதுகின்றவரின் சுயம் வேறெதையும் விடக் கூடுதலாக தான் பிறந்து வளர்ந்த மண் சார்ந்தது. ஏனெனில் மண் உற்பத்தி செய்த உச்சக்கட்ட உயிர் என்றால் மனிதனைத்தான் சொல்ல வேண்டும். மனிதர்களுக்குள்தான் மண்ணிலிருந்து விளையும் அத்தனையும் ஒன்றுவிடாமல் ஒன்றாய் கூடிக் கிடக்கின்றன. ஓயாமல் வினைபுரிந்த வண்ணம் இருக்கின்றன. இதன் விளைவாக மனிதர்களும் படைப்பூக்கம் பெற்று, […]
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். ”பங்கயக் கண்ணான்” வளவ. துரையன் உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 50.அமெரிக்காவின் கவிதை மேதையாகத் திகழ்ந்த ஏழை……… என்னங்க பேப்பரும் கையுமா என்னமோ எழுத ஒக்காந்துட்டீங்க… என்னது கவிதை எழுதப் போறீங்களா… திடீர்னு என்னாச்சுங்க ஒங்களுக்கு…. என்ன நான்தான் கவிதை எழுதக் கத்துத்தரணுமா…,இங்க பாருங்க கவிதைங்கறது கத்துக்கிட்டு வர்ரதில்ல…அது தன்னாலேயே வர்ரது…பாரதிகூட, “உள்ளத்து உள்ளது கவிதை இன்ப ஊற்றெடுப்பது […]
ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20401015&edition_id=20040101&format=html ) எனக்குப் பிடித்த கதைகள் -92- மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் “கேதாரியின் தாயார்”- பாவண்ணன்- அந்தணர் குல வழக்கப்படி ஒரு விதவைக்கு மொட்டையடித்து வெள்ளைப் புடவை உடுத்தச் செய்யும் பாரம்பரியத்தை எதிர்க்கும் கதை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401011&edition_id=20040101&format=html ) ஜனவரி […]
ஹரி இருள் அவர் மீது வகைப்படுத்த முடியாத கோரத் தாக்குதலை தொடுத்துக் கொண்டிருந்தது….அதை சிறிதும் மதிக்காதவர் போல சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொள்கிறார்.கடைசி சிகரெட்…கடைக்குப் போய் வாங்கி வர வேண்டும் என நினைத்த போது சோம்பலாக இருந்தது. பக்கத்துக் கடையில் கோல்டு பில்டர் தான் கிடைக்கும்.அவரது லைட்ஸ் சிகரெட் வாங்க மெயின் ரோட்டுக்குத் தான் செல்ல வேண்டும்.அவசரத்துக்கு அரைப்பாக்கெட் கோல்டு பில்டர் வாங்கிக் கொள்கிறார். தானே தனக்கு நிர்பந்தப்படுத்திக் கொள்கிற “அவசரத்”தை நினைக்கும் போது தனக்குள் மிகப் […]
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், கிள்ளிப்பாலம், திருவனந்தபுரம்-695002 அன்புடையீர், ஆண்டுதோறும் நடைபெறும் “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா 26-4-2014 சனிக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில் கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது.அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம். கிருஷ்ணவேணி ஹரிலால் மு.முத்துராமன் செயலாளர் தலைவர் நிகழ்வன தமிழ்த்தாய் வாழ்த்து; தலைமை &வரவேற்புரை திரு.முத்துராமன்,சங்கத்தலைவர் விருது பெறுவோர் அறிமுகம்; நடுவர்கள் “ நீலபத்மம்”; திரு சாந்தாராம், ஐ.பி.எஸ். […]
‘நாடகங்களின் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘சிங்கையில் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தரமுடியுமா? எங்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியுமா?’ தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் அயல்நாடுகளில் தமிழ்க்கல்வித் துறையிலிருந்து அன்பு அழைப்பு. ஏற்றுக்கொண்டேன். உற்றாரையும் உடன்பிறந்தோரையும் பார்க்கலாம். ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்பது போன்ற வாய்ப்பு. தயாரானேன். பயணச்சீட்டு, விசா, கருத்தரங்கிற்கு கட்டுரை எல்லாம் தயார். முஸ்தபா கடையில் சில பேனாக்கள், மிட்டாய்கள், ரொட்டிகள், சில துணிகள் வாங்கிக்கொண்டு வெளியேறினேன். […]
தேர்தல் ஜுரம் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், (துர)அதிருஷ்ட வசமாக நாம் எதிர்பார்க்காத சில அரசியல் ‘ தல ‘ கள், தமிழகத்தின் அரியணையை அலங்கரித்தால் என்னாவாகும் என்று ஒரு ஏடாகூடாமான கற்பனை. இது சிரிப்பு பக்கம்.. நத்திங் சீரியஸ்! பசுமாடும் தீவனமும் போல், இணைபிரியாமல் வாழும் லல்லுவும் ராபரியும் ( இந்திப் பெயர்.. ஆங்கிலம் என நினைத்து அதிக கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் அன்பு வாசகர்களே!), தமிழ்நாட்டின் இணை முதல்வர்களாக பங்கேற்கும் கோலாகல திருவிழா, புளியம்பட்டியில், மாடு […]