முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது. பெண்கள் அணியும் புறப்பொருள்கள். கற்புடைய பெண்கள் அவற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது.ஆனால் கூந்தலோ, அவள் பிறக்கும்போதே அவளுடன் சேர்ந்தே பிறந்து, அவள் வளரும்போது தழைத்து நீண்டு அவளுடனே சேர்ந்து வளர்ந்து அவள் முதுமை அடையும் காலத்து தானும் நரைத்து அவளுடனே சேர்ந்து மறையும் […]
திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை இணைந்து நடத்தும் குறும்படப்போட்டி அனைவருக்கும் கல்வி என்னும் மைய கருத்தை வலியுறுத்தும் குறும்படங்கள்(CD மற்றும்DVD) வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு ரூபாய் 15000/ இரண்டாம் பரிசு ரூபாய் 10000/ மூன்றாம் பரிசு ரூபாய் 7000/ தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டு பரிசுக்குரிய குறும்படங்கள் தெரிவு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் குறும்படத்தின் இயக்குனர்கள் அனைவரும் திரையிடலின் போது கௌரவிக்கப்படுவார்கள். குறும்படங்கள் அனுப்ப கடைசி […]
Out Of My Deeper Heart – கலீல் ஜிப்ரான் பவள சங்கரி புள்ளொன்று விண்ணேகியது எம் ஆழ்மனதிலிருந்து. உயர உயரப் பறப்பினுமது பரந்து,ப்ரந்து வளர்ந்தது. முதன்முதலில் தூக்கணாங்குருவி போன்றிருந்த அது பின் ஓர் வானம்பாடியாகவும், அதன்பின்னோர் கழுகாகவும், வசந்த மேகமுமாக ஆனதோடு விண்மீன்களின் சுவர்கத்தையும் நிறைத்தது. விண்ணோக்கிப் பறந்ததோர் பறவை எம் இதயக்கூட்டிலிருந்து. பறக்கும் தருணமதில் பெரிதாக மழித்தெடுப்பினும் விலகவில்லையது, எம் இதயத்திலிருந்து. ஓ எம் விசுவாசமே, எம் மூர்க்க ஞானமே, […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “ஜீவனி” காரியாலயம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழியும் இல்லாத அனாதைப் பெண்களுக்கு, துன்புறுத்தல் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்ட பெண்களுக்கு அங்கே புகலிடம் கிடைத்து வந்தது. படிப்பறிவு இல்லாத அப்பாவிப் பெண்களுக்குக் கூட அங்கு இடம் உண்டு. அவர்களுக்கு ஏதாவது தொழிலில் பயிற்சி அளித்து, தம் கால்களில் தாம் நிற்கும் வரையிலும் அவர்களைப் போஷித்து வந்தது “ஜீவனி.” ஜீவனியின் காரியதரிசி பாரதிதேவி. அவளுடைய […]
சோ.சுப்புராஜ் முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ” சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மத்தியான வேளை; வேலைத்தளம் இயந்திர இரைச்சலும் மனிதக் கூச்சலுமின்றி அமைதியாக இருந்தது. சாப்பிட்டு முடித்த வேலையாட்கள், சிலர் அங்கங்கே உட்கார்ந்து பழமை பேசிக் கொண்டும், பெரும்பாலோர் மணலிலும் தரையிலுமாய்ப் படுத்துக் கண்மூடியும் கிடந்தனர். அக்கௌண்டென்ட் மணிசேகர் ஓரமாய் நின்று […]
(1) கனவின் மேல் கல் விழாமல் வெயிலையும் வெட்டவெளியையும் சுருட்டிக் கொண்டு ஒரு மூலையில் படுத்துக் கிடக்கும் நாய் உறங்கித் தீர்க்கும் தன் பிற்பகல் தனிமையை. நாயின் கனவைச் சுடாமல் எப்படி மெல்லச் சூரியன் சாய்ந்து கொண்டிருக்கிறான்! உன் கனவு போலத் தான் நாயின் கனவும் தனித்தது. முடிந்தால் கனவின் மேல் கல் விழாமல் நாய் மேல் கல்லெறிந்து பார் மனிதா! (2) இந்தப் பொழுதைப் பறித்து வேலியை மீறி வெளியே சிரிக்கும் பூவைப் பறிக்கவும் மனமில்லை. […]
ஒளி பட்டுத் தெறிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி சுமந்துவரும் விம்பங்கள் பற்றி மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும் சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன தரை,சுவர்,தூண்,கூரையெனப் பார்த்திருக்கும் அனைத்தும் வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின் உணர்வுகளையும் அத்தனை ரகசியங்களையும் அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை ” ஆதித்யா, உன் தனிமை பேசுகிறேன். கேட்கிறாயா? ” ” நான் தனித்தவனாக இல்லை. இந்தச் சாலையோர மஞ்சள் பூக்கள், காலையில் வரும் தேன்சிட்டு, புறாக்கள், கிளிகள், மைனாக்கள், எனது […]
பி.லெனின் முனைவர்பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613010 தோற்றம் மொழியின் கூறுகளை விளக்குவதில் இலக்கணம இன்றியமையாத இடம் வகிக்கின்றது. ஒரு மொழியின் கூறுகளைக் காத்து அமைப்பு வழியில் நெறிப்படுத்துவதில் இலக்கணத்தின் பங்கு மிகப் பெரிது, ஒவ்வொரு மொழிக்கும் அடிப்டபடையாய் இருப்பவை ஒலிகள், ஒலி இன்றி மொழிகள் இல்லை. ஓலிகள் எழுத்து என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இவ்வெழுத்து பொதுவாக ஒலி வடிவத்தையும் வரி வடிவத்தையும் குறிப்பதாக அமைகிறது, அவ்வெழுத்து எழுத்தியல் சிந்தனையென்று […]
இரண்டுமே பெண் சாயல் கொண்ட ஆண் வேடம். ஆனால் பிரகாஷ்ராஜின் மகாராணி கொஞ்சம் பச்சை. இருக்குமிடம் அப்படி. அதுவமல்லாமல் வசந்த் ( இயக்குனர் ), அவரை திருநங்கையாகவே காட்டுகிறார். இதில் ஒரு சமூக வக்கிரம் கூட உள்ளது. திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், அதை ஒரு திருநங்கையே ‘மேடமாக’ இருந்து நடத்துவதும் கொஞ்சம் ஓவர்தான். கதை நாயகன் அப்பு (பிரசாந்த்- நல்ல நடிகர், காணாமல் போய் விட்டார்) ஹீரோயிசம் எல்லாம் காட்டவில்லை. தான் விரும்பிய பெண்ணை பணத்தைக் […]
டாக்டர் ஜி.ஜான்சன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னைத் தட்டி எழுப்பினாள் மாரியாணி. அவரசரத்தை உணர்ந்தவனாக எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கியவாறு, ” என்ன? எமெர்ஜென்சியா? ” என்று ஆங்கிலத்தில் கேட்டேன். கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அப்போது அதிகாலை இரண்டு மணி. ” மெல்ல பேசுங்கள். அங்கே வந்து பாருங்கள் . ” என்றவாறு முன் அறை நோக்கி நடந்தாள். நான் பின்தொடர்ந்தேன். வெளியில் முனகல் சத்தம் கேட்டது. என்னவாக இருக்கும் என்று அறிய வெளியே எட்டிப் பார்த்தேன். கிளினிக் வராந்தாவில் […]