வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் வாழ்வியல் வரலாற்றை முழுமையாக எழுதப் புகுந்தால் ஓர் ஆழ்கடலின் ஆய்வு அறிக்கையாகிவிடும். முத்துச் சிப்பிகள் என்று அள்ளி வந்தோமானால் கூட சில சிப்பிகளில் மட்டுமே முத்துக்கள் காணப் படும். மற்றவைகள் வெற்றுச் சிப்பிகளாக இருக்கும்.. சமுதாயப் பிரச்சனைகளை என்னால் முடிந்த அளவு எழுதினேன். சாதி மதம், அரசியல், இயக்கங்கள், ஊழல், வன்முறைகள் இந்தப் பட்டியல் நீளமானது. எழுத்தால், பேச்சால் சீர்திருந்தும் நிலையைக் கடந்து […]
வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் […]
கதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். அதைவிட அதிகம் பிடிக்கும் கடிதங்கள் எழுதுவது. கதை எழுதினால், அது அச்சாக பத்திரிகையைத் தேடவேண்டும். அப்படியே கதை அச்சில் வந்தாலும் அதை எத்தனை பேர் படித்து ரசிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. சில கதைகள் எவராலும் படிக்கப்படாமலே கூடப் போகலாம். ஆனால் கடித விஷயம் அப்படி அல்ல. அதைப் பெறுகிறவர் அதைப் படித்தே தீர்வார். அவர் அதில் உள்ள விஷயங்களை ரசித்து மகிழ்கிறாரா, படித்து […]
சத்தியப்பிரியன் “மதம் என்பது மக்களின் எளிமையான வாழ்வில் ஆன்ம பலத்தையும் , நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு பதில் அவ்ர்களைச் சுரண்டுகிறது.” என்றேன். “By an elaborated fine processed way “ என்று என் நண்பன் என்னை ஆமோதித்தான். மதம் தொடர்புடைய சிறுகதை என்பதால் தன்னிலை ஒருமையில் எழுத வேண்டியுள்ளது. எங்கள் பயணம் ஒரு மோட்டார் சைக்கிளின் மீது சுட்டெரிக்கும் கத்திரி வெயிலில் பத்து கிலோமீட்டர் தூரம் நீண்டு கொண்டிருந்தது. “ கூட்டம் என்ற பெயரில் எங்கள் […]
சி. ஜெயபாரதன், கனடா (1819-1892) (புல்லின் இலைகள் –1) விடுதலைக் குரல்கள் ..! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என் மூலம் எழுவது ஆக்க உணர்ச்சி என் மூலம் உருவாகும் எழுத்தோட்ட அகராதி ! ஆதி காலத்தின் திறவுச் சொல்லை ஓதுகிறேன் ! அடையாளச் சின்னம் காட்டுவேன் குடியரசுக்கு ! கடவுள் சத்தியம், மாறாக வந்திடு மாயின் உடன்படேன் வேறு எதற்கும் ! என் மூலம் எழும் […]
தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னிடம் விடை பெறாது அவள் ஏகியதால் என் விழிகள் மறந்தன உறக்கத்தை ! நெருங்கி உன்னருகில் நான் இருந்தாலும் வருத்தப் படும் நொய்ந்து போய் இருதயம் ! தவறான போக்கில் பயண மாது எந்தன் இதயக் கரைதனில் வந்திறங்கி விட்டாள் ! அவள் தவறை அறிந்து கொண்டால் […]
யசோதராவின் பணிப்பெண் ஒருத்தி “அம்மா… தோட்டக்காரன் ஒருவன் தங்களைக் காண விரும்புகிறான்” என்றாள். அந்தப்புரத்துக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் ராணியோ இளவரசியோ அனுமதித்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். “வரச் சொல்”. ஒரு தோட்டக்காரன் இளைஞன் கூப்பிய கைகளுடனேயே பேசினான் “இளவரசியார் வாழ்க. தாங்கள் ஒரு பறவை அல்லது விலங்கு உயிர் நீத்திருந்தால் தெரிவிக்கச் சொல்லி இருந்தீர்கள். ஒரு பெரிய பஞ்சவர்ணக்கிளி இறந்து கிடக்கிறது” என்றான். “நான் வரும் வரை மாளிகை வாயிலில் காத்திரு” என்றாள். […]
பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிடுங்கச்சென்ற தமிழன்,வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைக்கும் ஒட்டகம் மேய்க்கவும் சென்ற ஆடுஜீவிதத்தமிழன் என எல்லோருக்குள்ளும் ஒரு ஒட்டுப்பொறுக்கி உண்டு. இப்போதும் கூட அமேரிக்காக்காரனுக்கு ராத்திரி இரண்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தொண்டூழியம் பார்க்கிறவனும் ஒட்டுப்பொறுக்கி தான். எப்போதும் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் அவனது ஆருடத்தில் நாடு கடத்தப்படும் யோகம் உண்டு என்பதே ஒரு சோகம். முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைசாமி அதைப் பெருமையாகச்(?)சொல்லுவார். […]
மூன்றாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2012 ஆம் ஆண்டு ( ஜனவரி 2012 முதல் திசம்பர் 2012 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 20-04-2013 *அனுப்ப வேண்டிய முகவரி தமிழ்மணவாளன் […]