எஸ் . அற்புதராஜ் பின்னால் போனவன் சுப்ரமணீ….! என்று கூப்பிட்டான். முன்னால் போனவள் திரும்பிப் பார்த்து ‘enna?’ என்றாள் கண்களால். ‘நீயா சுப்பிரமணி? நான் உன்னைக் கூப்பிடவில்லையே. ‘நான் சுப்பிரமணி இல்லை உன்னைப் பார்க்கவும்இல்லை. ‘பிறகு?’ ‘பிறகென்ன?’ “அதோ பார் சுப்பிரமணி உனக்குப் பின்னால்.” அவன் பின்னல் திரும்பினான். அவள் முன்னே வேகமாக நடந்தாள். அவன் பின்னே மெதுவாக நடந்தான்.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் சமீபத்தில் ”ஸ்டாலின் பழமொழிகள்” என்று வகை வகையாய் எழுதப்பட்டு கிண்டலடிக்கப்படுவதை பார்த்திருக்கலாம். அறிமுகமில்லாதவர்களுக்கு ஒரு அறிமுகம் சமீபத்தில் ஸ்டாலின் தமிழ் பழமொழிகளை முன்னுக்கு பின் திருப்பி போட்டு பேசி கலகலப்பை ஏற்படுத்திவருகிறார். இவர் முன்னாலும் அப்படியே பேசியிருந்திருந்தாலும் அது இப்போதுதான் சமூக வலைத்தளங்கள் காரணமாக வெளியே பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். ஸ்டாலின் முன்பும் இப்படித்தான் பேசி வந்திருக்கிறார் என்று ஆதாரம் காட்டும்வரைக்கும், இது தற்போதைய ஸ்டாலின் பேச்சில் வந்திருக்கிறது என்று வைத்துகொள்வோம். சமீபத்தில் […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ********************* http://www.dailymail.co.uk/sciencetech/article-5518639/Mars-oceans-formed-300-million-years-earlier-thought.html#v-8955831816208758607 [March 19, 2018] https://www.smithsonianmag.com/science-nature/life-on-mars-78138144/ செவ்வாய்க் கோளில் தாரிஸ் பீட எரிமலை [Tharis Volcano] மெதுவாய்த் தோன்றவில்லை, விரைவில் தோன்றியது, பூர்வீகமானது, கடல்கள் பின்னால் உருவாகின என்பது ஓர் அனுமானமே ! புதிய மாடல் மூலம், நாங்கள் சொல்வது : கடல்கள் முன்னே உருவானவை, தாரிஸ் குன்றை வடித்த எரிமலைக் குழம்புடன் கடல்நீரும் கலந்தது என்பதே. எரிமலை களே செவ்வாய்க் கோள் ஈரமாய் உள்ளதற்கு முக்கிய […]
சு. இராமகோபால் ஔவையார் என்னவோ கூழுக்குப் பாடினார் என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது அந்தக் காலம். ஆனால் இந்தக் காலத்தில் ஒரு கவிஞன் மிளகாய்க்குப் பாடிய கதை உங்களுக்குத் தெரியுமா? அவன்வேறு யாருமன்று; நான்தான்! சில நாட்களுக்கு முன் எங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சி. அதைக் கேட்டால் நீங்கள் “இப்படி நடந்ததா?” என்று ஆச்சரியப் படுவதை விட்டு, “இப்படியும் நடந்ததா!” என்றுதான் வியப்பீர்கள்! எனக்கு இரண்டு நண்பர்கள். ஒருவர் பெயர் பாலகிருஷ்ணன். இன்னொருவர் பெயர் இராஜகோபால். எங்கள் […]
ச.அரிசங்கர் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்தது. எல்லா பசங்களும் வெளிய சட்டைல இங்க் அடிச்சி விளையாடிட்டு இருந்தாங்க. நான் வெளிய போகாம உள்ளேயே தான் இருந்தேன். காலைல கிளம்பும் போதே அம்மா செல்லிதான் அனுப்பிச்சி, “சட்டைல இங்க்லாம் அடிச்சுட்டு வராத உங்கப்பா அடுத்த வருஷத்துக்குச் சட்டை எடுத்து தருவாரானு தெரியல”. கொஞ்சம் நேரம் கழிச்சி போனா எல்லாரும் போயிருப்பாங்க. பசங்க சத்தம் குறையறவரைக்கும் காத்திருந்தேன். கொஞ்சக் கொஞ்சமா பசங்க சத்தம் கொறஞ்சிடுச்சு, மெதுவா வெளியே போனேன். மைதானத்தில் கொஞ்சம் […]
எஸ்ஸார்சி அம்மா தெவெசத்துக்கு நான் தானமா குடுத்தேன். அந்த ஒன்பது அஞ்சி வேட்டிய இடுப்புல சுத்திண்டு இதோ என் முன்னாடி அந்த பிராம்ணன் நிக்கறான். அவனோடவே நான் இந்த க்ஷணம் ஓடிப் போயிடறேன்னா என்னப்பா கூத்து இது? அவள் பதில் எதுவும் பேசவில்லை.அண்ணனும் அண்ணியும் திகைத்துப்போய் நின்றார்கள்.அவளை அந்த அண்ணன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் வரன் பார்த்து ,முறைப்படி நன்றாகதான் திருமணம் செய்து கொடுத்தான்.மாப்பிள்ளையும் ஒரு ஆடிட்டர்.அது இருக்கட்டும். ‘ தெவசம் நடத்திவைக்க வந்த அந்த புரோகிதர் போயாச்சா?’ […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற உண்மை ஒரு புதுமலர் வாடி வதங்குவது போல பல கோணங்களில் நம்மை வந்தடைகிறது நட்பில் முட்கள் பூத்துச் சிரிக்கின்றன காதல் கைத்துப் போனவன் பெண்ணைச் சித்தர் சொற்களால் திட்டுகிறான் மனித உறவுகளில் துரோகத்தின் நிறம் எப்போதும் பூசப்படுகிறது வீட்டை விற்றபின் அதன் விலை மிக உயர்ந்து நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது நம் திட்டங்களின் பட்டியல் மாறி நம்மைக் கேலி செய்கிறது இழப்பு சுமையை அதிகரிப்பதும் சுமை பலவற்றை இழக்கச் […]
சுயந்தன் இளையராஜாவின் இசையின் அழகுணர்வையும், அவரின் இசை பற்றிய நுட்பங்களையும், வகைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கு பிரேம் ரமேஷ் எழுதிய “இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்” என்ற நூல் பெரிதும் உதவக்கூடிய ஒன்று. மொழிக்கும், மதத்துக்கும் மூலமாக இருப்பது இசை என்று கூறும் அதே நேரம், ‘ஒரு இசை இன்பத்துய்ப்பின் ஒரு வடிவமாக மாறுகிறதோ அப்பொழுதே அது இறைமை நீக்கம் செய்யப்பட்டுப் புலன்தன்மை பெறுகிறது’ என்ற அடிப்படையில் பழைய வரலாறுகளைக்கொண்டு ஆராய்கிறது இந்நூல். இளையராஜாவின் இசை பற்றி முதன் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 214. தங்கைகளுக்கு திருமணம் கலைமகளிடம் கடிதத்தைத் தந்தேன். படிக்கும்போது முகமாற்றத்தைக் கவனித்தேன். அதில் அதிர்ச்சி இல்லை. மலர்ச்சிதான். படித்து முடித்துவிட்டு என்னிடம் தந்தாள். ” நீ என்ன நினைக்கிறாய்?” ” உனக்கு இதில் சம்மதமா? ” அதனால்தானே உன்னிடம் கேட்கிறேன்? ” ” நான் எப்படி தனியாக அவ்வளவு தூரம் போவது?” ” அதான் நானும் வருவேனே? ” நீ அங்கேயே வேலை செய்வாயா? ” ” அதற்குதான் முயற்சி செய்யப்போகிறேன்.” ” […]