யாமினி கிருஷ்ணமூர்த்தி – 9

This entry is part 1 of 26 in the series 10 மே 2015

  நாட்டிய சாஸ்திரம் பற்றிய புத்தகங்கள் எப்படிச் சொன்னாலும், அவை எவ்வளவு முழுமையானவையானவையும், அதன் விதிகள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும் , நிருத்யம் என்பது நடனம் ஆடுபவர் செய்வதே. அவை எத்தனை புராதனமானவையாயினும், காலம் காலமாய் தொடரும் முரண்பாடற்ற சரித்திரத்தையும், மரபுகளையும் கொண்டவையாய் இருப்பினும் கூட. ஒரே இலக்கணமும், மொழியியலும் தான் ஒரு ஷேக்ஸ்பியரையும் உருவாக்குகிறது, ஒரு இடைப்பட்ட தரமுடைய கவியையும் உருவாக்குகிறது. ஷேக்ஸ்பியர் போன்ற கவி எட்டிய உயரங்களை அதன் நிறுத்தக்குறிகள் கூட மாறாமல் […]

சும்மா ஊதுங்க பாஸ் -1

This entry is part 2 of 26 in the series 10 மே 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   சிலர் தகுதி இருந்தும் தனக்கேற்ற வேலையோ, வாழ்க்கையோ கிடைக்காமல் அவதிப் படுவதைப் பார்க்கிறோம். ஆனால் உரிய தகுதி இல்லாமலே சிலருக்கு நல்ல பதவியும் நல்ல வாழ்க்கையும் அமைந்து விடுவதுண்டு. எல்லாம் அவரவர் செய்த கர்மவினையின் பலன் என்று வேதாந்திகள் சமாதானம் சொல்வார்கள். அதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் ரகுபதி. தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரின் கம்பெனி என்பதால் எந்த ஒரு திறமையும் இல்லாமலே அசிஸ்டென்ட் மேனேஜர் பதவியில் அமர்ந்துவிட்ட அதிர்ஷ்டசாலி. கிண்டி […]

மழையென்பது யாதென (2)

This entry is part 3 of 26 in the series 10 மே 2015

சேயோன் யாழ்வேந்தன்   மழையென்பது யாதெனக் கேட்கும் மகவுக்குச் சொல்வேன் நீ எனக்கு நான் உனக்கு   மழையென்பது யாதென சின்ன வயது சேயோனிடம் கேட்டால் அம்மா வடை சுடுவதற்கு சற்று முன் வருவதென்பான்   மழையென்பது யாதெனக் கேட்கும் மனைவிக்குச் சொல்வேன் வெறுத்துக் கெடுக்கும் விரும்பியும் கெடுக்கும் உன்னைப் போல்தான் அதுவும் பொய்த்துக் கெடுக்கும் பெய்தும் கெடுக்கும்   மழையென்பது யாதென என்னை நான் கேட்பேன் இறுகிக் கிடக்கும் மனித மனங்களில் கொஞ்சமாவது ஈரம் தோன்ற […]

கலப்பு

This entry is part 4 of 26 in the series 10 மே 2015

நாகபிரகாஷ் காற்றுப்பிடிப்போடான நுறைப்பு பெருக்கமாக கருதப்படும் கோடைக்கால நீர்பிடிப்புப் பகுதியில் நாம் முட்டாள் அவர்களின் மழைமேகங்களில் சாத்தானும் குடியிருக்கக்கூடும் தெய்வங்களுடன் சேர்ந்து மறைவாக நிறையச்சேமிக்கும் பெருந்தனக்காரன் வீட்டில் நீர் காவல் இலவசம் ஊர் தந்தாகவேண்டியது நண்பனின் குடுகுடு பாட்டி சாவதற்க்கு கிடைத்த அதிர்ச்சி கருநிற குடிநீர் – நாகபிரகாஷ்.

இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி

This entry is part 5 of 26 in the series 10 மே 2015

வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், […]

ஒரு கோடி மெழுகுவர்த்திகள்

This entry is part 6 of 26 in the series 10 மே 2015

சுப்ரபாரதிமணியன் வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .. அவள் நின்றிருந்த சூப்பர்மார்க்கெட் “மாலி”ன் இரண்டாம் தளம் முழுவதும் இருட்டாகி விட்டது. “ உலகம் இருண்டு விட்டது “ பூனையாய் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து “ கண்ணம்மா ..கண்ணம்மா.. “ என்றது. இந்த சமயத்தில் கைபேசியை எடுத்து பேசி விடக்கூடாது. எடுக்கவில்லையென்றால் வகுப்பில் இருப்பதாக நினைத்துக் கொள்வர்.அது சவுகரியம்.எடுத்து விட்டால் கல்லூரியில் […]

சிறுகதைகள் மூன்று

This entry is part 7 of 26 in the series 10 மே 2015

சிறுகதைகள் மூன்று 0 1.திரிபுறம் ரங்காவிற்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. ஒரு வாரமாக அவள் வீடு கலைத்துப் போட்ட குருவிக்கூடு மாதிரி இருக்கிறது. இன்று எப்படியும் திரிபுரம் மாமியைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ரங்கா என்கிற ரங்கநாயகிக்கு முப்பது வயது. அவள் கணவன் கோபாலகிருஷ்ணன் மெஷின் மேன். காலையில் ஆறு மணிக்கெல்லாம் சைக்கிளில் போய்விடுவான். வீடு திரும்ப எப்படியும் ஏழு எட்டு மணியாகிவிடும். ஊருக்கு வெளியே தொழிற்சாலை. சமையல் வேலையெல்லாம் அவளுக்கு இல்லை. எல்லாவற்றையும் தொழிற்சாலை […]

சிமோனிலா கிரஸ்த்ரா

This entry is part 8 of 26 in the series 10 மே 2015

மாதவன் ஒலிப்பதிவு கருவியை ஆன் செய்து அருகில் வைத்துவிட்டு நான் அவரிடம் கேள்வி கேட்கத்தொடங்கினேன். “உங்கள் இளமைக்காலம் பற்றி சொல்லுங்கள்” அவர் எச்சில் விழுங்கிவிட்டு பதில் சொல்லத்தயாரானார். “ஒரு மிக அழகான மலைகிராமத்தில்தான் நான் பிறந்தேன். மொத்தமாக நூறுகுடும்பங்கள் இருக்கும். எவ்விதமான மருத்துவவசதிகளுமற்ற அந்த ஊரில் நான் பிறந்தபோதே பிரசவத்தில் இறந்துவிட்டாள் என் அம்மா. என்னை வளர்த்தது எல்லாமே என் அவ்வாதான். என் அவ்வா ஒரு மிக ஆச்சரியங்களும் துணிச்சலும் நிரம்பிய பெண்மணி. என்மீது கொள்ளை பிரியம் […]

பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்

This entry is part 9 of 26 in the series 10 மே 2015

ஒரு பறவையின் ஒலித்தல் எனக்குப் பல விதங்களில் அர்த்தமாகிறது. பறக்கும் திசையைப் பறக்கையிலே தீர்மானிக்கும் அதன் பறத்தலைப் போல் எதிர்பாராது ஒலித்தலில் அதன் பரிமாணம் விரிகிறது. ஆற்றாமையாயும், ஆனந்தமாயும், துக்கமாயும், ஏமாற்றமாயும் எத்தனையோ அர்த்தங்களில் என் நிலைக்கேற்பவும் அர்த்தமாகிறது. ‘க்கீ க்கீ க்க்கீ க்க்கீ க்க்க்கீ…….’என்று துரித கதியில் ஒலிக்குங் கால் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறது. விட்டு விட்டு ஒலிக்கும் அது ஒலிக்காத இடை வெளிகளில் நான் கவனிக்கத் தவறி நழுவிய காலத்தையும் குறிக்கிறது. […]

விசுவப்ப நாயக்கரின் மகள்  

This entry is part 10 of 26 in the series 10 மே 2015

தேமொழி விசுவப்ப நாயக்கர் என்பவர் மதுரை நாயக்கர் மன்னர்களுள் ஒருவர். விஜயநகர பேரரசின் பகுதியாக இருந்த தமிழகத்தில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, விஜயநகர பேரரசின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு வரி அளித்து, முழு தன்னாட்சி உரிமை பெற்றுக் கொண்ட நாயக்கர் பேரரசின் பிரதிநிதிகளால் மதுரை, தஞ்சை, செஞ்சி பகுதியில் நாயக்க மன்னர்களின் ஆட்சி துவங்கியது. மதுரை நாயக்கர்கள் 1529 ஆம் ஆண்டு துவங்கி 1736 ஆம் ஆண்டு வரை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்தனர். […]