நிலவும் போர்ச்சூழலும் தமிழக அரசின் பேரணியும்

This entry is part 7 of 7 in the series 11 மே 2025

இந்தப் போர்ச்சூழலில் இந்திய அரசு, ராணுவத்தின் பக்கம் நிற்பதாக நம் தமிழக அரசு சென்னையில் ஒரு பேரணி நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இதை காரியார்த்த மானது என்றும், பாவனை என்றும் இன்னும் வேறாகவும் சிலர் சொல்லக்கூடும்; சொல்ல முடியும். ஆனால், இந்தப் பேரணி இன்றைய இந்திய அரசின் மீதுள்ள வெறுப்புக்கும், இந்தியா என்ற நாட்டின் மீதே உள்ள வெறுப்புக் குமான பிரிகோட்டை கவனமாக வெளிப்படுத்துகிறது. இது அவசியமானது. இந்தியா என்ற நாட்டின் ஒரு மாநிலமாக இருந்துகொண்டு எதற்கெடுத்தாலும் மத்திய […]

இரு கவிதைகள்

This entry is part 6 of 7 in the series 11 மே 2025

.பசுமையும் பதற்றமும்                    சில துளிகள் மழை பெய்தால் கூட  வந்துவிடுகின்றன  எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை  குதித்துத் தாவுகின்றன.  கும்மாளமிடுகின்றன. சிறிய முன்னங்கால்களால்  உடலைத் தாங்கும்  அவற்றின் மகிழ்வுக்கெல்லையில்லை. பழுப்பு நிறப் புள்ளிகளாய்  பாய்ந்து பாய்ந்து செல்லும். வாய்க்கால் மழைநீரில் வளைந்து வளைந்து செல்லும் வட்டமிடும் படகுகள். ஓடுகின்றன ஓடுகின்றன வாழ்வின் எல்லை நோக்கி. பார்க்கும் கண்களில்  பசுமையும் பதற்றமும்  பதுங்கிக் கொள்கின்றன. —-வளவ. துரையன்            தேடுதல்                           ஆடுகளுக்குத் தழை ஒடிப்பவன்                            கொழுந்துகளைத் தேடுவது போல […]

நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும்

This entry is part 5 of 7 in the series 11 மே 2025

நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும்  (அல்லது) கொடும் போர்ச்சூழலும் காகிதக் கிளர்ச்சியாளர்க ளும் காரியார்த்தக் கலகக்காரர்களும் …………………………………………………………………………………………………………………………………… _ லதா ராமகிருஷ்ணன் ஒரு போர்ச்சூழலைப் பயன்படுத்தி தம்மை மனிதநேய, பெண்ணுரிமை, மனித உரிமை ஆர்வலராக, போராளியாக முன்னிலைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பவர் களைப் பற்றி என்ன சொல்ல? எழுத்தாளர்கள் கூடவா இப்படி இருப்பார்கள்? ஒரு போரை உரிமைப்போர் என்று சொல்லி உயர்த்திப்பிடிப்பார்கள் -ஒரு போரை வன் முறை என்று வரையறுப்பார்கள். பல நேரங்களில், வசதிக்கேற்ப வேறு வேறு […]

இரு கவிதைகள் – 1) வாழ்வின் விரிபரப்பு 2) தன்வரலாற்றுப்புனைவு

This entry is part 4 of 7 in the series 11 மே 2025

(*சமர்ப்பணம்: சிறுமீனுக்கு) தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன் தொட்டிமீனை அந்தச் சதுரக் கணாடிவெளியினுள்ளான நீரில் சுற்றிச் சுற்றிப்போய்க்கொண்டேயிருந்ததுமூலைகளில் முட்டிக்கொண்டபடி. எதிர்பாராமல் மோதிக்கொள்கிறதா? ஏதோவொரு தெளிந்த கணக்கிலா? அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்து  குட்டிவாய் திறந்து  பின் மீண்டும் உள்ளோடி சதுரப்பரப்பின் மையத்திலிருந்த உருளையருகே சென்று  அங்கே அதற்கென்று வைக்கப்பட்டிருந்த உணவை ஓரிரு கவளங்கள் அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு மீண்டும் சதுரமாய் வட்டமிடத் தொடங்குகிறது. சமுத்திரவாசி எத்தனை சிறிய சதுரநீர்ப்பரப்பிற்குள்…. ஆனால், நானுமோர் சமுத்திரவாசிதான் – நிலம் நீராக காற்றாக – […]

குரு அரவிந்தனின்  சிறுகதைகள்  பன்முகப்பார்வை

This entry is part 3 of 7 in the series 11 மே 2025

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை. முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா பெரியகுளம், தேனி. தமிழ்நாடு. குரு அரவிந்தனின்  சிறுகதைகள்  பன்முகப்பார்வை முன்னுரை குரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது. வாழ்வியல் விழுமியங்கள் படைப்பாளர்களின் […]

எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு

This entry is part 2 of 7 in the series 11 மே 2025

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை. எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா. ஆய்வுச்சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் […]

மக்களே! 

This entry is part 1 of 7 in the series 11 மே 2025

ஓடும் நதியில்தான்  எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி  எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில்.  யோனிக்கழுவ  ஒரு கை  நீர் போதும்  கண்ணகிக்கும், மாதவிக்கும் . கோவலன்தான்  யாழை வாசிக்கின்றான் பெண்துணை தேட.  பூத்துக் குலுங்கும்  மலர்ச்சோலை  வருணப்பாக்களில்  கவிதை படுவதில்லை.  பாடும் வண்டும்  பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் பொங்கி விழும்  அருவிகளும்  காலடிச்சுவடுகளில்  ஜாதகம் தேடுவதில்லை.  ஆணோ பெண்ணோ  அனைத்து மகிழ  காமதேவன் பாடலில்  கறுப்பு வெண்மை  நிறங்கள் இல்லை.  மனோரத தேரில் ஏறி  பயணம் […]