வையவன் வெயில் விளையாடும் களத்து மேட்டில் பதரடிக்கும் போது தலை காட்டலாமே தவிர முளைக்கச் சுதந்திரமில்லை புல்லுக்கு.
இந்நிமிட குப்பிக்குள் பழைய நினைவுகளை புதிய நினைவுகளை திணிக்க திணிக்க திமிறி ஓடுகிறது அமைதி.. இந்நிமிட கொள் அளவில் வைக்க வேண்டியதை மட்டும் வைத்து எடுக்க எடுக்க -இந்நிமிடம் அடுத்த ,அதற்கடுத்த நிமிடம் .. மாற்று நிறங்களின் தறி பாவில் ஊடு நூலாக – வளைந்து புகுந்து அமைதியை நெய்ந்து தருகிறது இந்நிமிடங்கள்… – சித்ரா (k_chithra@yahoo.com)
”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வது சற்றுக் கடினம். அவர்கள் நம்மைப் போல் தான் இருப்பார்கள். ”ஒழுக்கங்கள்” பற்றி அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் தான் அவர்கள் “ஒழுக்கமானவர்கள்”. அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள் மேல் அதிக அக்கறை. அடிப்படையில் ஆண்கள் பெண்கள் எலும்புக் கூடுகள். எலும்புக் கூடுகள் ஒழுக்கமானவை. அப்படியே ஆண்கள் பெண்கள் ஒழுக்கங்கள் இருக்க வேண்டும் இப்படியெல்லாம் ஒழுக்கங்களுக்கு அவர்கள் வியாக்கியானம் இருக்கும். விளக்கிப் பதில் சொல்ல வீணாகும் நேரமென்று விமர்சனங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை ”ஒழுக்கமானவர்கள்” […]
அன்பு திண்ணை ஆசிரியருக்கும் வாசகருக்கும் வணக்கம். திண்ணை இணைய தளத்தில் வெளியான என் படைப்புகளையும் அச்சில் வந்த பிற படைப்புகளையும் tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைத் தளத்தில் வலையேற்றம் செய்திருக்கிறேன். வாசித்து உற்சாகம் தர வேண்டுகிறேன். நன்றி சத்யானந்தன்.
28. “அம்மாவும் ஜெகதீசனும் இடைக்குல பெண்மணி ஜெகதாம்பாள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்; அவர்களிருவரையும் அதிக நேரம் அந்நியபெண்மணியின் பொறுப்பில் விட்டு வைப்பதும் நல்லதல்ல. இன்னொருமுறை வருகிறேன். சாவகாசமாக உன்னிடம் சம்பாஷிக்க விஷயங்கள் இருக்கின்றன”, எனக்கூறி சித்ராங்கி செண்பகத்திடம் விடைபெற்றாள். – இதோ பக்கத்தில்தானே இருக்கிறீர்கள், ஒரு வண்டியை அனுப்பி அழைத்துவர ஏற்பாடு செய்யட்டுமா, என்ற சேடியின் வற்புறுத்தலுக்கு சித்ராங்கி கூறிய சமாதானம் அவளுக்கு நியாயமானதாகத் தோன்றியிருக்குமாவென்கிற அக்கைறையின்றி புறப்பட்டாள். வண்டிக்காரன் மாடுகளை இழுத்துப்பிடித்து, நாக்கில் சொடுக்குப்போட்டு ஏர்காலிலிருந்து சித்ராங்கின் […]
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் ஏழாண்டு நிறைவை முன்னிட்டு பாலையில் தமிழ்மாலை என்னும் விழா கடந்த 11.05.2012 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தியத் தூதரகத்தின் திட்டப்பணி உதவி தலைவர் (DCM) திரு, மனோகர் ராம், மன்னர் சவூத் பல்கலைகழகத்தில் பணியாற்றும் தமிழ் விஞ்ஞானி பேராசிரியர். மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்த இவ்விழாவில், இந்தநாள் இனியநாள் புகழ் பேச்சாளர் கலைமாமணி சுகி.சிவம், மனோதத்துவப் பேராசிரியர் முனைவர் அப்துல்லாஹ் (பெரியோன்தாசன்) ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாகப் பங்கேற்று நகைச்சுவையுடன் நன்னெறிக் கருத்துகளைக் கூறிச் சிறப்பித்தனர். […]
1929 ஜனவரி 30 விபவ வருஷம் தை 17 புதன்கிழமை பெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து வந்தது. கென்சிங்டனிலேயே இருக்கப்பட்ட டாக்சி தெலூக்ஸ் கம்பெனிக்கு ஆளனுப்பிச் சொல்லி தெரிசா வரவழைத்தது. டிராமில் வந்திருக்கலாம். கூட்டத்தைக் கண்டால் பயமாக இருக்கிறது. மனுஷர்களைப் பார்த்து உண்டான பயம் இல்லை இது. இடித்துப் பிடித்து வண்டியில் ஏறி, குளிர் காலம் என்ற சாக்கில் மாசக் கணக்கில் குளிக்காமல் உடுப்பு மாற்றாமல் திரிகிறவர்களின் உடம்பு வாடை பற்றிய […]
வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின் மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல் எல்வளை நீள அளைஇ ஒளிக்கும் எலிகள் தின்ற காய்நெல் பழனம் பாசடை பைம்புனல் குண்டுநீர் ஆம்பல் குவித்தன்ன காட்டி விரிகிளர் ஊட்டும் நீள்விழிக்காடு தீப்பெய்த நீழல் நடுக்குறூஉம் காட்சி நலன் அழி செய்ய மாவதிர ஓட்டிய மணித்தேர் வெற்பன் கடிவிசை வலிப்ப கதழ்பரி மள்ளல் துள்ளல் கூட்டி ஆறுவடுப்படுத்தி அலரி ஆட்டிய அந்துணர் உள்ளி நுண்சிறை வண்டினம் நுவல் இமிழ்தந்து நுண்சொல் உரைப்ப நுழைபு மெய் விதிர்த்தான். […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். இத்துடன் நேர்காணல் இதழ் ஐந்து வெளியீட்டு விழாவும் ஓவியர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் பற்றிய அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். திண்ணை இணைய இதழில் வெளியிட வேண்டுகிறேன். அன்புடன், அய்யனார்
(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ) பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு , மணல் கொள்ளை என […]