அரூப நர்த்தனங்கள்

This entry is part 9 of 48 in the series 15 மே 2011

  1. சும்மா கிடந்த காற்றை  சுழட்டி சுற்றுகிறது மின்விசிறி தாள்களுக் கிடையே நுழைந்து வழிந்தோடி ஆடைகளை அசைவித்து திரைச்சீலைக்கு பின்னால் ஒளிந்து விளையாடும் குட்டிகள் தீண்டிவிடாமல் எரியும் சுடரொன்று கண்ணாடிச் சுவர்களுக்குள் சிரிக்கிறது சிமிட்டுகிறது 2. காற்றில் கயிறு திரித்து உள்ளே இறங்கினேன் பிடி இறுக இளகிய கயிறு நூலானது நூல் பிடித்து ஆழம் போனேன் சேர்ந்த இடத்தில் பிடி இல்லை நூலும் இல்லை கால நேரம் தெரியவில்லை இடமே இல்லை இமையற்ற கண்ணொன்று விழித்திருந்தது.

ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)

This entry is part 8 of 48 in the series 15 மே 2011

‘மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும் ‘   தாமஸ் ஹார்டி [Thomas Hardy] முன்னுரை: ஜப்பானின் அணுத்துறை விபத்துகளில் இரண்டாவதாகக் கருதப்படும், 1995 டிசம்பர் 8 ஆம் தேதி ஏற்பட்ட இந்த நிகழ்ச்சி, ஒரு முன்னோடி வேகப் பெருக்கி அணுமின் உலையில் நேர்ந்தது! அணு உலை 40% ஆற்றலில் இயங்கும் போது இரண்டாம் கட்ட […]

பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை

This entry is part 7 of 48 in the series 15 மே 2011

  கோல்கொடாவின் மையப் பகுதியில் ஒரு மாடியறை. சற்று விசாலமான அறையில் 20 லிருந்து நாற்பது பேர் உட்காரலாம். நாற்காலிகள் சுற்றி போடப்பட்டிருக்கின்றன. நாடக அரங்கின் உள்ளேயே பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிற முறையில் நிகழ்த்துனர்கள் சுற்றிவர நிகழ்த்துநர்கள் செல்ல வழி விட்டு நாற்காலிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. நாடகம் பார்வையாளர்கள் நடுவிலும் சுற்றிலும் நிகழ்கிறது. இது இந்த திருப்பம், இது இந்தத் திருப்பம் என்று நாடக நடிகர் ஒவ்வொரு திருப்பமாக அந்த வட்ட அரங்கில் செல்லும் போது ஊர்வலம் ஆகிறது. […]

இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை

This entry is part 6 of 48 in the series 15 மே 2011

ஒசாமா கொலை. காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் இந்தியாவின் இதர பகுதிகளில் நடந்த/ நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் ஒசாமாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ஒசாமாவின் அல்குவேதாவுக்கு இந்தியா ஒரு பொருட்டே இல்லை. அவரது குறியெல்லாம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்தான். அமெரிக்கா அரேபிய புனித பூமியில் கால் வைத்தததால் கோபம் கொண்டு அழிக்க கிளம்பியவர் அவர். ஒசாமா இரட்டை கோபுரங்களை தாக்கி அழித்தது வரை இந்தியாவில் நடந்துகொண்டிருந்த பயங்கரவாத செயல்கள் பயங்கரவாத செயல்களாக அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் பார்க்கப்பட்டதே […]

வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்

This entry is part 5 of 48 in the series 15 மே 2011

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் காட்டவில்லை. பிறகு, அவருக்கு வலிக்க ஆரம்பித்த பிறகுதான் தாங்க முடியாமல் பல் […]

பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்

This entry is part 4 of 48 in the series 15 மே 2011

நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவரது கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர்கள் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல. இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியை தண்ணீரில் மிதந்துசெல்ல விட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி […]

மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்

This entry is part 3 of 48 in the series 15 மே 2011

தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலைக்கு ஒரே ஒரு காரணம் தான், ஜி.கே.மூப்பனார் இல்லாதது. ஏன்…? காமராஜார் மறைவுக்கு பின் ஸ்தாபன காங்கிரஸின் நிலை தமிழகத்தில் கேள்விக்குறி ஆன போது, நெடுமாறன், சிவாஜி கணேசன், மூப்பனார் ஊர் ஊராக சென்று காங்கிரஸாரின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். பெரிவாரியான காங்கிரஸார் இந்திரா காங்கிரஸில் இணைவதையே விரும்பினர். மூப்பனாரும் மக்கள் மனநிலை ஒட்டியே முடிவெடுத்தார். சென்னை மறைமலை நகரில் காங்கிரஸ் இணைப்பு நடந்தது. அதில், யாருமே எதிர்பாராத நிலையில் இந்திரா காந்தி, மூப்பனாரை […]

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11

This entry is part 2 of 48 in the series 15 மே 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     “குமரிப் பெண்ணே ! நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை ! வெடிச் சத்தம் மீண்டும் கேட்குகிறது ! நாங்கள்தான் விளக்கைச் சுற்றித் தீயில் விழப் போகும் விட்டில்கள் ! வேறு வழியில்லை எமக்கு ! ஓடிப் போய் நீ குகைக்குள் ஒளிந்து கொள் !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (ஹெக்டர், நெஞ்சை முறிக்கும் […]

அன்புள்ள ஆசிரியருக்கு

This entry is part 1 of 48 in the series 15 மே 2011

  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும், உடனுக்குடன் பரிசீலித்து முடிவு கட்டுவது என்பது என் வழக்கத்துக்கு விரோதமானது. ‘கிவ் தெம் எ லாங் ரோப்’ என்பது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். எதற்காக இதையெல்லாம் கதைக்கிறான் என்று உங்களுக்குத் தோன்றலாம். பொறுங்கள், விஷயத்துக்கு வருகிறேன். முதலில் உங்கள் மீது […]

’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

This entry is part 45 of 48 in the series 15 மே 2011

  அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பங்கு கொண்ட மகளிர் தின விழா நிகழ்ச்சி கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை அவர்களின் தலைமையில் துபாயில் வெகு சிறப்பாக அரங்கேறியது.  மகளிர் பாடல் குழுவினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் புதிய மெட்டில் குழந்தைகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். திருமதி.சியாமளா சிவகுமார் வரவேற்புரையை தொடர்ந்து பிரசித்தம் குழுவினர் வரவேற்பு நடனத்தை நிகழ்த்தினர். ‘பெண் கல்வியின் அவசியத்தை’ வலியுறுத்தி திருமதி. ரேணுகா குழுவினர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை […]