அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவிதை, புத்தக விமர்சனம் என்று எல்லா தளங்களிலும் அயராமல் இயங்கி வருபவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். […]
நிறைய பள்ளிக்கூடங்களில் மிகக்குறைவான கவனிப்பையும் பராமரிப்பையும் பெறுவது கழிப்பறையாகவே இருந்துவருவது கண்கூடு. அல்லது, ஆசிரிய ஆசிரியைகள் பயன்படுத்தும் கழிப்பறை மட்டும் ஓரளவு சுத்தமாக இருக்கும். வகுப்புநேரத்தின்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்றோ, மலம் கழிக்கவேண்டும் என்றோ குழந்தைகள் கேட்பதற்கே இகவும் பயந்துகொண்டிருப்பதும், கேட்டால் ஆயாவிடம் அல்லது […]
அழகர்சாமி சக்திவேல் காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Gods and Monsters) என்ற இந்த அமெரிக்கப்படம், ஒரு நீண்ட ஹாலிவுட் சினிமா வரலாற்றின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்தப்படம், முதல் உலகப்போரையும், வடகொரிய, தென் கொரியப் போரையும் அடிப்படையாய்க் கொண்ட படம். பிரபல நடிகரான, இயான் மெக்கல்லன் என்ற […]
சரஸ்வதி தோட்டம் வளைவில் சில நாட்களாக பச்சைநிற விளிம்பு உயர்ந்த பிளாஸ்டிக் செவ்வகத் தட்டு இருக்கிறது அதில் தண்ணீரோ பாலோ நிரம்பியிருக்கிறது சில நேரங்களில் சில ரொட்டித்துண்டுகள் தரையில் கிடக்கின்றன தெரு நாய்களும் சில பறவைகளும் பயன் கொள்கின்றன அந்த திரவங்களின் மேற்பரப்பில் ‘ உயிர்களை நேசி ‘ என்ற சொற்கள் மிதக்கின்றன ! ————————
வான்மதி செந்தில்வாணன் 1. எல்லாமும் போய்விட்டது. கடைசியாய் எனக்கென எஞ்சியிருப்பது துண்டுபீடி மட்டுமே. எவரேனும் ஓசி தீப்பெட்டி தந்தால் சற்று உபயோகமாய் இருக்கும். ஏனெனில் பீடி பற்றவைக்கலாம், பீடிக்கடையையோ அல்லது எதுவுமே புகைக்கத்தராத வெற்று நாளையோ ஒரு பிரார்த்தனையுடன் கொளுத்தலாம். 2. வீடுகட்டி விளையாடவென தெர்மாக்கோல் அட்டைகளை உப்பரிகைக்கு எடுத்துப்போனாள் பாப்பா. என்ன நினைத்தாளோ தெரியவில்லை. சிறிதுநேரத்தில் முழு அட்டையையும் பிய்த்துத் தூள்தூளாக்கிவிட்டாள். திடீரென்று வீசிய வேகமான காற்றில், பனிச்சருகுபோல் உருளைத்தனம் செய்த தெர்மாக்கோல் உருண்டைகள் ஒரு […]
முனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் தமிழ் ஆய்வியல் துறை மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர் கேட்போர் மனத்தில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்தப்படுவது. இந்த அழகியல் உணர்வு வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்டுக் கலைத் தன்மையோடு நிகழ்த்திக் காட்டப்படுகிறது. உடல் உறுப்புகளை இயக்குவதில் நளினமும் ஒரு லய உணர்வும் (இசைவும்) மிளிர்வதைக் கண்ட மனிதன், அந்த நளினமான […]
முனைவர் இரா.முரளி கிருட்டினன் (தமிழாய்வுத்துறை, உதவிப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-2.) முன்னுரை சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தமிழ் மொழியும், தமிழர் வாழ்வும் சிறந்து விளங்கியதைக் காணமுடிகின்றது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டும் தமிழ்ச் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டவல்லதாக உள்ளது. புலவர் பெருமக்களும், இசைக்கலைஞா்களுக்கும் அரசர்கள் கொடுத்துள்ள பரிசுப் பொருள்களைப் பற்றி ஆராய்கின்ற போது வியப்பாக உள்ளது. செல்வந்தர்கள், அவர்தம் செல்வத்தைப் பிறா்க்குப் பகிர்ந்தளித்து வாழ்ந்த வாழ்வை ‘அறம்’ என்று எண்ணி மகிழ்ச்சியுடன் […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ புரட்சி எழ வேண்டும் என்று நீ முரசு கொட்டு கிறாய் ! உலகத்தை மாற்ற நாமெல்லாம் கலகம் செய்கிறோம் ! பரிணாம வளர்ச்சி அதுதான் என்று விரைவாகச் சொல்கிறாய் ! உலகத்தை மாற்ற நாமெல்லாம் கலகம் செய்கிறோம் ! ஆனால் அடி, தடி, உடைப்பு, தீ வைப்பு கடை அடைப்பு, வேலை நிறுத்தம் – இவை என்றால் எனக்குப் பிடிக்கா […]
சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை ஒரு புறம் வைத்துவிட்டு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். கோவிந்தசாமி வீட்டில்தான் தங்க வேண்டும். அங்கு பன்னீர் நிச்சயம் வந்துவிடுவான். கோவிந்தசாமியே அவனைக் கூப்பிடுவான். என்னுடன் தனியாக இருக்க அவனுக்கு பயம்! என் வரவை எதிர்பார்த்தபடியே கோவிந்தசாமி காணப்பட்டான். நான் நடு அறையில் மருத்துவ நூல்களுடன் தஞ்சம் கொண்டேன். காலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை செல்வேன். அப்போது வெள்ளை […]
சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் சுரந்து சிறுநீரகக் குழாய்களின் வழியாக சிறுநீர்ப் பையில் வந்து சேர்ந்தபின் வெளியேறுகிறது. இதில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கிருமித் தோற்று உண்டாகலாம். இது இரு பாலரிடையேயும் காணப்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களிடம் இது அதிகம் காணப்படும். ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரில் தொற்று உண்டாவது மிகவும் சுலபம். அதிலும் மணமாகி உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு இது மிகவும் எளிதாக உண்டாகும். ஆண்களுக்கு 50 வயதுக்கும் குறைவானவர்களுக்கு இது உண்டாவது மிகவும் குறைவு. இரு […]