கருத்து அதிகாரம் எது? எதில்? நூறு பேர் சபையில் நாலு பேர் மேடைக்கு அழைக்கப் படுவதில் அவருக்குள் ஒலிவாங்கி வசப்படும் வரிசையில் இறுதிச் சொற்பொழிவு இவரது என்பதில் கருத்துச் சுதந்திரக் கனவு வெளியில் ஒரு தீவு கருத்து அதிகார பீடம் ஒலிபெருக்கிகள் ஓய்ந்து கரவொலி உரிமை மட்டுமுள்ளோர் கருத்து அதிகாரப் பேச்சாளர் யாவரும் வெளியேற வெற்றிட அரங்கம் தோற்றம் மட்டுமே அங்கே எங்கும் வியாபித்திருக்கும் சபைக்கு […]
கனவு திறவோன் எழுத நிறைய இருக்கிறது மனம்தான் மறுக்கிறது ஊழல், தண்டனை, ஆட்சி மாற்றம், ஏமாற்றம், சுத்த தினம், கோஷம், விபத்து, விந்தை என்று ஏதேனும் நிகழ்ந்து எழுதத் தூண்டுகிறது… மனம்தான் நொண்டுகிறது! வாசலைத் தாண்டி விட்டேன் நீ அழகென்பதால் கோலமும் ஈர்க்கிறது… மனம்தான் பம்முகிறது! உன் அப்பாவின் பென்சனும் அம்மாவின் ரேசனும் கரும் புள்ளிகளாய் உன் சின்ன புன்னகையின் விசாலத்தில் மறைகிறது… இருந்தாலும் மனமோ கரைகிறது! சூரியன் கவிழ்ந்தபின் நிழல் நிமிருமோ? நீ ஜன்னலை சாத்திய […]
அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 600 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
கையில் ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கி வந்த அவன் அந்தப்பெண்மணி எங்கே எங்கே என்று தேடினான்.எந்தப்பெண்மணி த்தேடினான் என்பதைச்சொல்லி ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும் உங்களுக்கு தெரியாத புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஆண்டு தோறும் வரும் .மார்ச் மாதம் எட்டாம் தேதி இது மகளிர் தினம்.அவன் அலுவலகம் உற்சாகத்தோடு கொண்டாடும் திருநாள்.சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்த பெண்மணி சென்னையிலிருந்து வந்திருந்தார்.அவர் புரசைவாக்கம் ஒரு அரசு வங்கியில் வேலைபார்க்கிறார். நடுத்த்ர வயதுக்காரர்.சட்டம் படித்தவர். இந்த சமுத்திரகுப்பத்து வங்கி ஊழியர்கள் குறிப்பாக உழைக்கும் […]
மாதவன் ஸ்ரீரங்கம் நிஜமாகவே ராசுவின் ரத்தத்தில் சினிமா கலந்திருக்கின்றது. அவன் தாத்தா ஆரம்பகால எம்ஜியார் படங்களில், கூட்டத்தில் ஒருவராய் தலைகாட்டியிருக்கிறார். அவன் அப்பா ஒரு படி முன்னேறி பாரதிராஜாகாலப் படங்கள் சிலவற்றில், கிராமத்து முக்கியஸ்தர்களில் ஒருவராய் வந்துபோயிருக்கிறார். ராசுவின் அண்ணன்னும் சளைத்தவரல்ல. அவரும் தன் பங்கிற்கு நாயகனின் நண்பனாக நடித்து, ஒரு நாளிதழில் நாலுவரி எழுதப்பட்ட துணிச்சலில், கதாநாயகனாக நடித்த படம் வெளியே வராமல் சினிமா எனும் கனவுலகில் எங்கோ காணாமல் போயிற்று. மனம் நொந்துபோய் கதாநாயகக்கனவை […]
தமிழாய்வுத்துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை-1 E-mail: Malar.sethu@gmail.com மனித வாழ்க்கை பொருளை மையமிட்டதாக அமைந்துள்ளது. பொருள் இல்லையென்றால் வாழ்க்கை என்பது பொருளற்றதாக மாறிவிடுகின்றது. வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவது பொருளே ஆகும். பொருளுள்ளவர்கள் சமுதாயத்தில் வலிமையுள்ளவர்களாக விளங்குகிறார்கள். பொருளற்றவர்கள் வலிமையிழந்து சமுதாயத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுப்பின் அடையாளமிழக்கின்றார்கள். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி, வழிப்படுத்தி மனத்தில் வலுவாக வாழ்வில் நம்பிக்கை கொள்ள வைப்பது பொருளே ஆகும். அரசன் முதல் கீழ்நிலையில் வாழும் கடைக்கோடி […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நேரத்தில் பட்டாபி ஒரு பார்சலோடு வந்தான். கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தான். அவரைப் பார்த்து ஆறுதலாக, “ஒன்னும் கவலைப் படாதீங்க சார். அவன் வேலைக்கு உலை வைத்து விட்டால் என்ன பண்ண முடியும் அவனால். அதன் பிறகு மன்னிப்பு கேட்டு உங்க காலைத்தான் பிடிக்கணும்” பாட்டாபி பேசியது அவருக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அவன் வாங்கி வந்த பார்சலைப் பார்த்தார். உடனே பட்டாபி அவரிடம், “இதைக் கொஞ்சம் ‘ஊத்துங்க சார். கவலை […]
நீண்ட மண் பாதையைக் கடந்து அந்த இருண்ட பிரதேசத்தில் நிமிர்ந்து நின்றிருந்த அந்த வெள்ளை நிறக் கட்டிடத்தின் கேட் முன் நின்றது கார். காவலாளியைக்காணவில்லை. டேவிட்டே இறங்கி கேட்டைத் திறந்தான். இத்தனை தனிமையான இடத்தில் ஒரு காவலாளியையும் வைத்துக்கொள்ளவில்லை என்றால், இங்கு ஏதும்தப்பு நடப்பதாக தோன்றிய எண்ணத்தை அழிச்சாட்டியம் செய்து அழித்தாள் யாழினி. மீண்டும் காரில் ஏறிக் காரை உள் நிறுத்தி, பின் இறங்கி வந்து கேட்டை பூட்டிவிட்டு வந்து காரில் ஏறினான். ஒரு வாட்ச் மேன் […]
நீச்சல்காரன் அன்று காலை உணவு முடிந்தவுடண்டு காலை மடித்தமர்ந்துகொண்டு பல்குத்திக் கொண்டிருந்த சக சிறைவாசிகளிடம் தனது சோகக்கதையை சுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தோசைமணி. அதுவொரு தேர்தல் காலம் தெருவிற்குத் தெரு பிரச்சாரங்கள் சூடு பிடிக்க, தனது துண்டு பீடியில் சூடுவைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார் தலைவர் சுருளி. சுருளி வாழ்க சுருளி வாழ்க என்று கத்திக் கொண்டு தலைவருடன் வேட்புமணு தாக்கல் செய்யப்போனவர்களில் ஒருவர்தான் தோசைமணி. வேட்புமணுவைத் தாக்கல் செய்தவுடன் பிரச்சாரப் பொறுப்பை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்தார் சுருளி. […]