விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று

This entry is part 23 of 33 in the series 27 மே 2012

1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் கொடுத்திருந்தது. ஊர்ந்து கொண்டிருக்கிற டிராம்களில் இருந்து குதித்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் பாய்ந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் அலாதியான மகிழ்ச்சி இருந்ததாக நீலகண்டனுக்குத் தோன்றியது. பார்க்கப் போகிறவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு கிடந்தால் ரெண்டு நிமிஷம் உபசார வார்த்தை பேசிவிட்டு, நர்ஸ் மிஸ்ஸியம்மாக்களின் ஸ்தன பாரத்தை வெறித்த பிறகு பார்க் ஸ்டேஷன் ஓரமாக மசால்வடையும் போண்டாவும் […]

பஞ்சதந்திரம் தொடர் 45

This entry is part 22 of 33 in the series 27 மே 2012

பொன் தந்த பாம்பு ஒரு ஊரில் ஒரு பிராம்மணன் இருந்தான். உழுவதே அவன் தொழில். அதில் ஆதாயம் ஒன்றும் அவனுக்குக் கிடைக்காமல் இருந்து வந்தது. ஒருநாள், கோடைக்கால முடிவில், வெய்யில் தாங்க முடியாமல் அவன் தன் வயல் மத்தியிலே ஒரு மரத்தின் நிழலில் சிறிது கண்ணயர்ந்தான். அப்போது கொஞ்சதூரம் தள்ளி இருந்த ஒரு எறும்புப் புற்றின் மேல் பயங்கரமான ஒரு பெரிய பாம்பு படமெடுத்து ஆடுவதைக் கண்டுவிட்டான். உடனே அவன், ‘’இது கட்டாயம் இந்த வயலைக் காக்கும் […]

யாதுமாகி …

This entry is part 19 of 33 in the series 27 மே 2012

நாற்புறச்சட்டகத்தின்  பின்  இருப்பது தெரியாமல் பேசிக்கொள்கிறார்கள் .. நிறமிகளின் பின்னே நரை  மறைத்து  நிரந்தரமாகவே அவை சென்று விட்டதாகவே நினைத்து கொள்கிறார்கள் … கண்ணோரச் சுருக்கங்களையும் மோவாயின் தளர்ந்த தசைகளையும் நீவி இழந்தவைகளை ஷன நொடிகளில் பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள் குழந்தையிடமும் சிரியவர்களிடமும் மட்டுமே தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில் சமைத்து பரிமாறுகிறார்கள் .. தோல்விகளை திரையிட்டு மறைத்து வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் .. புழக்கடை தனதாயின் அதிலும் […]

இரு கவிதைகள்

This entry is part 18 of 33 in the series 27 மே 2012

(1) கதவு சாமரமாய் வீசும் ஒருக்களித்திருந்த கதவு மெல்ல மெல்லத் திறக்கும். யாரும் உள்ளே அடியெடுத்து வைக்கவில்லை. காற்று திறந்திருக்குமோ? காற்றாடை உடுத்திக் கொண்டு கண்ணுக்குத் தெரியாது யாராவது திறக்க முடியுமோ? எழுந்து சென்று பார்த்து விடலாமா? மலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் மலரைப் பறிப்பதா? மனம் மறுதலிக்கும். கதவுக்கு முன் எந்தக் கதிரவன் உதயமாகி விட முடியும்? கண்கள் பரவசமாகிக் காத்திருக்கும். கதவு முன் முன்பின் தெரியாத ஒரு சின்னக் குழந்தை. தன் ”குஞ்சு மணியைப்” பிஞ்சுக் […]

மகளிர் விழா அழைப்பிதழ்

This entry is part 17 of 33 in the series 27 மே 2012

  அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் நாள்: 26.05.2012 சனிக்கிழமை 15.00 முதல் 20.00 வரை இடம்: Salle Allende Neruda , allée Jules Ferry, 95140 Garges les Gonesse அன்புடன் திருமதி சிமோன் இராசேசுவரி தலைவி: கம்பன் கழக மகளிரணி திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் செயலாளர்: கம்பன் கழக மகளிரணி திருமதி லெபோ லூசியா பொருளாளர்: […]

ஞான ஒளி (கலீல் கிப்ரான்)

This entry is part 16 of 33 in the series 27 மே 2012

இதமான அமைதியின் ஊடே உம் இதயம் உணரும் இரகசியமாய் பகல், இரவுகளின் நீட்சி. ஆயினும் உம் செவிப்பறையின் ஏக்கமாய் உம் இதயஞான, கீதத்தின் ஓசைகள். சதாசர்வமும் உம் சிந்தையை நிறைத்திருக்கும் எண்ண அலைகள் இனிய சொற்களாய் வடிவுறும் கலையும் அறியக்கூடுமே நீவிர் உம் கனவுகளின் நிர்வாணமதை உம்முடைய விரல்கள் தீண்டும் இன்பம் பெறட்டும். எஞ்ஞான்றும் நன்றே செய்மினே. நீவிர் உம்மின் ஆன்மாவினூடே புதைந்து கிடக்கும் நன்மைகள் எழுச்சியாய் விரையட்டும் முணங்குதலாய்; சாகரம் நோக்கி. கண்காணா ஆழத்தில் புதையுண்டு […]

மறுபடியும்

This entry is part 15 of 33 in the series 27 மே 2012

தெலுங்கில்: ஸ்ரீ வல்லி ராதிகா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அடிக்கடி கனவுலகில் நழுவிப் போவதற்கும், இதழ்கள் மீது இடை விடாமல் முறுவல் தவழ்வதற்கும், அரக்க பறக்க ஓடிக்கொண்டே, திடீரென்று ஏதோ நினைப்பில் அப்படியே நின்று விடுவதற்கும் சுனந்தாவின் வயது பதினாறு இல்லை, நாற்பத்தியாறு. தன்னுடைய நிலை ரொம்பவும் வெளிப்படையாக தென்படுகிறது என்றும், சந்தோஷத்தை தன்னால் மறைக்க முடியவில்லை என்றும் தெரிகிறது. அந்த சந்தோஷத்தைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் படுவார்களோ, கண்பட்டு விடுமோ என்றும் ஒரு […]

என் ம‌ண‌ல் குவிய‌ல்…

This entry is part 14 of 33 in the series 27 மே 2012

நான் மணல் குவித்து வைத்திருந்தேன். நேற்று அந்த மெரீனா பீச்சில். பூநுரைகள் அடிக்கடி நக்கிக்கொண்டு போகட்டும் என்று. அதைதேடி என்கால்கள் என்னை அங்கே இழுத்துச்சென்றன. அது அங்கேயே இருக்குமா? இல்லை கரைந்திருக்குமா? வெகு நேரம் வரை தேடினேன். அக்கினிக்குஞ்சு ஒன்றை ஆங்கொரு பொந்திடை வைத்து தேடியது போல் தேடினேன். கடல் என்ன பஞ்சுக்காடா பற்றிக்கொள்வதற்கு. மணல் குவித்து வைத்தது மட்டும் மூளும் என் மனத்தீ தான். குமிழிகள் மோதி மோதி தின்றிருக்கலாம். உடைந்த கிளஞ்சல்கள். கடல் பாசிகள். […]

உட்சுவரின் மௌன நிழல்…

This entry is part 13 of 33 in the series 27 மே 2012

* இரவின் துளி ஈரம் பரவும் இவ்வறையெங்கும் கணுக்கால் தொட்டு நீளும் யாமத்தின் முதல் கீற்றை ஒற்றியெடுக்கும் உதடுகள் உச்சரிக்க மறுக்கின்றன முந்தையப் பகலை அதன் கானலை நினைவில் மிதக்கும் முகங்களின் நெளியுணர்ச்சிகள் குமிழ் விட்டு வெடிக்கிறது மொழியற்ற மொழியொன்றின் ஆழத்தில் கூரையின் உட்சுவர் சுமக்கிறது கரிய நிழலின் மௌனத்தை ******* — இளங்கோ

மே 17 விடுதலை வேட்கை தீ

This entry is part 12 of 33 in the series 27 மே 2012

எரிந்த சாம்பலில் எஞ்சியவர்கள் நீங்கள் குற்றுயிரும் கொலையுயிருமாய் குவிக்கப்பட்ட குவியலிலிருந்து கொஞ்சமாய் உயிர்த்தவர்கள் நீங்கள் நந்திக் கடலேரியில் நாதியற்றவர்களாய் மிதந்தவர்களின் மிச்சம் நீங்கள் முள்ளிவாய்க்காலில் உங்களின் குருதியாறு பாய கொட்டும் குண்டுகளோடு தீக்குளித்தேறியவர்கள் நீங்கள் உற்றாரை பற்றிய கைகளோடு பறிகொடுத்தவர்கள் நீங்கள் நின்ற இடத்தில் கால்களை விட்டுவிட்டு நினைக்கா ஓரிடத்தில் இழுத்துப் போடப்பட்டவர்கள் நீங்கள் ஆலாயிருந்து அலைத் துரும்பாய் அடித்துப் போடப்பட்டவர்கள் நீங்கள் நாற்பதாயிரம் இறந்த உடல்களுக்கு மேல் எழுந்து நிற்கிறீர்கள் நீங்கள் உடற்குறையும் மனக்குறையும் உங்களுக்கு […]