இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) என்னங்க ஒரு வாரம் காக்க வச்சுட்டேனா?..காத்திருப்புக் கூட நல்லாருக்குமுங்க.. அதுல ஒரு மகிழ்ச்சி இருக்குதுங்க… அட ஆமாங்க… நமக்குப் பிரியமானவங்களச் சந்திக்கிறதுக்கோ, அல்லது நமக்குப் பிடிச்சவங்களோட பேசுறதுக்கோ, காத்திருக்க வேண்டி வந்தால் அதுகூட சொகமாத்தானே இருக்கும். அதுமாதிரி நமக்குப் பிடித்த எழுத்தாளர்கள் குறித்து தெரிஞ்சுக்கணும்னா கண்டிப்பா காத்திருப்பதிலே தப்பே இல்லைங்க… […]
எல்லோருக்கும் பிடித்த சுஜாதா பின்னர் எல்லோருக்கும் பிடித்த அவரது தேசிகன் மற்றும் நேசமிகு ராஜகுமாரன் ( என்ன அருமையான பெயர் ), மணிகண்டன், ரா.விநோத் பின்னர் ஞானுமாக எல்லாருமாச்சேர்ந்து கப்பன் பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம் நேற்று 28 ஏப்ரல் 2013, மங்கிய மாலைப்பொழுது , வெய்யில் முற்றுமாகத்தணிந்து குளிர்ந்துகிடந்தது புல்தரை. வழக்கம் போல வட்டமாக அமர்ந்து பேசத்தொடங்கினோம். எனக்கு கொஞ்சம் வந்து சேர்வதற்கு நேரமாகிவிட்டது. ஆச்சரியம் 6-7 பேர்களே வந்திருந்த கூட்டம் […]
டாக்டர் ஜி.ஜான்சன் நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள். இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 டிகிரி செல்சியஸ் உள்ளது. உயிர் இல்லாத உடல் வெப்பம் இன்றி ஜில்லிட்டுபோகும். இரத்தத்தை இப்படி சீராக ஓடச் செய்வது இருதயத்தின் துடிப்பு. இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் சீராக துடிப்பதால்தான் இரத்தமும் இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் […]
‘இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்’ கூரிய பார்வைகளும் குற்றச்சாட்டுகளும் குத்தும் ஊசிமுனைகளும் முடிவற்றவை தலைக்கு மேலே சூரியனும் நோயுற்ற தீக் காற்றும் கொதிக்கச் செய்கிறது குருதியை. பரம்பரை வழித் திண்ணையும் செந்தணலாய்ச் சுடுகிறது. காகங்கள் வரிசையாக எச்சமிடுகின்றன எச்சங்களை விற்றும் பிழைப்பவர்கள் ‘இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்’ என்கின்றனர். – விஜய நந்தன பெரேரா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. அந்த நாள் நாமிரு வரும் ஒன்றாய் உடல் நெளிந் தாடினோம் அடர்ந்த காட்டிலே ! மலர்களில் தோன்றிய ஆட்டம் மலர் மாலை ஆனது ! அந்தச் சில கண நேரங்கள் உந்தன் நினைவுக்குள் விழிதெழட்டும் ! அதை மறந்து விடாதே ! அந்த நாள் காற்று வெளியில் பிதற்றும் நிலையில் என் மனது பின்னிக் கிடந்தது ! […]
இரா. கௌரிசங்கர் நான் இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டிற்கு திரும்ப முடிந்தது ஒரு அதிசயமாகத்தான் தோன்றியது – ஏனெனில் தினமுமே எப்படியும் ஒரு எட்டு மணி ஆகி விடும். இன்று ஐந்து மணிக்கெல்லாம் வருவதென்றால்… எனக்கே ஒரு புது மாதிரியாக இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று பார்க்க ஆசையாக இருந்தது. ஒரு ஆச்சரியத்துடன் வரவேற்ப்பார்களா, சீக்கரம் வந்ததை கொண்டாடுவார்களா என்று பார்க்கத் தோன்றியது. எனக்கு கூட நிறைய எதிர்பார்ப்புகள் – […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா திரும்பி நினைத்து வந்தேன் மிருகங்க ளோடு நான் வசிப்பதற்கு ! மிகவும் அமைதி யானவை ! தன்னடக்கம் கொண்டவை ! நெடு நேரம் நின்று அவற்றை நோக்குவேன், ஆம் நெடு நேரம் ! இழிவு நிலைக்கு அவை புலம்புவ தில்லை ! புகார் செய்வ தில்லை ! பயத்தால் வேர்ப்ப தில்லை ! இருட்டில் படுத்து […]
நதிக்கு நீராடக் கிளம்பிய புத்தரின் உடலில் தளர்வு இருந்தது. ஆனால் அது நடையில் தென்படவில்லை. காவலுக்கு உடன் வந்த வீரர்களிடம் புத்தர் ” நான் அரச மரியாதைகள் காவல்களுக்கு அப்பாற்பட்டவன். நீங்கள் செல்லுங்கள்” என்று சொல்லி மேலே நடக்க, அவர்கள் பணிந்து நின்று விட்டனர். அவரைப் பின் தொடர முயன்ற நூற்றுக்கணக்கான மக்களிடம் அந்த வீரர்கள் “கௌதம புத்தருக்குத் தனிமையும் ஓய்வும் தேவை. நாற்பத்து ஒன்பது நாள் தவம் முடிந்த அவரைத் தொல்லை செய்யக் கூடாது. இது […]