எஸ்ஸார்சி தருமங்குடியில் அழகிய சிவன்கோவில் இருக்கிறது. பஞ்சபாண்டவர்களில் மூத்தவன் தருமன். இந்த ஊருக்கு விஜயம் செய்திருக்கிறான். இதை நான் மட்டுமா சொல்கிறேன். ஊரில் எல்லோருமே சொல்கிறார்கள். தருமனுக்கு இவ்வூர் சிவன் கோவிலில் ஒரு தனிச்சந்நிதி உண்டு. அப்படி எல்லாம் இல்லாவிட்டால் இங்கு எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஈசனுக்குத் தருமைநாதன் என்று பெயர்தான் வந்திருக்குமா என்ன. தருமன் என்கிற யுதிஷ்டிரன் இந்த ஊருக்கு வந்து சிவனை பூஜித்து வணங்கியதால் இது தருமங்குடி. இருக்கட்டும். தருமன் வருவதற்கு முன்பாக இந்த ஊருக்கு வேறு பெயர் ஏதும் இருந்திருக்குமோ? அன்னையின் திருப்பெயர் […]
குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10–2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு. சின்னையை சிவநேசன், […]
அஜய் கௌசிக் ஆன்லைன் வகுப்புகள் முடிந்து அறையினின்று களைப்பும், சற்று கவலையும் கூடிய முகத்தை சுமந்துக்கொண்டு வெளிவந்த தனது பேரன் சுரேனை குழப்பத்துடன் எதிர்கொண்ட ராஜசுப்ரமணியத்திற்கு தோராயமாக 70 வயது இருக்கலாம். உருவ தோற்றத்தில் நடிகர் டெல்லி கணேஷை நினைவுபடுத்தினார். வனத்துறையில் உயரிய பதவி வகித்து ஒய்வு பெற்றவர். தனது பணிநாட்களில் ஒய்வு கிடைக்காதா என்று ஏங்கிய அவருக்கு இந்த பத்து வருட ஒய்வு சலிப்பையே தந்திருந்தது. தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கிய ட்ரான்ஸிஸ்டரில் யாரோ […]
படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும், சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற, வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின் மன உணர்வுகளை வைத்து, இரண்டு நபர்களின் மேல், கதையின் பாரத்தைப்போட்டு, வண்டியை இழுத்துச்செல்கின்றார் டைரக்டர். திஜாவின் கதைகளில் வரும் மண்வாசனை இதிலும் தெரிகின்றன. வீடு என்பது, வெறும் கல்லும் மண்ணம் கட்டிய வஸ்து அல்ல. அதற்கும் உயிர் உண்டு. அதுவும் அம்மா அப்பாவோடு பேசும். அக்கா தங்கை தம்பியோடு உறவாடும். வளர்க்கும் நாய் பூனையோடு […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 329ஆம் இதழ், 27 அக்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: வாசகர் கடிதங்கள் கட்டுரைகள் கலை காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்ரமணன் நேர்கோணல் – மர்ஸல்துஷா (Marcel Duchamp) – ஆர்.சீனிவாசன் இலக்கியம்/கருத்து நிற(ப்)பிரிகை – பானுமதி ந. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல் அறிவியல் ஆராயும் தேடலில் […]
கோ. மன்றவாணன் பின்இரவு நேரம். சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. கோழிக் கோட்டில் இருந்து மஞ்ஞேரி நோக்கி அந்தப் புதிய மகிழுந்து பறக்கிறது. பின்னிருந்து துரத்தும் நிலாவால் அந்தக் காரை முந்த முடியவில்லை. இன்னும் வேகத்தை அதிகப் படுத்துவதற்காக உடலை அசைத்து நேராக அமர்கிறார் அதன் ஓட்டுநர். அதே நேரத்தில் திடீரெனச் சாலையின் குறுக்கே கை அசைத்தபடி ஒரு முதியவர் ஓடி வருகிறார். மின்னல் எனத் திசைமாற்றியை இடது பக்கம் ஒடித்து, வலது பக்கம் திருப்பி நிறுத்துக் கட்டையை […]