தாரிக் ஃ பதா 2015, மார்ச் மாதம் டெல்லியின் ஒரு பேச்சின்போது, இந்திய முஸ்லீம்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன் – இந்திய முஸ்லீம்கள் இஸ்லாமிய காலிபேட்டை நிராகரித்து, இஸ்லாமியராக வாழ வேண்டும் அந்தப் பயணத்தை ஆரம்பிக்கவேண்டுமென்றால், அவர்கள் இந்திய அரசாங்கத்திடமும் டெல்லி அரசாங்கத்திடமும், கொலைகார மொகலாய பேரரசரான அவுரங்கசீப்பின் பெயரால் டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை, அந்த அவுரங்கசீப்பால் தலை கொய்யப்பட்ட கவிஞரும், ஆன்மீகவாதியுமான அவரது சகோதரர் தாரோ ஷிகோ பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுகொண்டேன். […]
மராட்டிய இளமங்கை லலிதா எனக்கு விடுதி நாளன்று விருந்தாளி! உண்மையில் பெரும் உவகை கொண்டேன். அவளை நான் பிரேம் குமாருடன் பகிர்ந்து கொண்டால் பரவாயில்லை. என் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாளே. அது போதும். அன்று மாலை ஆறு மணி போல் பிரேம் குமாரும் நானும் பெண்கள் விடுதி நோக்கி நடையிட்டோம்.என் கையில் அழைப்பிதழ் அட்டை இருந்தது. பெண்கள் விடுதி கல்லூரி கட்டிடத்துடன் சேர்ந்தாற்போல் அமைந்திருந்தது. அமைப்பில் அது எங்கள் விடுதியைப்போல்தான் இருந்தது. அதன் […]
ஏம்மா, எங்கே போயிட்டு வர்றே…? – உள்ளெ நுழையும்போதே பத்மநாபனின் கேள்வி சுமதியை நிறுத்தியது. என் தோழி கவிதா வீட்டுக்குப்பா… இப்படி பதைபதைக்கிற வெய்யில்ல போய் அலைஞ்சிட்டு வர்றியே, இது தேவையா உனக்கு? கேள்வி என்னவோ செய்தது. அப்பாவின் பேச்சில் ஆயிரம் இருக்கும். இல்லப்பா, ரொம்ப நாளாச்சு அவளைப் பார்த்து. ஊரிலிருந்து வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். அதான் போனேன். பார்த்திட்டியா? சுமதி தயங்கினாள். என்னம்மா, உன் தோழியைப் பார்த்துப் பேசிட்டியான்னு கேட்டேன்… அப்பா பதிலுக்காக நிமிர்ந்து நோக்குவது […]
முன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தியாக உதவுவது மட்டுமல்லாது, முக்கியமான தேவையுமாகும். அணுவியல் மேதை, டாக்டர் ஹோமி ஜெ. பாபா சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை […]
செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903) சிந்தனைப் பொழிவு – 3 செய்திக்குறிப்பு புதுக்கோட்டை நவம்பர் 2 “தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என முதன்முதலில் உலகுக்கு எடுத்துச் சொல்லி நிறுவிக்காட்டியவர் பரிதிமாற் கலைஞர்” என்றார் புலவர் மா.நாகூர். செம்மொழிச் சிந்தனையாளர் பேரவையின் சார்பில் புதுக்கோட்டை பாலபாரதி மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் சிந்தனைப் பொழிவுக் கூட்டத்திற்குப் பேரவையின் துணைத்தலைவர் சண்முக பழனியப்பன் தலைமை […]
கொடுமுடி காவேரி ஆற்றில் சலசலவென்று தண்ணீர் வழிந்து நழுவிச் சென்று கொண்டிருக்கிறது. ” கொடுமுடி கோகிலம் நடமாடிய வீதியல்லவா” என்றேன் நான். ” கேபி சுந்தரம்பாளைச் சொல்கிறீர்களா ” என்றார் நண்பர் .கொடுமுடி கோகிலம் என்ற புனைப்பெயரைச் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி. அநண்பரின் காலில் திடிரென்று சீமைக்கருவேலம் முள் குத்தியதால் ஏற்பட்ட வலியில் அவர் முகம் சிணுங்கியது. ”கொடுமுடி கோகிலம் காலத்தில் இந்தச் சீமைக்கருவேலம் மரங்கள் இருந்திருக்காது. ”அவரின் அம்மா குழந்தைகளைக்கூட்டிச் சென்று தற்கொலைக்கு முயன்ற போது […]
முனைவர் வாசுகி கண்ணப்பர், சென்னை அன்பின் ஆழம் என்ற நூலின் ஆசிரியர் திருமதி தேவகி கருணாகரன் அவர்கள் மானுடத்தை நேசிக்கும் மாபெரும் மாதரசி. கணவருக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி தமிழ்குலப் பெண்களின் பண்பாட்டை நிரூபித்து, வருங்கால சமூகத்திற்கு கலங்கரை விளக்கமாகிறார். மனதில் ஏற்பட்ட வடுக்கள், கதைகளாக உணர்ச்சிப் பெருக்காக உருப் பெற்றுள்ளன. இதுவரை பல இதழ்களுக்காகப் படைக்கப்பட்ட கதைகள் இன்று மலராக “அன்பின் ஆழம்’’ என்ற பெயரில் மலர்ந்துள்ளது. உண்மை மணம் பரப்புகின்றது. ஆங்கிலத்தைப் பாடமாகப் படித்துப் […]
எதிரி நாட்டு வீரன் மீது கூர் வாளை வீசிக் கொல்வது வீரம் அல்லவா? மிரளும் கண்களுடன் மாமிச மலையாய் ஓடி வரும் காளையை விரட்டி விரட்டி வாலைப் பிடித்து வளைத்து வளைத்து திமிலைப் பிடித்து முதுகில் ஏறி அடக்கி நிமிர்வதை விட வீரம் எது உண்டு? வீரம் மட்டுமா? நேயமுமுண்டு என் வளர்ப்பு மிருகம் பசியால் வாடினால் மற்றொரு மிருகத்தின் சதைத் துண்டுகளை அறுத்துத் தருவேன் இரு முகம் பல […]
நித்ய சைதன்யா 1.சுயம் கடும் சினத்தில் கூறிய வார்த்தைகள் என்னுடையதல்ல அன்பு மிகுதியால் உன்னை அணைத்துக் கொள்பவனும் நானல்ல இங்கிதம் அற்று உன்னை வெறும் அங்கங்களாய் வெறிப்பவன் சத்தியமாய் யாரோதான் கூடலின்போது தசைதின்ன விழையும் நா ஆதாமுடையதாக இருக்கலாம் குரோதமிகுதியால் உன் உணவில் நஞ்சிடும் கரம் எனக்கே அந்நியம் யாசிக்கும் கைகளுக்கு இடுபவனும் நான் விரும்பும் ஒருவன்தான் புரிந்து கொள் கடல் சுமக்கும் அலைகளல்ல கடலாழம் என்பது. 2.முகம் பார்க்கும் கண்ணாடி இப்பவும் என் கரமைதுனம் […]