அழகியசிங்கர் இங்கு இப்போது விக்ரமாதித்யன் என்ற கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு பேசலாமென்று நினைக்கிறேன். ஒரு கவிஞருடைய ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு அதன் மேன்மையைப் பேசுவதுதான் இக் கட்டுரையின் நோக்கம். ஒரு காலத்தில் விக்ரமாதித்யனும் பிரம்மராஜனும் தமிழில் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள். இதில் விக்ரமாதித்யன் கவிதைகள் எல்லோருக்கும் புரியும். இலக்கியத்தரமான ஜனரஞ்சகமான கவிதைகள். ஆனால் பிரம்மராஜன் கவிதைகளை யாரும் நெருங்க முடியாது. புரியவும் புரியாது. ஆனால் விக்ரமாதித்யன் அப்படி இல்லை. அவர் தன் வாழ்க்கை சம்பவங்களை தன் மனம் போனபடி எழுதிக்கொண்டு போவார். ஒளிவு மறைவு இருக்காது. இன்னதுதான் சொல்ல வேண்டும், இதெல்லாம் சொல்லக் கூடாது […]
ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக் கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது மேலும் கோடுகளிட்டேன் . இதுவரை நான் எனது பாடப்புத்தகங்களைக் கூட இப்படிக் கோடிடவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வாசிக்கக் கையில் எடுத்துவிட்டு, வார்த்தைகள் புரியவில்லை என வைத்துவிட்டேன் . இம்முறை கூர்ந்து […]
குமரி எஸ். நீலகண்டன் கொரோனா காலம் எல்லா மனிதர்களைப் போல் என்னையும் வீட்டில் முடக்கியது. எல்லோரையும் வீட்டிற்குள் அனுப்பி விட்டு சாலைகளையெல்லாம் கடவுள் தூசி தட்டிக் கொண்டிருக்கிறார். காற்றையும் தண்ணீரையும் அண்ட வெளிகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏன்? ஓசோன் துளையைக் கூட கடவுள் அடைத்து விட்டாரென்று கேள்விப் பட்டேன். இதையெல்லாம் பார்த்த போது நம் வீட்டை மட்டும் தூசியாக வைத்திருக்கலாமாவென எனக்கு தோன்றியது. அதனால் என் வீட்டையும் சுத்தப் படுத்தத் தொடங்கினேன். இறுக்கி அடைத்து வைத்திருந்த அட்டைப் […]