சத்யஜித்ரேயின் சிறுகதைகள்

This entry is part 3 of 21 in the series 16 அக்டோபர் 2016

  சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் […]

வண்ணதாசனுக்கு வணக்கம்

This entry is part 5 of 21 in the series 16 அக்டோபர் 2016

    எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன். எங்கள் தாத்தா வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய வட்டார நூலகம் இருந்தது. நேரம் கிட்டும் போதெல்லாம் அந்த நூலகத்துக்குச் சென்றுவிடுவேன். அந்த நூலகருடன் எனக்கு நல்ல தொடர்பிருந்தது. அவருக்குத் தேவையான சின்னச்சின்ன வேலைகளைச் செய்து […]

கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்

This entry is part 1 of 21 in the series 16 அக்டோபர் 2016

  செந்தில் இந்த கட்டுரையின் நோக்கம், தெய்வம் (அ) கடவுள் என்ற – மனிதனுக்கும்,இயற்க்கைக்கும் மேலான –  கருத்தாக்கம் தேவையா? பயன் உள்ளதா? பயனற்றதா?,  கடவுள் என்ற புனிதம் மிக்க (நிலையோ/பொருளோ/சக்தியோ) உண்டா? இல்லையா? என்றெல்லாம் விவாதம் செய்வதை தவிர்த்து, மனிதன், ஜடப்பொருள், உயிர்கள், மற்றும் பேரியற்க்கைக்கும் ஆன தொடர்பினை அறிவியல் பாதையில் விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் மனிதனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மேலாக தெய்வம்/கடவுள் என்ற சக்தியோ, இயக்கமோ, பொருளோ இருப்பதற்க்கான  விசாரணையை  தொடர சில  பிரமாணங்களையும் (Premises), கோட்பாட்டு தளங்களையும் (Principles) வரிசைபடுத்தும் முயற்சியாக இந்த கட்டுரை. இந்திய இறையியல் வரலாற்றில் கபிலர் முதல், புத்தர், சார்வாகர், ஜைன சிந்தனையாளர்கள் தொடர்ந்து வள்ளுவர், ஆதிசங்கரர், இராமானுஜர், அருணகிரி நாதர் வரை இத்தகைய […]

ஈர்மிப் பெருந்திணை

This entry is part 2 of 21 in the series 16 அக்டோபர் 2016

அழகர்சாமி சக்திவேல்   நீ பாதி நான் பாதி கண்ணே தலைவன் முனகினான் நான் பாதி அவள் பாதி கண்ணா தலைவியும்  முனகினாள்   ஊடுதல் காமத்திற்கு இன்பம்…. அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் தலைவி… தலைவன் முனகினான். நன்றி..நாளை என் தலைவியிடம் சொல்ல ஒரு நல்ல வசனம் கிடைத்தது..தலைவா எனத் தலைவியும்  முனகினாள்   பசலைப் பருவரலால் உன் அம்மா போட்ட வளையல்கள் கழன்று காணாமல் போனதுவோ தலைவி? தலைவன் முனகினான் அவை என் தலைவியின் […]

அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்

This entry is part 4 of 21 in the series 16 அக்டோபர் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101 அழுதாலும் பயனில்லை! தொழுதாலும் பயனில்லை! கரைமதில் உடைந்து விட்டால், காத தூரம் ஓட வேண்டும் அம்மா ! குடியிருக்க இடம் ஏதம்மா , கடல் தடுப்பு முறிந்து போனால்! உடைந்து போகும் பழைய மதில் ஓலமிட்டு மக்கள் துயர்ப்படவே  வைக்குதம்மா! ++++++++++ லெட் ஸெப்பெளின் இசைப்பாடல் [Led Zeppelin Lyrics (1929)] பூம்புகார் சூறாவளிச் சுனாமி அடித்துக் கடல் மூழ்கிப் போன தம்மா! சுனாமிப் பேயலை […]

“முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா

This entry is part 6 of 21 in the series 16 அக்டோபர் 2016

பொன் குலேந்திரன் -கனடா நடந்து போகும் போது முகாமில் ஒரு இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நின்றதைக் கண்டார்கள். இளையான்களும், கொசுக்களும்  ஆக்கிரமித்த நீர் தேக்கம் அது. சேற்று நிறமுடைய நீர். அந்த  அழுக்கு நீரில் நான்கு சிறுவர்களும் இரு சிறுமிகளும் காகிதத்தில் ஓடங்கள் செய்து மிதக்கவிட்டு விளாயாடிக் கொண்டிருந்தார்கள்;. அவ்விளையாட்டால் ஏற்படும் ஆபத்தை அறியாத பிஞ்சு உள்ளங்கள். அதைக் கண்ட ஜோன் சிறுவர்களுக்கு வர இருக்கும் ஆபத்தை உணர்ந்தார். உடனே மகேஷிடம் ”மகேஷ் இந்த பிள்ளைகளுக்கு […]

எளிய மனிதர்களின் தன் முனைப்பு

This entry is part 7 of 21 in the series 16 அக்டோபர் 2016

என் அருமை நண்பரும், மலேசியாவின் ஆகச் சிறந்த எழுத்தாளாருமான முனைவர் ரெ.கார்த்திகேசு அமரத்துவம் எய்திவிட்டார். தமிழுக்கு நல்ல சிறுகதைகளைத் தந்தவர் ———————————– நடவடிக்கைகள்   ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து …..   சுப்ரபாரதிமணியன்     பச்சைப் பசுங்கோயில் –இன்பப் பண்ணை மலைநாடு இச்சைக்குகந்த நிலம்- என் இதயம் போன்ற நிலம் ( சுத்தானந்த பாரதியார் )     அய்ந்து நாவல்கள் கொண்டஇத் தொகுப்பை  படித்து முடிக்கிற போது மலேசியாவின் […]

தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .

This entry is part 8 of 21 in the series 16 அக்டோபர் 2016

மருத்துவக் கல்வியில் பொது மருத்துவமும், அறுவை மருத்துவமும் நான்காம் ஐந்தாம் இரு ஆண்டுகள் பயிலும்போது அவற்றின் கிளைப் பிரிவுகளாக வேறு சில சிறப்பு இயல் பாடங்களையும் குறுகிய காலங்களில் பயிலவேண்டும். பொது மருத்துவத்துடன் தொடர்புடையவை  இதயவியல் ( Cardiology ),  நரம்பியல் ( Neurology ),  சிறுநீரகவியல் ( Nephrology )  , தோலியல் ( Dermatology ) , கதிரியல் ( Radiology ) , கதிரியக்கப் பண்டுவம் ( Radio  – Therapy ) […]

பசி

This entry is part 9 of 21 in the series 16 அக்டோபர் 2016

தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத்   இரவு பத்து மணி. அது வரையில் அரை தூக்கத்தில் இருந்த கண்ணனுக்கு திடீரென்று விழிப்பு வந்தது. அவனுக்கு பயமாக இருக்கவில்லை. மரணம் நிச்சயம் என்று தெரிந்து போன கேன்சர் நோயாளி மனதில் இருக்கும் விரக்தியைப் போல் அந்த அறையில் இருள் பரவி இருந்தது. மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. எரியும் சிதையைப் பார்க்கும் போது மனதில் ஏற்படும் வைராக்கியத்தை போல் நிசப்தம் அந்த அறையில் குடி இருந்தது. எலி ஒன்று இந்த […]

பாசத்தின் விலை

This entry is part 10 of 21 in the series 16 அக்டோபர் 2016

ரசிப்பு எஸ். பழனிச்சாமி அந்த அறையில் குடும்பத்தினர் எல்லோரும் கூடியிருந்தார்கள். வாசலுக்கு நேராக இருந்த மேற்குச் சுவரின் அருகே ஒரு சேரில் செல்வக்குமார் அமர்ந்திருந்தார். அவருக்கு இடப்புறம் ரகுவும் அவன் மனைவி கமலாவும் இருந்தனர். வலப்புறம் ராஜேஷ் அவன் மனைவியுடன் உட்கார்ந்திருந்தான். இடதுபுறம் கொஞ்சம் முன்னால் ரமேஷ் தன் மனைவி கலா மற்றும் மாமியாருடன் அமர்ந்திருந்தான். தெற்குச் சுவரில் சாய்ந்தபடி ராஜம்மாள் அமர்ந்திருந்தார். கிழக்கே வாசலுக்கு அருகில் செல்வக்குமாரின் மனைவி ரமணி தன் அம்மாவின் அருகே அமர்ந்து […]