கதை கவிதையெழுதுவதை விட மொழிபெயர்ப்பாளராவதைவிட வெகுஎளிதாய் விமர்சகராகிவிட்டால் போச்சு! விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக உருட்டியவண்ணம் இலக்கிய மைதானத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். பந்தை உருட்டமுடிந்தவர்களெல்லாம் பந்தாகிவிட முடியுமா என்ன ? கேட்டால் கொடும்பாவியெரித்திடுவார்களோ – ஒரே கலவரமாயிருக்கிறது. ஏன் அரசியல் கவிதையே எழுதுவதில்லை யென்று கேட்டார் ஒரே யொருவரைப் பழிப்பதும் பகடி செய்வதும் ஒரேயொரு குலத்தை மலமெனப் பேசுவதும் நலங்கெட ஏசுவதும் ஒரேயொரு […]
வாசக நண்பர்களுக்கு, வணக்கம். ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினைப் போற்றும் விதத்தில் காலச்சுவடு (மார்ச் 2019) சிறப்பிதழைச் கொண்டுவந்து கௌரவம் செய்தது. அதன் தொடர்ச்சியாக, தனபாலின் சுயசரிதையும் நூலாக்கம் பெற்றிருக்கிறது. ஆனந்த விகடன் இதழில் தொன்னூறுகளின் மத்திய ஆண்டுகளில் – தொடர்ந்து பத்து மாதங்களுக்கு ‘ஒரு சிற்பியின் சுயசரிதை!’ என – அவரெழுதிய தொடர் வாசகர்களிடம் பரவலான கவனமும் பெற்றுள்ளது. சிறுவாணி வாசகர் மையத்துடன் இணைந்து காலச்சுவடு பதிப்பகம் அத்தொடரைப் பதிப்பித்துள்ளது. சிற்பி […]
பாண்டித்துரை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பிறந்தவர். கடந்த 14 வருடமாக சிங்கையில் வசிக்கும் இவர், 13 சிறுகதைகள் அடங்கிய ‘உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81’ என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் 2017 இல் ‘மோக்லி’ பதிப்பகத்தில் வெளியானது. சிங்கப்பூர் NAC நடத்திய தங்கமுனை விருதுகள் இவரது ராட்சசி (2015-இரண்டாம் பரிசு), ரகசியம் (2017/முதல் பரிசு) சிறுகதைகளுக்கு கிடைத்தது. இவரது சிறுகதை தொகுப்பிற்கு 2018 க.சீ.சிவக்குமார் நினைவு விருது கிடைத்தது. தற்போது நாவல் எழுதுகிறேன் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் மல்லிகாவும் முதன்முறை தரிசனத்திற்காக வருகின்றார்கள். அம்மனுக்கு எத்தனை கோபுரங்கள். அவர்களை வசதியாக கோபுர வாசலுக்கு அண்மையில் இறக்கிவிட்டு, “நீங்கள் உள்ளே போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு வாருங்கள். நான் காரை எங்காவது ஓரிடத்தில் நிற்பாட்டிவிட்டு இந்த இடத்தில் வந்து நிற்கின்றேன்” சாரதி சொல்லிக்கொண்டே காரை வசதியாக நிறுத்துவதற்கான இடம் தேடிப் புறப்பட்டான். ஒரே சனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ஆரவாரமாகத் தெரிந்தார்கள். கோவிலுக்கு எந்தப் பக்கத்தால் போவது? கோபுரம் இருந்த திசை […]
இல.பிரகாசம் சிற்பி ஒருவன் தனது கையில் சிற்பத்தை செதுக்கிய கல்லின் தோலை வைத்திருந்தான் உளியெங்கே என்றேன் கல்லுள் மறைந்திருந்த சிற்பம் கைப்பற்றிக் கொண்டது. பின், மீதிருந்த இந்தக் கல்தோலை நார் போல உரித்துக் கொடுத்ததாகச் சொன்னான். அவன் மீப்புனை வுலகைச் சேர்ந்தவனா? இந்த இஸத்தில் இவன் எப்படி மாட்டிக் கொண்டிருப்பான். கவிதையென்று சொல்லி யாரைக் கொல்லப் போகிறாய் என அச்சிறப்பம் ஓவென குரலெடுத்து ஓலமிட்டது.
போருக்காகச் சென்றிருக்கும் அரசரும், படைத்தலைவர்களும் தங்கியிருக்கும் இடமே பாசறையாகும். அங்கே போர் குறித்த திட்டங்கள் தீட்டப்படும். போருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். அங்கே இருப்பவர்கள் போரில் புறங்கொடாமல் வீழ்ந்தாலும் புகழை விரும்புவோரே ஆவார். இப்பத்துப் பாடல்களும் பாசறையில் நிகழ்வும் நிகழ்ச்சிகளைக் காட்டுவதால் இப்பெயர் பெற்றது. =====================================================================================1. ஐயஆயின, செய்யோள் கிளவி; கார்நாள் உருமொடு கைஅயறப் பிரிந்தென, நோய்நன்கு செய்த எமக்கே; யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே. [ஐ=அழகு; செய்யோள்;செம்மையானவள்; கிளவி=தூதிடம் சொல்லி விட்ட […]