மீட்சிக்கான விருப்பம்

This entry is part 21 of 34 in the series 28அக்டோபர் 2012

எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் படித்தேன். நேரடியான தமிழ்ப்பாடத்தை வரிவரியாகப் படித்து விளக்கம் சொல்லி நடத்தும் எங்கள் தமிழ் ஐயா  துணைப்பாடத்தை நடத்தும்போது புத்தகத்தையே பார்க்காமல் ஏதோ கதை சொல்கிறமாதிரி கூடுதலான உற்சாகத்தோடும் ஏராளமான வெளியுலகச் செய்திகளோடும் நடத்தினார். ’புத்தன் ஏசு காந்தி பிறந்தது  பூமியில் எதற்காக, தோழா ஏழைகள் நமக்காக’ என்றொரு திரைப்பாடல் எல்லா இடங்களிலும் ஒலித்தபடி இருந்த […]

ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.

This entry is part 26 of 34 in the series 28அக்டோபர் 2012

ஃபெர்யல் அலி கவ்ஹர் முன்பொரு காலத்தில், அச்சம் நம் கண் இமைகளில் புண்களாக அழுத்தாதிருந்தபோது, இந்த சாலையில் சாக்கலேட் ஹீரோக்கள், சர்க்கரை பாகு ஹீரோயின்களிடம் காதலுக்காக இறைஞ்சி கொண்டிருந்தார்கள். ஸ்வாத்துக்கு போகும் சாலை மருங்கில் இருக்கும் கம்பீரமான பைன் மரங்களின் நடுவேயும், போப்லார் மரங்களின் நடங்கேயும் ஓடிப்பிடித்து, தங்களது அழியாத காதல்களை பாடல்களாக கூவிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில், சமவெளியின் கடுமையான வெயிலிடமிருந்து தப்ப முயன்ற ஏராளமான பயணிகளை இந்த சாலை தாங்கியிருந்திருக்கிறது. பள்ளத்தாக்கை ஆக்கிரமித்து வெற்றிகொள்ள விரும்பியவர்களது பயணத்தையும் […]

சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி

This entry is part 13 of 34 in the series 28அக்டோபர் 2012

எழுத்தாளர்கள் பாரவி(பிரக்ஞை), சாமிநாதன்(சாம்),கவிஞர் தேவகோட்டை வா.மூர்த்தி ஆகியோரின் தீவிர முயற்சியின் பயனாய்த் ‘தளம்’ என்னும் பெயரில் ஒரு கலை இலக்கியக் காலாண்டிதழ் தொடங்கப் பட்டிருக்கிறது. இதன் முதல் இதழ் அக்டோபர் மாத இறுதியில் வெளிவரும். தளம் முதல் இதழில் அம்பை, எஸ்.பொ., சுப்ரபாரதி மணியன், பெருந்தேவி,சித்தன்(யுகமாயினி),முருகபூபதி,ந.முத்துசாமி,சார்வாகன்,வே.சபாநாயகம், ஆறுமுகம் ரவிச்சந்திரன்,வீ.விஜயராகவன். தீபப்பிரகாசன், ஜி.தெய்வசிகாமணி, சிவகுமார்(இந்து நாளிதழ் இசை விமரிசகர்),எஸ்.எம்.ஏ.ராம் ஆகியோரின் படைப்புகள் இடம்பெறுகின்றன. இவை தவிர ஓவியர்கள் விஸ்வம்,ஜெயகுமார் ஆகியோரின் நவீன ஓவியங்களும் கோட்டோவியங்களும் படைப்புகளுக்கு அழகும் அர்த்தமும் சேர்க்கின்றன. சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் […]

முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!

This entry is part 33 of 34 in the series 28அக்டோபர் 2012

  பொதுவாக நவராத்திரி  தீபாவாளிக்கு முன்னம்  கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச்  சொல் , தமிழில் நவராத்திரி என்று மருவி வழங்குகிறது. இது ஒன்பது இரவைக் குறிக்கும். துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல வாழ்வையும் அருளச்  செய்த தேவியை வழிபடும் காலமாக நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் இருக்கிறது. நவராத்திரி வந்தாலே போதும்…பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏக குஷியும்  கொண்டாட்டமும்  தான். வித விதமாக  பட்டுப் பாவாடை உடுத்திக் கொண்டு […]

மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு

This entry is part 34 of 34 in the series 28அக்டோபர் 2012

மணி.கணேசன் தமிழ்க்கவிதையின் நோக்கும் போக்கும் தற்காலத்தில் நிரம்ப மாறுதல் பெற்றுவருகின்றன.பின்நவீனத்துவக் காலக்கட்ட எழுச்சிக்குப்பின் அதன் உருவம் மற்றும் உள்ளடக்கங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.மேலை இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கம்,புத்தாக்க முயற்சி,உளவியல் சிந்தனை காரணமாக நவீனத் தமிழ்க் கவிதைகளின் பாடுபொருள் தளங்களும்,படிமம்,குறியீடு,இருண்மை முதலான உத்திமுறைகளும் விரிவடைந்துள்ளன.இவை வரவேற்கத்தக்கன என்றாலும் உப்புச்சப்பில்லாத தன்னுணர்ச்சிகளும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத தன்மைகளும் கவிதைகளைச் சாதாரண மக்களிடமிருந்;து விலக்கி வைத்துள்ளன.ஏனெனில்,புரிதலும் அதன் வழிச் செயல்படுதலும் இலக்கியப் படைப்பின் உயரிய குறிக்கோள் மற்றும் வெற்றி எனலாம். அந்த […]

சிறுவன்

This entry is part 32 of 34 in the series 28அக்டோபர் 2012

  முடிவேயற்று மிகவும் நீண்ட அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த, காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில் தேயிலைச் சாயம் குடித்த, அப்பாவைத் தேடி அம்மாவுடன் *பூஸாவுக்குச் சென்ற…   கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை பையன்கள் பறித்துப் போகையில் அவர்களுக்கொரு பாடம் புகட்டிட அப்பா இல்லாததால் உதடுகளைக் கடித்து பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட…   ஒருபோதும் தான் காண அழாத அம்மா மறைவாக அழுவதைக் கண்டு உறங்காமல் உறங்குவது போல் தலையணை நனைய அழுத…   ஆற்றில் சுழிகள் உடையும் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.

This entry is part 31 of 34 in the series 28அக்டோபர் 2012

கட்டுரை:86 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் சுழற்சி திரவ வெளிக்கருவை ஆழியாய்க் கடைந்து மின் காந்தம் உற்பத்தி செய்யும் ! சூரியக் கதிர் வீச்சுக்கு கவசச் சுவர் எழுப்பும் ! கடற் தட்டு நர்த்தகம் புரிந்தால் திடீர்ச் சுனாமி ! புவித் தட்டுகள் மோதினால் பூகம்பம் ! குடற் தட்டுகள் நெளிந்தால் நில நடுக்கம் ! தொங்கிடும் பூமியில் எங்கு வாழினும் இன்னல்தான் ! ஏழு பிறப்பிலும் தொல்லைதான் ! எப்புறம் நோக்கினும் […]

மனிதாபிமானம்!!

This entry is part 30 of 34 in the series 28அக்டோபர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி சங்கருக்கு அந்த போன் வந்த போது காலை ஒன்பது மணி இருக்கும். அவருடைய சொந்த ஊரிலிருந்து பால்ய சினேகிதrர் ராமசுப்புதான் பேசினார். அவர் அடிக்கடி போன் பண்ணுபவரல்ல. தென்காசிக்குப் பக்கத்தில் இருக்கும் மங்களபுரம் கிராமத்தில் பத்தாவது வரை சங்கருடன் ஒன்றாகப் படித்தவர். காலேஜ் படிப்புக்காக சங்கர் கோயம்புத்தூர் வந்து, படிப்பு முடிந்ததும் இங்கேயே வேலை கிடைத்து வடவள்ளியில் வீடு வாங்கி குடும்பத்தோடு செட்டிலாகி விட்டார். எப்போதாவது ஊருக்குப் போகும்போது ராமசுப்புவை பார்த்து, பழைய […]

கற்பனைக் கால் வலி

This entry is part 29 of 34 in the series 28அக்டோபர் 2012

டாக்டர். ஜி. ஜான்சன் அன்று நான் உலு திராம் லண்டன் கிளினிக்கில் பகுதி நேர வேலைக்கு சென்றிருந்தேன். அதன் உரிமையாளர்  டாக்டர் நித்தியானந்தா  தலைநகரில் நடைபெறும் மருத்துவ மாநாட்டுக்கு  சென்றிருந்தார். எனக்கு அந்த கிளினிக் பிடித்திருந்தது. உலு திராம் பேருந்து நிலையத்தின் எதிரே அமைந்த கடைகளின் வரிசையில் அது அமைத்திருந்தது. அந்த சிறு டவுனின்   மையப்பகுதியும் அதுவே எனலாம். அங்கு நிறைய தொழிற்சாலைகள் இருந்ததால் வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் வங்காள தேசிகள்தான் அதிகமானோர். டாக்டர் […]

பேரரசுவின் திருத்தணி

This entry is part 28 of 34 in the series 28அக்டோபர் 2012

எல்லோரும் சுயநலத்துடன் வாழ்வதால் தாயை இழந்து, தன் குடும்பத்துக்காக மட்டும் வாழும்  ஒருவனை, பொதுநலத்தை நோக்கித் திருப்பும் பட பட பட்டாசு கதை. பத்துக்கு ஆறு இலாக்களைக் கையில் வைத்துக் கொண்டு பேரரசு இயக்கிய படம். அதில் முன்னோடியான டி.ஆரைப் பாடவைத்தது புத்திசாலித்தனம். ஆனால் எத்தனை நாட்களூக்கு ஒரே மாவை வைத்து இட்லி, தொசை, ஊத்தப்பம் என சுடுவார் என்பது ரசனைப் பசி உள்ள ரசிகனின் கேள்வி. ஐந்து நட்சத்திர ஓட்டல் சமையல்காரர், வேலை இழந்து கையேந்தி […]