லூப்பர் ( ஆங்கிலம் )

This entry is part 27 of 34 in the series 28அக்டோபர் 2012

ஸ்பீல்பெர்க்கின்  பேக் டு பியூச்சரையும் ஆர்னால்டின் டெர்மினேட்டரையும் கலந்து கட்டி அடித்த சயின்ஸ் பிக்ஷன் கதை. கிபி 2074ல் கால இயந்திரத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் அரசாங்கம் தடை செய்த அதைக் கொண்டு, ரெயின் மேக்கர், வயதானவர்களை, 2044க்கு அனுப்பி,  அழிக்கிறான். அதைச் செய்து முடிக்கும் கொலைகாரப் படைக்கு லூப்பர்கள் என்று பெயர். அவர்கள் கிபி 2044ல் வாழும் இளைஞர்கள். கொன்றால், பரிசு, செத்தவன் முதுகில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளிக் கட்டிகள். ஒரு லூப்பர் 2074ல் இருந்து வரும், […]

“தீபாவளி…… தீரா வலி….. !”

This entry is part 25 of 34 in the series 28அக்டோபர் 2012

  “அக்னி வெடிகள் & பட்டாசுகள்”  இரத்தச் சிவப்பில் எழுத்துக்கள் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. முதலைப்பட்டி கிராமத்திலேயே பெயர் பெற்ற பட்டாசு ஆலையில் நானும்  ஒன்று என்ற கர்வம் அந்தப் பெயர்ப் பலகையின் பிரகாசக் கம்பீரமே சொல்லிவிடும். பட்டாசு ஆலைக்குள் இருக்கும் அறைக்குள்ளே தொழிலாளர்கள் வெகு மும்முரமாக இயந்திர கதியில் பட்டாசுகளை அடுக்கி அட்டைப் பெட்டிக்குள் திணித்து லேபிள்  ஒட்டி, டேப் போட்டு மூடி விற்பனைக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை அவ்வளவு துரிதமாக வேலை […]

மரப்பாச்சி இல்லாத கொலு

This entry is part 24 of 34 in the series 28அக்டோபர் 2012

  ஐந்து ஏழாகிப் பின் ஒன்பதான படிகள் முழுவதும் பொம்மைகள்! குடும்பத்துடன் நிற்கும் ராமர் ராசலீலையில் கிருஷ்ணர் மழலைபொங்கும் முகத்தின்பின் அனாவசியக் குடைதாங்கி நிற்கும் வாமனன் நடுவான தசாவதாரம் ராகவேந்திரர் புத்தர் காமதேனு மஹாலக்ஷ்மி என நீண்ட வரிசையின் கடைசியில் செட்டியாரும் மனைவியும் காய்கறி பழங்களோடு பலசரக்குக்கடை பரப்பி அமர்ந்திருக்க எப்படி எல்லாமோ மாற்றி அமைத்து வைத்த கொலுவில்   முதலில் உட்கார்ந்திருக்கும் கணபதியோடு பஞ்சகச்சமோ மடிசாரோ கோட்சூட்டோ கவுனோ எதைத் தைத்துப் போட்டாலும் கூர்மூக்கின் கீழ் […]

தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்

This entry is part 23 of 34 in the series 28அக்டோபர் 2012

இப்படியும் ஒரு புத்தகம் இந்நாட்களில் த்மிழில் எழுதப்படும், அதுவும் அதற்குரிய கௌரவத்தோடும் ஆர்வத்தோடும் பிரசுரிக்கப்படும் என்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. கண்முன் இருப்பது விட்டல்ராவ் எழுதியுள்ள  வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் பழம் நினைவுக் குறிப்புகள். மூர்மார்க்கெட் தீக்கு இரையானதோடு (அல்லது இரையாக்கப்பட்டதோடு?) கருகிச் சாம்பலானது, பழையன கழிதல் ஆகாது, அந்த இடத்தை  ஒரு புதிய ரயில் நிலையம்தான்  பறித்துக் கொண்டது என்றாலும், மூர்மார்க்கெட் தன் நிழலில் வாழ்வு கொடுத்தது பழம் புத்தகக் குவியல்களுக்கும், […]

தபால்காரர்

This entry is part 22 of 34 in the series 28அக்டோபர் 2012

1960ல் ஆறாம் வகுப்பு நாட்கள் தண்ணீரும் தாகமுமாய்க் கலந்த நண்பனைப் பிரிகிறேன் ஈரம் சேர்த்துச் சொன்னான் ‘போய்க் கடிதம் எழுதுகிறேன்’ ஏழெட்டு நாட்களாய் என்னைக் கிழித்துப் போட்ட அந்தக் கடிதம் வந்தது இந்த நாட்களில்தான் தபால்காரர் எனக்குள் இன்னொரு இதயமானார் தொடர்ந்தன பல நட்புகள் பிரிவுகள் அடி வயிற்றில் உலை ஏற்றிய எதிர்பார்ப்புக் கடிதங்கள் அந்த நாட்களில் பகல் 12முதல் 2வரை நான் நெஞ்சைக் கிழித்தால் அங்கு தபால்காரர்தான் இருப்பார் கல்லூரி வேலை கல்யாண மெல்லாம் கடவுள் […]

மணலும், நுரையும்

This entry is part 20 of 34 in the series 28அக்டோபர் 2012

SAND AND FOAM – KHALIL GIBRAN (1926)      “Half of what I say is meaningless, but I say it so that the other half may reach you.”   மணலும், நுரையும்   அனுதினமும், இந்தக் கரையோரங்களில் அந்த மணல் மற்றுமந்த நுரையினிடையே, நடை பயின்று கொண்டிருக்கிறேன் யான் உயர்ந்த அந்த அலைகள் எமது பாதச்சுவடுகளை அழித்துவிடக்கூடும், மேலும் அந்த வளி அந்த நுரையையும் ஊதித்தள்ளிவிடும். ஆயினும் […]

பழமொழிகளில் கல்லும் கல்லெறியும்

This entry is part 19 of 34 in the series 28அக்டோபர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      கற்களைக் குறித்த பல்வேறு கதைகள் மக்களின் வழக்காறுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கல்லும் ஒரு கதையினை நமக்கு எடுத்துரைக்கின்றன. நடைபாதையில் இரு கற்களை நட்டு அதன் மீது ஒரு கல்லைப் படுக்க வைத்திருப்பார்கள். இது சூலோடு இறந்து போன பெண்ணின் நினைவாக நடப்பட்ட கல்லாகும். இதனைச் சுமைதாங்கிக் கல் என்று கூறுவர். நிலத்தின் நான்கு எல்லைகளைக் குறிப்பிட ஊன்றப்படும் எல்லைக்கல் அளவுக் […]

கவிதைகள்

This entry is part 18 of 34 in the series 28அக்டோபர் 2012

இப்படியே… இதோ மற்றொரு விடியல் அலுப்பில்லாமல் காலையில் எழ முடிகிறதா பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளுக்குத் தான் தேவை சுப்ரபாதம் அமிர்தம் உண்டவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் அணை வற்றியதற்காக சபிக்கப்பட்ட மன்மதன் தான் சகலத்தையும் ஆள்கிறான் காவி அணிந்து விட்டாலே மோட்சம் கிடைத்துவிடுமா எவர் போடும் கையெழுத்தோ மக்களின் தலையெழுத்தாவது தான் ஜனநாயகமா போராட்டங்களுக்கு பதிலடி தோட்டாக்களாய் இருந்தால் அஹிம்சையை கைவிட்டு அவர்கள் ஆயுதத்தை கையில் எடுத்தால் கல்லடிபட்ட கண்ணாடியாய் இந்தியா விரிசலடைந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. […]

தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில்

This entry is part 17 of 34 in the series 28அக்டோபர் 2012

சுயகம்பீரத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் தொகுதி சுய எள்ள,சுய விமர்சனம் எல்லாம் கலந்து செல்கிறது. ஏதோ ஒன்றைத் தேடுதல், கிடைத்ததை வைத்து திருப்தி அடைதல் என்ற மத்தியதர மனப்பான்மை பல கதைகளில் காணக் கிடைக்கிறது. மொத்தம் பத்துக் கதைகள். எல்லாமே பொதுவாக மனம் சார்ந்தவைதான். மிகப் பெரும்பாலும் ஒரு ஆணின் பார்வையிலும்  ஓரிரு கதைகள் மட்டும் பெண்களின் பார்வையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் வரும் கதைகள் எல்லாம் விசித்திரம் நிரம்பியவை. யாராலும் புரிந்து கொள்ள முடியாத மந்திரப் பேழை போல […]

ஆரோகணம் & பிட்சா – டிஜிடல் தமிழ் சினிமா புரட்சியின் மைல்கல்கள்

This entry is part 16 of 34 in the series 28அக்டோபர் 2012

இந்த மாதம் தமிழ் சினிமாவிற்கு “நல்ல காலம் பொறக்குது” என்று கூவிய காலம். இன்று, இணையம் விசாலமான அறிவு அலசல் பாதையைத் திறந்து விட்டிருக்கிறது. சொல்லப் போனால், ஃபிலிம் கொண்டு பதிவு செய்யப்படும் சினிமாக்களின் பளிச்சான இயற்கைக்கு முரணான பதிவு போல் இல்லாமல் டிஜிடலில் உள்ளது உள்ளபடி பதிவு கிடைக்கிறது. சினிமா திரையரங்குகள் அவ்வளவு தான் என்ற போது சத்யம் சினிமா தனது திரையரங்கு முறையை மாற்றி அமைத்து தொழிற்நுட்ப முன்னேற்றத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது. வெற்றி […]