குமரி எஸ். நீலகண்டன் தீபாவளிக் கோலாகலத்தில் புகை மூட்டமாய் வானம்… ஏவியவர்களின் உற்சாகங்கள் வானத்தில் ஒளிப் பொதிகளாய் வானத்தில் சிதறின… நிலத்திலிருந்து உருவான மின்னலும் இடியும் மேகத்தில் போய் விழுந்தன… நகரத்தின் ஒற்றை மரங்களில் கூடு கட்டியப் பறவைகள் பூகம்பமென்று கூட்டினை விட்டு பறந்த போது புகை மூட்டத்தில் சிக்கிய விமானமாய் நிற்பதற்கு வீடுகள் இடங்கள் தேடி நில்லாமல் மிதந்தன மேகத்தில்…. இரைகளின்றி அமாவாசை விரதமிருந்தன பறவைகள். தீபாவளியை பறவைகள் எப்படிக் கொண்டாடுகின்றன என்று ஒரு பறவையிடம் […]
வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked gay French black priest about the intimacy of a bisexual revolutionary with his wife’s lover who happens to be the mistress of the Spanish dictator and his lust for Achilles, the Greek warrior revived from the pages of an […]
என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த மொழி சிதைவுறாமல்., சொல்லவந்த கருத்துக்கள் பிழைபடாமல் சொல்வது கடினம். ஒரு மொழிபெயர்ப்பாளன் வாசகர்க்கும், அந்த நூலை எழுதிய எழுத்தாளனுக்கும் உண்மையாய் இருக்க வேண்டும். தன் கருத்து. ஒர் சார்பு நிலை எந்த இடத்திலும் வெளிப்பட்டுவிடாமல் காக்க வேண்டும். ஒரு சிருஷ்டிகர்த்தாவை விட கடினமான பணி அதைப் போன்ற குறைவில்லாத உயிர் சிற்பம் […]
வெளி நாட்டான் சமாச்சாரம் அநாச்சாரம் என்று உள் நாட்டு மாட்டு வண்டியையும் வில் அம்பு ஈட்டியையும் நம்பிக்கிடந்தோம். மின்சாரம் என்றால் பேய் பிசாசு என்று ஓடி ஒளிந்து கிடந்தோம். தண்ணீரை குடம் குடமாய் கொட்டி குடமுழுக்கு செய்து புரியாத இரைச்சல்களில் புல்லரித்துக்கிடந்தோம். அதே தண்ணீரில் புட்டு அவித்து தின்னும்போது கூட நமக்குதெரியவில்லை ஆயிரம் ஆயிரம் டன்களை இழுத்துச்செல்லும் நீராவிக்குதிரை அதில் இருக்கிறது என்று. அதற்கும் ஒரு ஜேம்ஸ்வாட் தான் நமக்குத்தேவை. கல்லுக்கடவுளுக்கு காலம் காலமாய் பொங்கல் புளியோதரை […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “முதியோர் போதனையை நீ தேடிக் கேள். அவரது கண்கள் பல்லாண்டுகளின் முகத்தைக் கூர்ந்து நோக்கி வந்தவை. அவரது செவிகள் வாழ்க்கையின் குரல்களைக் கேட்டிருப்பவை. அவரது அறிவுரைகளை நீ வெறுத்தாலும் அவற்றுக்கு உன் கவனத்தைச் செலுத்து.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! காதலியின் முதல் ஓரப் பார்வை கடல் மீது நடக்கும் ஆன்ம உணர்ச்சி. வானுலகையும் பூவுலகையும் உதய […]
சண்டை நாட்களில் எதிரியும் காதல் நாட்களில் சகியும் தியாக நாட்களில் தாயும் ( கல்யாணத்திற்கு முன்) கேளிக்கை நிறைந்தவற்றில் நண்பர்களும் என அந்தந்த நாட்களில் நிறைந்தவர்களை நாட்குறிப்புகள் நிரப்பியிருந்தன. நான் நிரம்பிய நாட்கள் வெறும் வெற்றுத்தாள்தானோ என அயர்ந்தபோது அடுத்தவர் அடர்ந்தவற்றில் நீதான் கரைந்திருக்கிறாய் எனப் படபடக்குது டைரியின் பக்கங்கள் _ ரமணி
“நெஞ்சுக்குள்ளே இருக்குது உப்புக்கண்டம்; நெருப்புக் கண்ட இடத்திலே சுட்டுத் தின்னு”. இது தென் தமிழ் நாட்டில் உள்ள சொலவடைகளில் ஒன்று. இங்கே உப்புக் கண்டம் என்பது உணவுப் பொருள் அல்ல. ஒரு படிமம். “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”, “பனை மரத்துல ஏறுகிறவனை எட்டின வரைக்குந்தான் தாங்க இயலும்” , ” அவன் பேனையும் எடுப்பான்; காதையும் அறுப்பான்”, “அம்மா பாடு அம்மணம்; கும்பகோணத்திலே கோதானம்”,”தென்னை மரத்தில தேள் கொட்டிச்சாம்; பனை மரத்தில […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மரணம் வந்திடும் பொழுது விடிவது போல் ! புன்முறுவ லுடன் நீ எழுந்த ருள்வாய் உனது துயராய்க் கருதி ! கனவு இதுவாய் இருக்க வேறு காரணம் உள்ளது ! கடுமை யாக உணர முடியாத கொடுமை ! உலக மாயத்தில் நடப்பது இவை ! மறையாது கடப்பவை மரணம் நடமிடும் போது ! நிரந்தர மானது விபரமாய் விளக்கப் பட வேண்டியது […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மீட்டெழுச்சி நாளில் உனது மேனி உனக் கெதிராய்ச் சாட்சி சொல்லும் ! “களவாடி னேன்”, என்று உனது கரங்கள் கூறும் ! “இழிவு செய்தேன்” என்று உன்வாய் இதழ்கள் உரைக்கும் ! “போகக் கூடா இடமெல்லாம் போனேன்” என்று உனது கால்கள் சொல்லும் ! “நானும்தான்” என்று உனது பாலுறவுக் குறியும் சொல்லும் ! பிரார்த்தனை வழிபாட்டு வரிகள் உனக்கு வஞ்சக மொழியாய்த் […]
நேஷனல் ஜேக்ரஃபி யின் 12 அக்டோபர் 2011 இதழில் ஜே.ரிச்சார்டு காட்ட் தன் கட்டுரையில் 2011ன் இயற்பியலுக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற இயற்பியல் சாரம் பற்றி குறிப்பிடுகிறார். இப்பரிசு ஆடம்ரீஸ் ,ப்ரியன் ஸ்மிட் மற்றும் சால் பெர்ல்முட்டர் ஆகிய விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது.இவர்களும் விண்வெளி இயற்பியலில் நிபுணர்கள் தான்.சென்ற நூற்றாண்டுக்கோட்பாடான “பிரபஞ்ச விரிவு”தனை தம் விண்வெளி பயணத்தின் அடிப்படையில் கண்டறிந்து விவரித்தமைக்கு தான் இந்த நோபல் பரிசு.விண்வெளியில் இந்த “மூவர் உலா”பற்றி நம் ஒட்டக்கூத்தர் அறிந்திருந்தால் […]