ஆண்கள் மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன. முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் […]
மணி.கணேசன் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த அபசுரங்களையெல்லாம் ஒருசேர்த்து உரத்தக் குரலில் உயிரைக் கீறும் யாரும் கேட்டிடாத முரட்டு மலைப்பாட்டாக முழங்கிக் கொண்டிருக்கும் கன்னங்கரியக் குயிற்குஞ்சைக் கூரிய தம் கொடும் அலகுகளால் கொத்திக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன ஆவேசப்பட்ட அண்டங்காக்கைகள் கூட்டமாக. அப்பாடலின் சுருதி முன்பைவிட பலமாக ஓங்காரித்ததில் அதுவரை நிச்சலனமாக நின்றிருந்த கொள்ளைப்போகும் கிரானைட் மலைகளின் அடையாளம் மழிக்கப்பட்டப் பசுங்காடுகள் புதிதாய்த் துளிர்த்த தளிர்களுடன் கந்தக மண்ணில் தம் இன்னுயிரை அடகுவைத்து வெடிமருந்துகளுக்குச் சாம்பலான பட்டாசுமனிதர்களின் கருத்தக் காற்றைப் […]
அன்பின் ஆசிரியருக்கு, இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா நேற்று 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன. இந் நிகழ்வில், கடந்த வருடம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
வருவதையும் போவதையும் கூற முடியாத குளிரொன்றைப் போன்ற அது தென்படாதெனினும் உணரலாம் எம்மைச் சுற்றி இருப்பதை அது எம்மைத் தூண்டும் கண்டதையும் காணாதது போல வாய் பொத்தி, விழிகள் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்க பசியின் போதும் குருதி பீறிடும் போதும் அடுத்தவன் செத்துக் கொண்டிருக்கும் போதும் அமைதியாக சடலங்களின் மேலால் பாய்ந்து நாம் வேலைக்குச் செல்லும் வரை அது என்னது? எங்கிருந்து வந்தது? – இஸுரு சாமர […]
The forerunner – Love – Khalil Gibran கலீல் ஜிப்ரானின் காதல் சிம்மம் நீரருந்த வருகிற அதே ஓடையிலிருந்தே அந்தக் குள்ளநரியும் மூஞ்சூறும் நீரருந்துகிறது என்கிறார்கள் அவர்கள். இறந்து கிடக்குமோர் உடலினுள்ளே கழுகும், ராஜாளியும் தத்தம் அலகினால் தோண்டும்போது, அச்சவத்தின் முன்னிலையில் இரண்டும் ஒன்றுக்கொன்று சமாதானமாகவே உள்ளதென்கிறார்கள் அவர்கள். ஓ காதல் என்ற இதன் செருக்குடைய கரம் எம் இச்சைகளுக்குக் கடிவாளமிட்டதன் மூலம் எம் பசியையும் நீர்வேட்கையையும் எழுப்பிவிட்டது, கண்ணியம் மற்றும் தற்பெருமைக்காக எம்முள் இருக்கும் […]
மீளமுடியாத ஒரு சிறைக்குள் நாமெல்லாம் மாட்டிக் கொண்டிருப்பது போல ஒரு கனவுச் சித்திரத்தை அங்கங்கே உண்டுபண்ணுகிறது மதிலுகள். பெண்ணின் வாசனை கூட ஒரு மதில்தான். மீளமுடியாத மதில். அது காதலியின் வாசனையாய் இருக்கலாம். அல்லது மனைவியின் ஏன் அம்மாவினதும் கூட. இந்த வாசனைகள் எழுப்பும் சிறைகளைத் தாண்டி ஒரு ஆணால் எப்போதுமே பயணிக்க முடிந்ததில்லை. விடுதலை பெற முடிந்ததில்லை. உலகம் என்னும் பிரபஞ்சம் என்னும் இன்னொரு சிறைக்குள் அடைபட்டே அலைகிறான் வாழ்நாளெல்லாம். ஒரு சிறை கூட பெண் […]
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இயற்கையான இயல்புகளும் இடையில் மனிதனே விதித்த சில விதிகளூம் ஒன்றிணைந்து இயங்குவது வாழ்வியல் பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்புடைத்தே என்ற இலக்கணக்கோடும் வரைந்து கொண்டோம். மனிதன் உணர்வுகளால் ஆன ஓர் பிண்டம். யானையை அடக்க முடிந்தவனுக்கு அவன் மனத்தை தனக்குள் ஆளுமைப் படுத்துவது கடினமான செயலாக இருக்கின்றது. மனிதனின் அமைதிக்கு அறியாமை தேவையா அல்லது அறிவு சிறந்ததா? அறிவினால் ஒவ்வொன்றையும் கூறுபோட்டு பார்த்துக் கொண்டே போகையில், […]
அமாவாசைக்கு அடுத்த நாள் காலை செடிகள் எதிலும் ஒரு மொட்டும் மிஞ்சவில்லை தெருவெங்கும் மொட்டுக்கள் இறைந்து கிடந்தன முற்றத்தில் திண்ணையில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சேலைகளும் தாவணிகளும் வெவ்வேறு வீட்டுக்கு இடம் மாறி இருந்தன உயரமான மரத்தில் சிறுவன் ஏறி எடுக்க பயந்து விட்டுவைத்த பட்டம் குளக்கரையில் கிடந்தது ஒரு வெள்ளை மேகம் வானவில்லின் ஒரு துண்டை மறைத்தும் காட்டியும் மகிழ்ந்து கொண்டிருந்தது அம்மன் கழுத்தில் நகைகள் இருக்க பூ மாலைகளை மட்டும் காணவில்லை கோயிலின் பிற […]