நிலாவும் குதிரையும்

This entry is part 35 of 45 in the series 9 அக்டோபர் 2011

குமரி எஸ். நீலகண்டன்   பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய்.   ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு மேய்ந்திருக்க இறுமாப்புடன் வானம் நோக்கியது.   வட்ட நிலாவைக் கண்டு அழகிய இளவரசி தன்மேல் சவாரி செய்வதாய் நினைத்துக் கொண்டது.   முதுகில் இருப்பதாய் கூடத் தெரியவில்லை… எவ்வளவு மெல்லிய உடலுடன் என் மேல் சவாரி செய்கிறாளென இன்னும் குதூகலமாய் குதித்து குதித்து பறந்தது.   அங்கே ஒரு அழகிய தாமரைக் குளம் வந்தது. […]

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை

This entry is part 34 of 45 in the series 9 அக்டோபர் 2011

                        காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, […]

சிற்சில

This entry is part 33 of 45 in the series 9 அக்டோபர் 2011

சிற்சில சொல்லாடல்கள் பிரித்து அறியப்படாமலே  வாதங்கள் என மேல்போர்வை கொண்டு ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன .. மீட்சி என்னும் சொல்லறியா அவை தனக்குள் முடங்கி  “தான் ” விடுத்து.. தர்க்கத்தில் கலந்து பிணைந்து  பின்னர் தானாய் கரைந்தும் விடுகின்றன அவைகளுள் சிலவோ நீரினடியில் வேர் பிடித்து தண்டின் வழி உண்டு எங்காவது  மலர சேற்றின் அடியில் இன்னும் சிக்கி மூச்சடக்கி கிடக்கின்றன அந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை … ஷம்மி முத்துவேல்

Strangers on a Car

This entry is part 32 of 45 in the series 9 அக்டோபர் 2011

இந்த அப்பட்டமான Alfred Hitchcock- ன் காப்பி படத்துக்கு விமர்சனம் எதுக்கு ? அப்டீன்னு முன்முடிவோட படம் பார்க்கப்போன என்னை தனது வலுவான திரைக்கதையால விமர்சனம் எழுத வெச்ச இயக்குனர் ராஜன் மாதவ்’விற்கு வாழ்த்துக்கள்.   எல்லாமே சரியா திட்டமிடப்படுது , எங்க திரும்பணும், எப்ப அடிக்கணும்,எப்ப சுடணும் என எல்லாமே கரெக்ட்டா எழுதி, ப்ளான் பண்ணி ஒரு கொலையைப்பண்றத காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு , Plan B கூட வைத்துக்கொண்டு ,திரையில் காட்சிகளை நகர்த்தி , […]

சாமியாரும் ஆயிரங்களும்

This entry is part 31 of 45 in the series 9 அக்டோபர் 2011

                                                                                                              சித்தநாத பூபதி ஒன்று மட்டும் நிச்சயம். நாம் கொஞ்சம் நெகிழ்வாக இருந்து விட்டால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் இத்தகைய சூழ்நிலையச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் . மற்றவர்களுக்கு வரும் துன்பம் நமக்கு வரும்போது அது வெறும் தகவல் இல்லை. எனக்கு அப்படி ஒரு துன்பம் வந்தபோது துன்பமாகத்தான் இருந்த்து. அதைத் தனக்கு வந்த துன்பமாகவே கருதிய நண்பர் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்காக வாருங்கள் என்று வழக்கமான மனைவி செண்டிமெண்ட்டைப் பிடித்துக் கொண்டு […]

கொக்கும் மீனும்..

This entry is part 30 of 45 in the series 9 அக்டோபர் 2011

  கால்வலி கண்டதுதான் மிச்சம்- கொக்குக்கு.. ஓடையில் வரவில்லை ஒரு மீனும்.. வரும் மீனையெல்லாம் வலைபோட்டுத் தடுத்துவிட்டான் குத்தகைதாரன்.. கண்மாய் மீன்களுக்குக் கரைகாணா சந்தேஷம்- இரை கிடைக்கிறதாம் இலவசமாக.. மொத்தமாய் இரையாகப் போவது இப்போது தெரியாது.. இதுதான் இப்போது அரசியலோ.. அப்படியெனில், கொக்கும் மீனும் நாம் தான் !        -செண்பக ஜெகதீசன்..

துளிப்பாக்கள் (ஹைக்கூ)

This entry is part 29 of 45 in the series 9 அக்டோபர் 2011

சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம் ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல் உணவின் முடிவு மறுவுலகின் துவக்கம் – அதுவே மரணம் ஊரை இணைப்பதும் ஊரைப் பிரிப்பதும் – அதே தெருக்கள் பிறரைக் காப்பதால் தன்னைக் காப்பது – அதே தர்மம் குழந்தைக்கு வந்து பொம்மை நிறுத்தியதும் பெரியதாய் வளர்ந்ததும் […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 19

This entry is part 28 of 45 in the series 9 அக்டோபர் 2011

வே.சபாநாயகம். அண்மையில் பவள விழாக் கண்ட கவிஞர்.சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னுடைய கல்லூரித் தோழர். அண்ணாமலைப் பல்கலையில் 1954ல் அவர் தமிழ் ஆனர்ஸ் படித்த அதே காலத்தில் நான் பி.எஸ்.சி கணிதம் பயின்றேன். ஒரே விடுதியில் வெவ்வேறு சிறகுகளில் தங்கிப் படித்தோம். அவருடைய வகுப்புத் தோழரும் எங்கள் வட்டாரத்துக்காரருமான ‘மருதூர் இளங்கண்ணன்’ (பாலகிருஷ்ணன்) என்ற நண்பர் மூலம் தான் எனக்கு சிற்பியின் அறிமுகம் கிட்டியது. அப்போது ‘சிற்பி’ என்ற பெயரில் தான் கவிதைகள் எழுதி வந்தார். ‘சிற்பி’ […]

நாயுடு மெஸ்

This entry is part 27 of 45 in the series 9 அக்டோபர் 2011

    தண்ணி யடிசசு வந்தா தடாவாமே அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண நாயுடு மெஸ்படி ஏறு..   வாசல் எருமைங்க வால்தூக்கு தேவிலகு ஏசாதே நீமெர்சல் ஆவாதே – ராசால்லே ஓரமாய் ஆம்லெட்மேல் ஓடுதுபார் மாட்டுஈ காரம்போர்ட் காய்கணக்கா சுண்டு.   ஈமூ கறி’பா எடுத்து ருசிபாரு ஏமி முளிக்கறே ஏனத்தக் காமி தயிர்வடை ஓணும்னு தம்பிவந்து நிக்கறான் அய்ர்ர்வூட்டுப் புள்ள அனுப்பு.   (ஈமு Emu – நெருப்புக்கோழி […]

(79) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 26 of 45 in the series 9 அக்டோபர் 2011

  மிருணாலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நினைவுகள் அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய அனுபவங்களையும் பற்றிப் பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்கவேண்டும். மறந்து விட்டது பர்றிச் சொன்னேன்.   பஞ்சாட்சரம் F.A. & CAO (Financial Adviser and Chief Accounts Officer)-ன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரோடைத் தாண்டி இரண்டு மூன்று […]