ஒளிகளாய் நிரம்பியுள்ளது எந்தன் அறைகள் சிந்தனை சிதறல்களில் . மேலும் மேலும் ஒளி பெறுகிறது உந்தன் வருகையை நோக்கி . வாசல்களில் என் மனதின் மிச்சத்தை உளவு வைத்தேன் அவை சிறு சிறு ஒலிகளாக கோர்க்கப்படுகிறது மாலை சூட. நெருங்குதலில் தயக்கம் கூடுகிறது தவிப்புகள் அனைத்தும் மவுனமாகியது நம்மின் புரிதலில் . என்று ஆட்கொண்டேன் உன் சுகமானநினைவுகளை . நினைத்து பார்கையில் பல நிலைகளில் உன் பாதிப்புகளின் மிச்சம் எராளமாக நிறைந்துள்ளது . நான் அதை அகற்றமுற்படும் […]
தொலைத்தது எங்கே எனத் தெரியவில்லை தேடுவது எங்கே எனவும் பிடிபடாததாக. இருட்டிலும் வெளிச்சத்திலும் துழாவிக் கொண்டிருந்தேன் தொலைத்த இடம் என நம்பப்பட்ட இடத்தில்.. அது என்னுடையதாகத்தான் இருந்ததாகத் தோன்றியது வேறொன்றுடையதாகவும் இருந்திருக்கலாம். என்னுடைய உணர்வில் அது என்னுடையதாக மட்டும்.,,.. அதனுடைய் உணர்வில் எப்படி என அறியமுடியவில்லை வைத்திருந்த தடம் உறுத்துகிறது அவ்வப்போது. விட்டுவிட்ட தடமும். ஜந்துவும் ஜடமுமாய் இல்லாமல் அது முழு ஜீவனோடிருந்தது. தொலைக்காமல் இருந்திருந்தால் தேடும் கஷ்டமும் இருந்திருகாது. மோகம் அழியவும்., விரக்தி தொலையவும். ஞானம் […]
இப்படியொரு புயல் அடிக்குமென்று எந்த அரசியல்வாதியும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை இப்படியொரு கத்தி கழுத்திற்கு வருமென்று தேசத்தை சுரண்டுவோர் யாரும் சிந்தித்து இருக்கவும் வாய்ப்பில்லை . இந்த தேசத்தேரை நல்வழியில் செலுத்த எந்தக் கறை படியாத கரம் நீளுமோ என்று தவித்திருந்த நமக்கெல்லாம் காலதேவன் நேரம் பார்த்து அறிமுகம் செய்கிறான் அஹிம்சை வழியில் தர்மம் காக்கப்படும் என்று அருள் பாலிக்கிறான். அவர் நாடாள்பவர்களுக்கு இடைமறிக்கும் நந்தியாய் தோன்றினாலும் சமூகத்தின் நற்கதிக்கு வழிகாட்டும் ரூபமகிறார் இன்னொரு காந்தியாய் […]
சருகுப் புதரிடை மூங்கிலைமூங்கிலோடு செருகியுரசி நெருப்பைக் கடைகிறான். அம்மா தயிர் கடைகிற அதே பாவனையோடு . டிஸ்கவரி சேனலில் நான் கண்ட காட்சி வேகவேகமாக கடையக் கடைய சட்டென்று புகை அவிழ்கிறது நெருப்புக் கங்குடன் புகையும் அக் கூட்டை கைகளில் ஏந்தி எடுக்கிறான் அக்னி குஞ்சொன்றை அன்று தான் கண்டேன். ரவிஉதயன்
ஒரு பிள்ளை வெகு நேரமாகியும் இரவு வீட்டுக்கு வரவில்லை யென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அந்தப் பிள்ளை சாரதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்ட தென்று. ஒரு குடும்பத்தில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை உண்டென்றால் விளங்கிக் கொள்ளுங்கள் அது சாரதா வீட்டில் தீர்க்கப்படு மென்று. வாழையூரில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அதிசயப் பெண்மணிதான் சாரதாம்மாள். வீட்டில் விறகடுப்புதான். அதில் நெருப்பு அணைந்ததே யில்லை. யாரிந்த சாரதாம்மாள். இவரின் கடந்த காலக் கதையை கால் நிமிடத்தில் சொல்லிவிடலாம். கேட்கத் […]
(கட்டுரை : 73) (Was the Universe Born Spinning ?) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தில் சுழலாத அண்ட கோளமே இல்லை ! பிண்டமும் இல்லை ! பரிதி மண்டலமும் இல்லை ! ஒருமுகம் காட்டிச் தன்னச்சில் உலகினைச் சுற்றும் கருநிலவு ! பம்பரம் போல் சுழன்று பரிதியை வலம் வரும் நீர்க்கோள் பூமி ! சூரியனும் தன்னச்சில் சுழல்கிறது. அகக் கோள்களும் புறக் கோள்களும் தம்தம் அச்சில் சுழன்று […]
எதையும் யோசிக்காதபோதும், எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும், ஒரு பாடலையும் பாடாதபோதும், என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை என் விரல்களால் தூண்ட இயலாதபோதும், என் கவிதைகளில் காதல் இல்லாதபோதும், என் கண்களில் ஈரம் குறையும் போதும், என்னைச்சுற்றி நடப்பவை பற்றி எனக்கு சிறிதும் அக்கறையில்லாத போதும், எனக்கென சாலையோரப்பெட்டிக்கடைக்காரன் ரொட்டியை மீதம் வைத்திருக்காத போதும், தூரத்தில் ஒலிக்கும் தடதடக்கும் ரயிலின் ஓசை சட்டென மறையும் போதும், என்றும் வரும் என நம்பிக்காத்திருந்த மழைக்குருவி […]
சத்யானந்தன் உயர்வு தாழ்வு, நன்மை தீமை, மகிழ்ச்சி துன்பம், உண்மை பொய், இருப்பது இல்லாதது, இனிப்பு கசப்பு இப்படி இரன்டில் ஒன்றைத் தேடுவதாகவோ அல்லது இனங்காணுவதாகவோ வாழ்க்கைகள் கழிந்து வரலாறாய் மாறின. ஆன்மீகம் என்பது இந்த இருமை நிலைகளுக்கு அப்பாற்பட்டே இருக்கிறது. நமது தேடலை இந்த இருமைகளுக்கு மட்டுமே பழகிய பார்வை த்டை செய்கிறது. புரிதலுக்கான ஒரே ஒரு திசை காட்டியாக இந்த இருமை புற உலகு சம்பந்தப்பட்டதென்பதும் ஆன்மீகம் அக உலகிலானது என்று ஜென் வழி […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழு பாப மரணத் தேவைகள் என்று குறிப்பிடப்படுபவை : உணவு, உடை, எரிபொருள், வரி அடைப்பு, சுய மதிப்பு, குழந்தைகள். இந்த ஏழு மைல் கற்களை மனிதன் சுமைதாங்கி மேம்படுத்த பணத்தை தவிர வேறெதுவும் உதவாது. இவற்றைச் சீராக்காது மனித ஆன்மா உன்னதம் அடைய முடியாது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : […]
சகுந்தலா மெய்யப்பன் பூரணச் சந்திர சாமியார் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது! தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை! சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார்! கன்னியாகுமரி முதல் பத்திரிநாத் வரை அவர் ஏறாத கோயிலில்லை! பார்க்காத மதாச்சாரியார்களில்லை! செய்யாத் தத்துவ விசாரணையில்லை! எதற்காக? சொர்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக! ‘சொர்க்கம், சொர்க்கம்’ என்று எல்லோரும் சொல்லுகிறார்களே, அது எப்படி இருக்கும்? எங்கே இருக்கிறது? அதற்குப் போகும் வழி தான் என்ன? யாராவது […]