Posted in

நான் ஒரு மலையாதல் அல்லது என்னில் ஒரு மலை உருவாதல்

This entry is part 17 of 19 in the series 25 ஜூன் 2023

கோவிந்த் பகவான்

என்னில் ஒரு மலை 

மெல்ல உருவாகிக்கொண்டிருக்கிறது

நெடிதுயர்ந்த மரங்களின் வேர்முனைப் பிளக்க

என் மலை முழுக்க குருதி நீச்சம்.

வெயிலுலரும் பாறைகளின் கனத்தால்

என் மலை முழுக்க தகிக்கும் வெப்பம்.

சலசலக்கும் சுனைநீர் பாய

என் மலை முழுக்க மூலிகை வாசம்.

உச்சிக் கிளையில் அடைந்து கிடக்கிற தேனடை முழுக்க

என் மலையின் இரகசியம்.

அந்திப்பொழுதில் கூடு விரையும்  பறவையின் கீச்சொலிகள்

என் மலையின் அன்றைய முனகல்கள்.

உதிரும் இலைகளின் நிசப்தம் 

எனதிந்த மலையின் அன்றாடப் பெருமூச்சு.

  -கோவிந்த் பகவான்

Series Navigationவாளி கசியும் வாழ்வுரோஹிணி கனகராஜ் கவிதைகள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *