This entry is part 3 of 7 in the series 6 செப்டம்பர் 2026

– ஏ.நஸ்புள்ளாஹ்

எம்.எம்.நௌஷாத் எழுதிய பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் நாவலின் ஸ்டைல் என்றால் என்ன? வறட்டுத்தனமான வார்த்தை அலங்காரங்கள் இருக்காது. சட்டென்று சுளீர் என்று அறையும் எதார்த்தம் இருக்கும். சயின்ஸ், சைக்காலஜி, நக்கல், நையாண்டி, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனின் மூளைக்குள் நடக்கும் மின்கடத்தல் போன்ற வேகம். இந்த நாவலை வாசிக்கும்போதும் அதே அலைவரிசை நமக்குக் கிடைக்கிறது.

​இருபதாம் நூற்றாண்டின் சாம்பலில் சமைக்கப்பட்ட பேகம் கதீஜா என்ற சாமானியப் பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை நௌஷாத் எளிய கூர்மையான வரிகளில் பதிவு செய்திருக்கிறார்.

​நூலின் முகப்புப் பக்கத்தைப் பார்த்ததுமே நமக்கு ஒரு விஷயம் புரியும். இங்கே பிரம்மாண்டமான ஹீரோக்களோ, விண்வெளி நாயகர்களோ இல்லை. சாமானிய ஜீவிதம். கதீஜாவின் உலகம் என்பது மரம், கிணறு, நிலம், பிரம்புகள், சாட்டை அடிகள், மற்றும் உம்மாமாவின் அதிகாரக் குரல்கள் நிறைந்த ஒரு மைக்ரோ காஸ்மோஸ்.

​மரம், கிணறு, மதில் சுவர்கள் சூழ்ந்த கிராமியப் பின்னணி.

​பெண்ணின் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படும் காலகட்டம்.

​ஒரு பிரம்பின் அடி, அல்லது ஒரு பெரிய மனுஷியின் பார்வை  இதுவே அங்கே சட்டமாகிறது. கதீஜாவுக்கு வாசம், நிறம், பயம் எல்லாமே இந்தச் சூழலிலிருந்துதான் ஊற்றெடுக்கிறது.

​எம்.எம்.நௌஷாத் தனது கதைகளில் மனித மனதின் இரண்டு இடுக்குகளை ஆராய்கிறார். கதீஜாவின் மனநிலையை அலசுகிறார். பிரம்படி படும்போதும் உம்மாமா செய்யும் கண்டிப்புகளிலும் கதீஜா வெளிப்படுத்தும் எதிர்வினைகள் ஒரு சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழும் மெல்லிய முனகல்.

​பேகம் கதீஜாவின் பளிமென்ற அந்த சிரிப்பிற்கு உம்மம்மாவின் கால்கோளம் இருக்கிறது. பேகம் பாலவியாக இருந்த தருணத்திலிருந்து உம்மம்மா அவளின் மூக்கை நீவியும் கன்னங்களைப் பிசைந்து விட்டாள்.

​இங்கே வன்முறையும் பாசமும் எப்படி பின்னிப் பிணைந்துள்ளன பாருங்கள். காயப்படுத்துவதும் பின்னர் அதே கைகளால் தடவிக்கொடுப்பதும் ஒரு குடும்பத்தினுள் நடக்கும் தொடர் நாடகம். இதை மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கிறார் கதை சொல்லி.

​மனித உறவுகளின் ஊசலாட்டம்

​நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் கறுப்பு அல்லது வெள்ளையாக இல்லை. சாம்பல் நிறத்தின் பல சாயல்கள் அவைகளில் உள்ளன. ஜெமீலா, உம்மாமா, சகாசக்காரி மற்றும் கதீஜா  ஒவ்வொருவரும் ஒரு விசித்திரமான உளவியலுடன் வலம் வருகிறார்கள்.

​மனித மூளை ஒரு பயோ கம்ப்யூட்டர் என்றால், அதற்குள் பதிவேற்றப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள், சாதியக் கூறுகள், மற்றும் பாலின வன்முறைகள் ஒரு வைரஸ் போலச் செயல்படுகின்றன. கதீஜா அந்த வைரஸை எதிர்த்துப் போராடவில்லை. அதனுடன் வாழ்ந்து பழகிவிடுகிறாள். இதுதான் சோகத்தின் உச்சம். போராடத் தெரியாத மக்களிடம் சமூகம் இன்னும் கொடூரமாக நடந்து கொள்கிறது என்பதை நாவல் உரக்கச் சொல்கிறது.

​எளிய நடை, ஆழமான சிந்தனை.

​வர்ணனைகளில் உள்ள துல்லியம் (மரங்கள், கிணறுகள், பிரம்புகள்).

​பெண்களின் உளவியலை மீட்டெடுக்கும் முயற்சி.

​

​பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் ஒரு பெண்ணின் கதை என்பதுடன் நம் மூதாதையர்கள் கடந்து வந்த வேதனையான பாதையின் அடையாளம். நௌஷாத் தனது எளிய எழுத்துருவத்தால் அதை நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார். பரபரப்பான டிஜிட்டல் உலகத்தில், சற்று நின்று நிதானித்து நம் தொன்மைகளை திரும்பிப் பார்க்க இந்த நாவல் ஒரு நல்ல திறவுகோல்.

கிராமியச் சூழலில் வாழ்ந்த ஒரு சாதாரணப் பெண்ணின் உளவியலையும் அவளது அன்றாடப் போராட்டங்களையும் மிக அணுக்கமாகப் பதிவு செய்யும் படைப்பாகும். சில சிறந்த கதைசொல்லிகளிடம் காணப்படும் கூர்மையான அவதானிப்பும் மனித மனதின் இண்டு இடுக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் பாணியும் இந்நாவலின் ஒவ்வொரு வரியிலும் இழையோடியிருப்பதைக் காண முடிகிறது. நவீனத் தொழில்நுட்பங்களும் டிஜிட்டல் வேகமும் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு நாவலை வாசிப்பது  நம் வாப்புச்சி வாப்பும்மா கடந்து வந்த கரடுமுரடான பாதைகளை மீள்வாசிப்பு செய்வதற்குச் சமம். இங்கே கதீஜா என்பவள் கற்பனைப் பாத்திரம் அல்ல வரலாற்றின் பின்தங்கிய நிலைகளில் தொலைந்துபோன இலக்கக்கணக்கான சாமானியப் பெண்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி. அவளது மௌனம் அவளது சிரிப்பு அவளது கண்ணீர் அவள் மீதான அதிகாரத் திணிப்புகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பின் உளவியல் கட்டமைப்பை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

​நாவல் தொடங்கும் போதே ஆசிரியர் நம்மை ஒரு கிராமியச் சூழலுக்கு அழைத்துச் சென்று விடுகிறார். மாமரத்துக்கடியிலும் கிணற்றுக்கரையிலும் அமர்ந்திருக்கும் பேகம் கதீஜா என்ற சிறுமி அணிந்திருக்கும் தளர்வான ஆடையும் அவளது தோற்றமும் அந்த கிராமத்தின் வறுமையையும் எளிமையையும் பறைசாற்றுகின்றன. நாவலில் வரும் மரங்கள் கிணறுகள் பாக்கு மரங்கள் மற்றும் தோட்டப் பகுதிகள் வெறும் பின்னணியாக மட்டும் செயற்படவில்லை. அவை பாத்திரங்களின் மனநிலையை காட்சிப்படுத்தும் நிழலாக உள்ளன. வறுமை பசியோடு நின்றுவிடுவதில்லை அது மனிதர்களின் உளவியலை எப்படிக் சிக்கிறது என்பதை கதீஜாவின் குடும்பச் சூழல் காட்டுகிறது. அன்றாடச் சமையல் பாத்திரங்கள் துலக்குவது சாணி அள்ளுவது மாட்டு வண்டியில் பயணம் செய்வது போன்ற எதார்த்தமான விவரிப்புகள் வாசகனை நேரடியாக அந்த கிராமத்திற்குள் கொண்டுபோய் நிறுத்துகின்றன. இங்கே இயற்கையோடிணைந்த வாழ்க்கை என்ற பெயரில் மனிதர்கள் மீதும் குறிப்பாய் பெண்கள் மீதும் திணிக்கப்படும் அடக்குமுறைகள் மிக நயமாய் அம்பலப்படுத்தப்படுகின்றன.

​மனித உறவுகளின் சிக்கலான வலைப்பின்னலை நௌஷாத் இந்நாவலில் மிக அழகாகக் கையாண்டுள்ளார். குறிப்பாக குடும்ப அமைப்பிற்குள் இருக்கும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உம்மம்மாவும் சகாசக்காரியும் வலம் வருகிறார்கள்.

 அதிகாரத்தின் மறுவடிவமாக உம்மம்மா காணப்படுகிறார். பேகம் கதீஜாவை அரவணைப்பதும் அதே சமயம் கடுமையான பிரம்படிகளால் தண்டிப்பதும் இவர்களுக்கிடையேயான உறவின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்துகிறது. குழந்தைப் பருவத்திலேயே வன்முறையைச் சந்திக்கும் ஒரு பெண் பிற்காலத்தில் எப்படி உலகத்தை எதிர்கொள்கிறாள் என்பதற்கான உளவியல் பிரதியாக கதீஜாவின் வாழ்க்கை அமைகிறது. கிராமத்து மக்கள் கதீஜாவின் வளர்ச்சியைப் பார்க்கும் விதம் அவளது திருமணம் மற்றும் எதிர்காலம் குறித்த அவர்களின் கணிப்புகள் எல்லாமே அன்றைய சமூகத்தின் கூட்டு மனநிலையைச் சுட்டிக் காட்டுகின்றன. காயப்படுத்துவதும் பின்னர் மருந்திடுவதுமான இந்தச் சுழற்சி நடுத்தர மற்றும் பின்தங்கிய நிலை குடும்பங்களின் எழுதப்படாத விதியாகவே காலங்காலமாகத் தொடர்கிறது.

​பெண்ணியக் கண்ணோட்டத்தில் இந்நாவலை அணுகும்போது கதீஜாவின் மௌனம் மிகப்பெரிய பலத்தோடு ஒலிக்கிறது. அவளுக்கு விருப்பமில்லாத விஷயங்கள் மீது திணிக்கப்படும் கட்டளைகள் திருமணச் சடங்குகள் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் அவளது தனித்துவத்தை மெல்ல மெல்ல அரித்துத் தின்பதை நௌஷாத் பதிவு செய்துள்ளார். கதீஜா சுதந்திரமாகச் சுவாசிக்கக் கூட முடியாத அளவுக்குச் சமூக வலைகள் அவளைச் சுற்றிலும் பின்னப்பட்டுள்ளன. அவளது திருமணம் சார்ந்த முடிவுகள் பெரியவர்களின் கணிப்புகள் மாப்பிள்ளையின் பின்னணி ஆகியவை பெண்ணின் விருப்புவெறுப்புகளுக்கு எளிய துரும்பின் மதிப்பைக்கூட வழங்காத தன்மையை வெளிப்படுத்துகின்றன. தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துக்கேட்கும் திராணியற்ற அல்லது அந்தத் திராணு மறுக்கப்பட்ட ஒரு சமூகச் சூழலில் கதீஜா வளர்க்கப்படுகிறாள். ஆனாலும் இந்த ஒடுக்குமுறைகளுக்கு நடுவிலும் அவளது சின்னச்சிறு புன்னகைகளும் எதிர்பார்ப்புகளும் இயற்கையை ரசிக்கும் தன்மையும் அவளுக்குள் இருக்கும் வாழும் ஆற்றலை நமக்கு உணர்த்துகின்றன.

​வைக்கம் முகம்மது பஷீரின் எழுத்துக்களில் காணப்படும் நக்கல் நையாண்டி மற்றும் எளிய வாக்கியங்களின் வீச்சு இந்நாவலிலும் பரவிக் கிடக்கிறது. சிக்கலான தத்துவங்களைக்கூட மிக எளிமையான கிராமிய மொழியில் கடத்துவது நௌஷாத்தின் தனித்திறமையாகும். மனிதர்களின் சிறுசிறு அசைவுகள் முகபாவனைகள் பார்வை மாற்றங்கள் ஆகியவற்றை நௌஷாத் பதிவு செய்யும் விதம் வாசகனைப் படபடக்கச் செய்யும். கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களைச் சித்தரிக்கும் போது பயன்படுத்தப்படும் உவமைகள் எதார்த்தத்தின் உச்சமாக இருக்கின்றன. மிக நீண்ட வர்ணனைகளைத் தவிர்த்துவிட்டு தேவையான இடத்தில் சுள்ளென்று அறையும் வரிகளைக் கையாள்வது சாரு நிவேதா பாணியை நமக்கு நினைவூட்டுகிறது.

​பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்  ஒரு பெண்ணின் சுயசரிதை அல்ல அது ஒரு காலத்தின் சாட்சியம். மனித மனங்களின் விசித்திரமான திருப்பங்களையும் சமூகத்தின் இறுக்கமான விதிகளையும் இவ்வளவு யதார்த்தமாகப் பதிவு செய்துள்ள எம்.எம்.நௌஷாத் பாராட்டுக்குரியவர். வாசிப்பின் வழியே நம் தொன்மைகளை தேடிச் செல்லவும் நம் முன்னோர்களின் வலியையும் வேதனையையும் புரிந்துகொள்ளவும் இந்நாவல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகிறது. வாழ்வின் அனைத்துத் துயரங்களுக்கு மத்தியிலும் புன்னகைக்கத் துடிக்கும் ஒரு சாமானிய ஆன்மாவின் கதைதான் இது. இந்த நாவலை வாசித்து முடிக்கும்போது நம் மனதுக்குள் எழும் மௌனம் பல ஆயிரம் வார்த்தைகளை விட வலிமையானதாக இருக்கிறது. மனித மனங்களை ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் விதம் இந்த நாவலை ஒரு முக்கியமான படைப்பாக மாற்றுகிறது.

​வாழ்வு எப்போதோ எழுதப்பட்டுவிட்ட ஒரு ஏட்டின் மேல் சிந்திய மையின் எச்சமா, அல்லது தீராத காடுகளின் நடுவே யாரோ தொலைத்துவிட்டுப் போன ஒரு துண்டுப் பெருமூச்சா? இருபதாம் நூற்றாண்டில் சாம்பல்மேடு என்கிற கிராமத்தின் புழுதி பறக்கும் எல்லைகளில் பிறந்து, காலத்தின் கரடுமுரடான விரல்களால் கிழிக்கப்பட்டு, எம்.எம். நெளஷாத் அவர்களின் எழுத்தில் உயிர் பெற்ற பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்  மனித விதிகளின் முன்னால் அநாதையாக நிற்கடிக்கப்பட்ட ஒரு ஆன்மாவின் தற்காப்பு நடனமாகும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்த ஒருவனின் கணினித் திரையில் திடீரென நையாண்டி கலந்த கூர்மையான நடை வந்து அமர்ந்தால் எப்படி இருக்கும்? அதுவும் எம்.எம்.நெளஷாத் எழுதிய பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் என்ற நாவலின் பக்கங்களை புரட்டினால் பிரபஞ்சத்தின் அத்தனை எதார்த்தங்களும் ஒரு சிமிட்டலில் கடந்துபோகும். கம்ப்யூட்டரில் கோடுகள் எழுதும் துல்லியத்தோடு மனித மனங்களின் இண்டு இடுக்குகளை அலசும் பெரு வலி இந்த நாவல்.

​அங்கே ஒரு மாமரமும், கிணறும் மரத்தாலான வாங்கிலும் இருக்கின்றன. அங்கே அமர்ந்துகொண்டு மாம்பழத்தை தன் கூரான பற்களால் கடித்து இழுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் பேகம் கதீஜா. அவளது கைகளில் இருந்து சாறு வழிந்தால் என்ன உம்மம்மாவின் கடுமையான சொற்கள் விழுந்தால் என்ன? அவளுக்குக் கவலை இல்லை. கண்கள் வெளியே துருத்திக் கொண்டு, சூனியக்காரி மூக்கைப் போல நீண்ட நாசித்துவாரங்களுடன் பார்ப்பவர்களை மிரளச் செய்யும் இறுக்கமான உடல் அமைப்புடன் அவள் இருக்கிறாள். உம்மம்மா சுவரில் ஆணி அடித்துக் கொளுவப் போட்டிருக்கும் மூன்று பிரம்புகள் மட்டும் அவளுக்குப் பேரச்சம். அந்தப் பிரம்புகள் அவளது பிர்ஷ்டத்தைப் பதம்பார்த்த கதைகள் கிராமத்தின் அத்தனை மூலைகளிலும் எதிரொலிக்கின்றன.

​மார்பை சரியாக மறைக்காமல் முந்தானை போடாமல் வெளியே நடமாடுவது, தாயைத் தின்றவள் என்று முத்திரை குத்தப்படுவது என எல்லாவற்றுக்கும் உம்மம்மாவின் தண்டனைகள் உண்டு. சுஜாதா சொல்வது போல, விதி என்பது ஒரு ரேண்டம் பங்க்ஷன். பேகம் கதீஜா பிறந்த மறுநிமிடமே உம்மா இறந்துவிட்டாள். மருத்துவச்சியின் கவனிப்பில் நிகழ்ந்த பிரசவத்தில் வாப்பா தன் பெண் குழந்தை பிறந்த அதிர்ச்சியைத் தாங்காமல் ஓடிவிட்டான். அவளை வளர்க்கும் பொறுப்பை ஏற்ற உம்மம்மாவின் வாழ்க்கை மிகவும் கராறானது. கதீஜாவின் குடிசைக்குள் நாற்காலிகளோ, மேசைகளோ கிடையாது. இரண்டு தலையணைகள், இரண்டு பாய்கள், இரண்டு பீங்கான்கள், இரண்டு தேநீர்க் கோப்பைகள் மற்றும் இரண்டு ஜோடி செருப்புகள். இதான் லைஃப். ஒரு பழைய இரும்புப் பெட்டிக்குள் வெள்ளைச் சீலைகள் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் அலாரம் கடிகாரம் என அந்த எளிய வாழ்க்கை நகர்கிறது.

​கதீஜாவுக்கு முந்தானை போடுவதை விட, தன் மார்பு வளர்வதையும் கிங்கிலிப்படைவதையும் கண்ணாடியில் பார்ப்பதுதான் பிடித்த பொழுதுபோக்கு. குடிசையிலிருந்த ஒரே கண்ணாடி அந்த நிலைக்கண்ணாடிதான். இரவில் உம்மம்மா அதை பழைய புடவையால் மூடி வைப்பாள். உனக்கு வரப்போகிற மாப்பிள்ளை தலைநரைத்த கிழவனாகத்தான் இருப்பான் என்று உம்மம்மா வசவு பாடும் போதெல்லாம் கதீஜா கிக்கென்று சிரிப்பாள். காலகிரமத்தின் கணக்கீடுகள் மனிதர்களின் ஆசைகளை எப்போதுமே மதித்ததில்லை. ஜொஹரா என்ற சாகசக்காரி கதீஜாவுக்கு திருமணம் பேச வரும்போது, அவளது பேச்சில் நையாண்டி கலந்த விஷமம் நிரம்பியிருக்கிறது. பருவமடையத் தொடங்கிய கதீஜாவை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்றும், அவள் சீரழிந்து போய்விடுவாள் என்றும் ஜொஹரா சொல்கிறாள். இருப்பினும் உம்மம்மாவோ கல்வியின் தேவையை எதார்த்தமாகப் புரிந்து வைத்திருக்கிறாள்.

​ஆற்றங்கரையில் இருக்கும் புளிய மரம், அங்கே ஏறும் சிறுமிகள் அவர்களை கிராம மக்கள் குரங்குகள் என்று அழைப்பது என நாவலின் களம் கிராமத்து வாசனையோடு நகர்கிறது. குரங்குகளின் சேஷ்டைகளில் ஈடுபடும் கதீஜாவைப் பார்த்து ஜொஹரா கதைகளைக் கட்டியமைக்கிறாள். ஊர்மக்கள் உண்மையை விட வதந்திகளை நம்புவதில் பிரியமாய் இருக்கிறார்கள். கதீஜா வீடு வந்து சேர்ந்ததும் மூன்று பிரம்புகள் உதிரும் வரை தண்டிக்கப்படுகிறாள். ஆனால், அந்தத் தண்டனைகள் அவளுக்கு ஜுஜிபி மாதிரி. மாலையானதும் பவுடரை அப்பிவிட்டு கம்பை நீட்டி வெளியே போய்விடுவாள். முகத்தில் பவுடர் திட்டுத்திட்டாகப் பதிந்திருப்பதையோ, தேங்காய் எண்ணெய் வழிவதையோ அவள் பொருட்படுத்துவதே இல்லை. அவளுக்கு அருகில் உள்ள மூங்கிற்காடுதான் மிகவும் பிடித்த இடம்.

​காலம் கரைகிறது. திருமணங்களும் முரண்களும் அரங்கேறுகின்றன. ஜாம் பரங்கித் தோட்டம், அங்கே நிலவும் அமைதி, மரணமும் வாழ்க்கையும் பசைபோல் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆழம் என நெளஷாத்தின் எழுத்துக்கள் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. ஹராதி சுல்தான் அந்தத் தோட்டத்தைச் சொர்க்கபுரியாக்க நினைத்தான். காலப்போக்கில் அது பாழ்வெளியாக மாறியிருக்கிறது. மனிதர்களின் கனவுகளும் யதார்த்தமும் மோதும் இடம் இது. ஜெமீலாவின் வருகையும் அவளது முரண்களும் கதீஜாவின் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன. சொத்துப் பங்கு உரிமைகள், பிடிவாதங்கள் என மனித மனங்களின் குரூரமான பக்கங்கள் அங்கே வெளிப்படுகின்றன.

​ஆனாலும் எல்லாவற்றையும் கடந்து வாழ்க்கை அதன் போக்கில் நகர்கிறது. மாட்டு வண்டியில் தட்டுமுட்டு சாமான்களுடன் வெளியேறும் கதீஜாவும் ஜெமீலாவும் தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். வண்ண வண்ணமாக இழைக்கப்பட்ட பாய்கள், உரல், உலக்கை, மேசை, இரும்புப் பெட்டி என்று அவர்கள் சேகரித்த பொக்கிஷங்கள் அந்த வண்டியில் நிரம்பியுள்ளன. ஸாஹிபுக்கும் ஜெமீலாவுக்கும் இடையிலான எளிய திருமணம் நடப்பதோடு நாவல் நிறைவடைகிறது. சாப்பாடு பிரமாதமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே சோற்றுக் கவளங்களை விழுங்கும் கதீஜாவின் குரலில் ஒரு பெரிய விடுதலை ஒலிக்கிறது.

​சுஜாதா ஸ்டைலில் யோசித்தால் இந்த நாவல் கிராமத்து மனிதர்களின் சாமானிய உளவியலின் டிஜிட்டல் பிரிண்ட். தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டாலும் மனித மனங்களில் உள்ள காழ்ப்புணர்ச்சிகளும், பாசமும், எதார்த்தமான விதிகளும் எங்குமே மாறுவதில்லை. பேகம் கதீஜா என்பவள் ஒரு குறியீடு. அடக்க நினைக்கும் சமூகத்தின் பிரம்புகளுக்கு மத்தியில், தன் சுயம்புவான சிரிப்பால் எதார்த்தத்தை எதிர்கொள்ளும் ஒரு சாமானியப் பெண்ணின் காவியம் இது. நெளஷாத்தின் எழுத்து நமக்குச் சொல்வது ஒன்றுதான். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அது வாழத் தகுதியானதுதான்.

Series Navigationகவிதையாக…மழை புராணம் : 46