This entry is part 2 of 7 in the series 6 செப்டம்பர் 2026

உண்மைச் சம்பவம். மகளுக்காக ஓடிய 47வயது ரமாபாய் ரான்வீர்

மகாராஷ்ட்ரா, இந்தியா செப் 2026

மகளின்

கல்விக்காக ஓடிய

தாயின் கதை

பள்ளிக்கனுப்ப

காசில்லை

விளக்கிருக்கு…

திரிக்கோ

பொறிக்கோ

எண்ணெய்க்கோ

காசில்லை

ஊறாத கேணி

உடைந்த வாளி

இத்த கயிறு

தாகம் தணிவதெப்படி?

விளம்பரம் ஒன்று

விதைத்தது நம்பிக்கை

மூவாயிரம் மீட்டர்

ஓடினால்

மூவாயிரம் பரிசாம்

செருப்பில்லை

சேலைக்கு வேறு

மாற்றில்லை

ஆனாலும் ஓடுகிறாள்

பாதம் பிய்ந்து

சாலையெலாம்

ரத்தவிதை

சேலை பிழிந்ததில்

வழிந்தது வியர்வையா

இல்லை  உயிரா?

கிடைத்தது

முதல் பரிசு

பள்ளி செல்கிறாள் மகள்

சீருடை மகளே

உன் காலடியில்

செருப்பாய்த்

தேய்கிறாள்  

உன் தாய்

மறக்காதிரு

நாளை

மலைகளும்

வசப்படும்

அமீதாம்மாள்

Series Navigationதிரிசூலியின் எச்சரிக்கைஎம்.எம்.நௌஷாத் எழுதிய பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் நாவல் இருபதாம் நூற்றாண்டின் வாழ்வு நிலை அனுபவம்