செந்தில் ராஜா
கண்ணீரால் மட்டுமே
அழுது ஆற்றிக்கொள்ள முடியாத
பெருஞ்சோகம்…
மண்ணும் நீரும்
கொலைவெறியுடன் ஓடியதை
ஒருபோதும்
கண்டதில்லை
உலகம்.
எச்சரிக்கையின்றி
ஆக்கிரமிப்புகளை அகற்ற
அத்துணை அவசரம் என்ன?
உயிர்களைக் குளிர்வித்த ஆறு
உயிர்களைக்
குடிப்பது—
கருணையின் வறட்சி!
திரிசூலியே!
நீ ஓடிய ஓட்டத்தில்
கண்ணீர் ஆறு
பெருக்கெடுத்து ஓடுகிறது
உலகத்தில்…
சொல்—
முடிவா?
இல்லை, தொடக்கம் என்று
எச்சரிக்கிறாயா?
— கவிஞர் செந்தில் ராஜா