human zoo போல மனிதர்களை அடைத்து ஐரோப்பிய மேற்குடி மக்களுக்கு காட்சி படுத்திய காலனியாதிக்கத்தை விதந்தோதும் முரசொலி பத்தி எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கும் இடதுசாரி கேரள அரசாங்கம், கேரள பழங்குடியினர் என்ற பெயரில் சிலருக்கு வேடமிட்டு கேரளீயம் கொண்டாடுகிறார்கள். இதுதான் அந்த கேரள பழங்குடியினராம். இடுப்பில் நார்களை கட்டிகொண்டு முரசுகளை வைத்துகொண்டு கழுத்தில் வினோதமான சங்கிலியை அணிந்துகொண்டு முகத்தில் ஏதோ கேரளாவுக்கு சம்பந்தமில்லாத டிசைன்களில் வரைந்துகொண்டு இருக்கும் இவர்கள்தான் கேரள பழங்குடியினராம். எந்த கேரள பழங்குடியினர் இது […]
சென்ற இதழில் நான் காங்கிரஸ் பற்றி எழுதியதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும், நக்கலாகவும் சில எதிர்வினைகளை பார்த்தேன். அவை அனைத்தையும் நான் புரிந்துகொள்கிறேன். நான் முன்னர் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தில், எனது மேலதிகாரி என்னிடம் ஒன்று சொன்னார். “you are constrained by your imagination” உன்னுடைய கற்பனையே உன்னுடைய விலங்கு என்று ஏறத்தாழ நேரடியாக மொழிபெயர்த்தாலும், இதனை அப்துல் கலாம் நீங்கள் மகத்தான கனவு காணுங்கள் என்று சொன்னதை வைத்து புரிந்துகொள்ளலாம். பிரச்னை என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு […]
தமிழ்நாட்டில் வெகுகாலத்துக்கு முன்னால், திமுக ஒரு அணியிலும் காங்கிரஸ் மற்றொரு அணியிலும் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, நீதிகட்சியின் புது அவதாரமான திமுக அந்த இடத்தை பிடித்தது. பக்தவத்சலம் தலைமை தாங்கிய காங்கிரஸ் 41.10 சதவீத வாக்குக்களையும், திமுக 40.69 சத வாக்குக்களையும் பெற்றாலும் ஸ்வதந்திரா கட்சி (ராஜாஜியின் கட்சி) 5.30 சதவீத வாக்குக்களாலும் சிபிஎம்மின் 4.07 சதவீத வாக்குகளாலும் திமுக வெற்றி பெற்று 137 இடங்களை பெற்றது. காங்கிரஸ் 51 இடங்களை பெற்றது. அடுத்த […]
சின்னக்கருப்பன் அகழ் இதழ் சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் இணைப்பு கிடைக்கப்பட்டு அகழ் இதழை வாசித்தேன். இதழில் “போருக்கு எதிரான அசல் பிரகடனம் – சக்கரவர்த்தியின் கதைகளை முன்வைத்து” என்று சுரேஷ் பிரதீப் எழுதிய கட்டுரை மூலமாகவே சக்கரவர்த்தியின் கதைகளின் களத்தை அறிந்துகொண்டேன். போர்களும் அதன் வலிகளும் மிகப்பெரிய உணர்வுந்தலை அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டவரின் உள்ளத்தில் உருவாகிறது. அங்கிருந்து மிகப்பெரிய இலக்கியங்களும், நேர்மையான பதிவுகளும் உருவாகியிருக்கின்றன. இந்த கால கட்டத்தின் தமிழ் இலக்கியத்தில் உன்னதமான படைப்புகள் […]
சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டு தமிழில் மட்டுமே உயர்கல்வி என்று தமிழ்நாடு அரசும், பிராந்திய மொழியிலேயே மற்ற மாநிலங்களும் உயர்கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று நான் எழுதியதற்கு நண்பர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு என்னை விளாசி எடுத்தார்கள். இரண்டு மொழி கொள்கையால், ஆங்கிலம் தமிழை அழித்துவிட்டது என்று என்னிடம் முதலில் சொன்னவர் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராம். இது மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுகொள்ளாததன் பின்னணியில் அதன் விமர்சனமாக அவர் வைத்த முக்கியமான பார்வை. மெல்லத்தமிழினிச் […]
. விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே. அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன் இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால், அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை 2. ஆங்கில பள்ளிகள் எத்தனை […]
சின்னக்கருப்பன். ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள். 1934ஆம் ஆண்டு, துருக்கிய குடியரசு, கமால் அடாதுர்க் அவர்கள் தலைமையில் இருந்தபோது, இந்த மசூதி, ஒரு மியூஸியமாக அறிவிக்கப்பட்டது. துருக்கிய சட்டப்படியும் ஒத்தோமான் சட்டப்படியும், ஹாகியா சோபியா இருக்குமிடம், ஒரு வக்ப் நிலம் என்பதால், அவ்வாறு அந்த மசூதியை மியூஸியமாக அறிவித்தது தவறு என்று வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் 1934ஆம் வருடத்தில் செய்த மாற்றம் செல்லாது என்று அறிவித்தது. பின்னர் துருக்கிய […]
சின்னக்கருப்பன் கனெக்டிகட் தமிழ் சங்கத்தில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் அவர்கள் புதுமைப்பித்தன் பற்றி ஒரு கலந்துரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். அதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.உங்கள் கருத்துக்களை அந்த நிகழ்வு பின்னூட்டமாகவும் இடலாம். திண்ணைக்கும் அனுப்பி வைக்கலாம். புதுமைப்பித்தன் எழுதிய கடவுளும் கந்தசாமி பிள்ளையும் பற்றிய கதை பற்றிய கோபால் ராஜாராம் அவர்களின் பார்வை அந்த கதைக்கான ஒரு திறவுகோல். அது மட்டுமல்ல, இந்திய ஆன்மீகம், இந்திய நுண்ணுணர்வு, இந்திய கலாச்சார பின்புலத்தில் கடவுள் எவ்வாறு மனிதனால் பார்க்கப்படுகிறார் […]
தமிழகத்தில் எது இன்று அதிகாரப்பூர்வமான “சரியான அரசியல்” politically correct என்பதை சமீபத்தில் ஆர்.எஸ் பாரதி என்னும் திமுக தலைவரின் தனது பேச்சில் உறுதி செய்திருக்கிறார். அரசியல் ரீதியில் அவர் இரண்டு விசயங்களை பேசியிருக்கிறார்.ஒன்று தலித் நீதிபதிகள் நியமிகப்பட்டது திராவிட இயக்கத்தின் பிச்சை என்று சொல்லியிருக்கிறார்.இரண்டாவது பத்திரிக்கைக்காரர்கள் ரெட்லைட் ஏரியாக்காரர்கள் போல காசுக்கு விலைபோவதாக குறிப்பிட்டிருக்கிறார். இரண்டுமே இன்றைய தமிழகத்தில் “சரியற்ற அரசியல்” politically incorrect. இரண்டையுமே பேச கூடாது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் […]
2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, பார்ஸி, ஜெயின், புத்த மதத்தை சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியிருக்கிறது. இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. கவனிக்கவும், 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை. […]