அழகியசிங்கர் எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் (02.04.2021) என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன். ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன். நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம் அவர் அதிகம் படித்தவர். தனியார்ப் பள்ளியில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு நாவலும் கூட. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில். ‘தாத்தா காலத்து பீரோ’ என்ற அவருடைய சிறுகதைப் புத்தகம் […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா 2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி] நீளக் கப்பல் திசை மாறி, கப்பல் முனை கரை மண்ணைக் குத்தி சிக்கிக் கொண்டது. டெய்வானைச் சேர்ந்த அந்த பூதக் கப்பல் பெயர் : “எவர் கிவன்” 200,000 டன் வர்த்தகச் சுமை தூக்கி, […]
நடேசன் – அவுஸ்திரேலியா —————————————————————————— இளமைக்காலத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்தபோது, என்னைக் கவர்ந்தது என்னவென்றால், அக்காலத்தில் சிவாஜி ரசிகனாக இருந்த எனக்கு மத்திய வயதான ஒரு வருக்கு இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது. இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது. சமீபத்தில் அதனை தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு பலர் எழுதியதைப் படித்தபின்பு, மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல, படு […]
கோ. மன்றவாணன் நண்பர் ஒருவருக்காகத் திருமண அழைப்பிதழை எழுதி அச்சடிக்கக் கொடுத்தேன். மெய்ப்புத் தந்தார்கள். திருநிறை செல்வன் என்றும் திருநிறை செல்வி என்றும் நான் எழுதித் தந்திருந்தேன். ஆனால் அவர்கள் திருநிறைச் செல்வன் என்றும் திருநிறைச் செல்வி என்றும் தட்டச்சு இட்டிருந்தார்கள். ச் போடக் கூடாது என்று, ச் – ஐ சிவப்பு மையால் மறைத்திருந்தேன். ஆனால் அச்சகத்தார் ச் – ஐ நீக்காமல் அச்சடித்துவிட்டார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, ச் போட்டு அடிப்பதுதான் […]
தோன்றிற் புகழொடு தோன்றுக. கடலூர் தொலைபேசி தொழிற்சங்கத்தலைவர் T.ரகுநாதன் 21/03/2021 அன்று சென்னை கே கே நகரில் காலமானார். அவரின் வயது எண்பதைத்தொட்டுக்கொண்டிருந்தது. இன்னும் சில ஆண்டுகள் அவர் ஆரோக்கியத்தோடு வாழ்வார் எனத்தோழர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அன்புத்தோழர்களிடமிருந்து அவர் இறுதிவிடைபெற்றுக்கொண்டார். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்து த்தொலைபேசி ஊழியர்களில் குறைந்தது ஓர் ஆயிரம் குடும்பங்களின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குபெற்ற பண்பாளர். தோழர் ரகு நேர்மைச்செல்வத்திற்குக்கு ஓர் ஒளி வீசும் இலக்கணம் முந்திரிக்காட்டில் முப்பது […]
கோ. மன்றவாணன் ராஜா வாசுதேவன் அவர்கள் எழுதிய அஞ்சலை அம்மாள் என்றொரு நூல் வெளிவந்துள்ளது. அண்மையில் வெளிவந்த நூல்களில் இது முக்கியமானது. மறைக்கப்பட்டோ அல்லது மறக்கப்பட்டோ உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரிசையில் உள்ளவர் கடலூர் அஞ்சலை அம்மாள். அவரைப் பற்றிய தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால் கடலூரில் உள்ளவர்களுக்கே அவரைப் பற்றித் தெரியவில்லை. இத்தனைக்கும் இரண்டு முறை கடலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி […]
. மீனாக்ஷி பாலகணேஷ் மார்ச் 24, உலக டி. பி. தினம் – அதற்கு இப்போது என்ன? வருடாவருடம் இந்தவிதத்தில் பலப்பல தினங்கள் வந்து போகின்றன. என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? இதென்ன பெரிய கொண்டாட்டமா? இப்படிப்பட்ட கேள்விகள் காதில் விழத்தான் செய்கின்றன. முதலில் ஒரு சிறு சம்பவத்தை விவரிக்கிறேன். ————————————– மார்ச் மாதம் 24ம் தேதி, வருடம் 1882. பெர்லின் நகரில் உடற்கூறு இயல் ஸ்தாபனத்தின் […]
Posted on March 13, 2021 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !பசுமைப் புரட்சிச் சாதனையாய்சூழ்வெளித் தூய புது எரிசக்தி ! மீள்சுழற்சிக் கனல்சக்தி !பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்பிரபஞ்சக் கொடை வளமாய்தாரணிக்கு வற்றாத அளவில் வாரியம் அனுப்பும் மின்சக்தி ! […]
———————————————————————- அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த காலத்தில் மூன்று வருடங்கள் வேலை – படிப்பு என மெல்பன், சிட்னி நகரங்கள் எங்கும் அலைந்து திரிந்தபோது, ஒரு நாள் எனது மனைவிக்கு வார்ணம்பூல் மருத்துவமனையிலிருந்து வேலைக்கு வரும்படி தகவல் வந்தது. வார்ணம்பூல் என்ற இடத்தை அவுஸ்திரேலியா வரைபடத்தில் அதுவரையும் கேள்விப்பட்டதே இல்லை . அக்காலத்தில் நான் வேலையின்றி, எனது மிருக வைத்திய செய்முறைப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியை வேலைக்கு அழைத்ததும், பரபரப்பாக சிட்னியிருந்து மெல்பன் வந்து, அதன்பின்பு […]
முருகபூபதி முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை நகர்ந்துள்ளார். உரும்பராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்றபின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை […]