மெய்ப்பொருள்

This entry is part 5 of 32 in the series 13 ஜனவரி 2013

சத்ய தாரையில் ஒரு துளியாய் தெய்வம் கண்ட தருணம். ஆத்ம அரவத்தின் ஒய்யாரத்தில் கவிதையின் சயனம். கிடந்த பெரிய வீணையிலிருந்து எழுந்த புலப்படாத ராகத்தின் உயரத்தில் லயித்துப் பறக்கிறது மனப்பட்சி! கூப்பிய கைவிரல்களுக்கு இடையில் ஏந்திய மௌனம் துளசியின் ஈரம்பட்டு விழித்துக் கொள்கிறது ! சேவிக்கும் தாமரைக்குள்ளேதான் வாழ்வின் மகரந்தம். சொல்லிக் கொடுத்தவன் அருகில். பிரித்துக்கொடுத்தவன் எதிரில். இருந்தும் புரியாது கல்லாய் நிற்கிறேன் ! கல்லே நாம் ! கல்லே நம் ஆசான் ! கல்லே தெய்வம் […]

மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)

This entry is part 31 of 34 in the series 6 ஜனவரி 2013

Sand And Foam – Khalil Gibran பவள சங்கரி மேதையென்பவன், ராபினின் மிதமானதொரு வசந்தகால துவக்கத்தின் கீதமானவன். மோசமான இறகு படைத்ததோர் ஆன்மாவாயினும், அதுவும்கூட உடற்தேவையினின்று தப்பிக்க இயலாது. பித்தன் என்பதாலேயே அவன் உம்மையும், எம்மையும் விடக் குறைந்த தகுதியுடனான இசைக்கலைஞன் அல்லன்; ஒருகால் அவன் வாசிக்கிற அந்த இசைக்கருவி மட்டும் சிறிது ராகம் தப்பியதாக இருக்கலாம். இருதயத்தின் அமைதியினூடே உறைந்திருக்கும், தம் குழவியின் இதழ்களின்மீது இசைக்கும், ஒரு தாயின் பாடல் அது. நிறைவேறாத ஆசைகளென்பதே […]

பெண்ணே !

This entry is part 28 of 34 in the series 6 ஜனவரி 2013

சீராளன் ஜெயந்தன் நான் ஆணாய் பிறந்தது வெட்கம் கோரப்பற்களும் கொடூர நகங்களும் குருதி சொட்டும் நாவும் குத்திக் கிழிக்கும் கொடுங்கோளும் கொண்டு சதை தேடி சதை தேடி பசியாறா பிணந்தின்னி சாகும் வரை சதை வேண்டும். காமக் கண்களும் கற்பழிக்கும் காமிரா கண்களும் எரியூட்டும் சேலைக்குள் ஊடுருவும் கண்கள் துகிலுரியத் துடிக்கும் மனசு அது எவளாயினும் எனக்கு வேண்டும். உடன் பிறந்தவள் தவிர்த்து யாரும் இல்லை சகோதரி என்று இறுமாப்பு பேச்சிலும் காமம் களியூரும். பணமும் புகழும் […]

அம்முவின் தூக்கம்

This entry is part 23 of 34 in the series 6 ஜனவரி 2013

ஷான் பறித்துப் போன பாவி மனங்களை கடை மூடிக் கணக்கிடும் குறும்பாடும் கண்கள் மறுநாள் புன்னகைகள் பதியனிட்டுக் கொண்டு சிரிப்பாடும் சிறு குமிழ் இதழ்கள் தொடுகை முடிந்து மூடிக் கிடக்கும் நகம் பூத்த விரல் தாமரைகள் தாவிக் குதித்து ஓடிக் களித்து ஓரிடம் நின்ற களைப்பில்லாக் கால்கள் ஏறி இறங்கும் சுவாச அசைவில் உலகம் தாலாட்டும் இலை வயிறு இதழின் ஓர் கோடியில் எப்போதாவது பூக்கும் இளக்காரப் புன்னகை புரியாத புதிராய் அம்மு தூங்கவில்லை அவள் புரிவது […]

தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்

This entry is part 16 of 34 in the series 6 ஜனவரி 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     இனிமைக்குள் மூழ்கி எழுந்து கொண்டு உள்ளுக் குள்ளே எனது மனது உற்று நோக்கி வருகுது, பிச்சைக் காரன் பிறப்புரிமையில் சுற்றிலும் நோக்குவ தில்லை, என் கண்ணோட்டம் ! இதயத்துள் ளிருந்து வெளியே எட்டிப் பார்க்கையில், எழும்பிட ஆரம்பிக்கும் ஒற்றை நாணின் ரீங்கார ஓசை ! அழகுத் திருவடிவின் மடியில் இனிதாய் ஆசைப் பாதையில் வாசிக்கும் தாலாட்டி நாணல் புல்லாங் குழல் […]

இரவு விழித்திருக்கும் வீடு

This entry is part 9 of 34 in the series 6 ஜனவரி 2013

    நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும் சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின் காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை   பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம் அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள் ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன களைகளகற்றுமுன் வலிய […]

மனத்தில் அடையாத ஒரு காகம்

This entry is part 8 of 34 in the series 6 ஜனவரி 2013

காகங்கள் என்னைப் போல் நிம்மதியற்றவையா? கறுப்புக் கேள்விகளாய்ப் பறந்து பறந்து கரைந்து கொண்டிருக்கும். சூரிய வேட்கையில் கரிந்ததாய் ஆகாயக் கந்தல்கள்களாய் அலைந்து கொண்டிருக்கும். ஒரு கணம் ‘குபுக்’கென்று உச்சிமரக் கிளையில் காய்த்தது போல் உட்காரும். அடுத்த கணம் ‘விசுக்’கென்று வெளியில் ஆகாயச் சில்லை அலகில் கொத்திப் பறக்கும். ஊர் மரத்தையும் வெறிச்சோட விடுவதில்லை. மரத்தின் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவி வேறு மரம் போல் பார்க்கும். கத்திக் கத்தி மரத்தின் ’தவத்தைக்’ கலைக்கப் பார்க்கும். ஒரு […]

வால்ட்விட்மன்வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்

This entry is part 7 of 34 in the series 6 ஜனவரி 2013

  (Beginning My Studies) (1819-1892) (புல்லின்இலைகள் -1) மூலம் : வால்ட்விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட்விட்மன்வாழ்க்கைவரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு […]

தண்டனை யாருக்கு?

This entry is part 19 of 26 in the series 30 டிசம்பர் 2012

14 டிசம்பர் 2012ல் நியூயார்க்கில் நியூடவுன் நகரில் சாண்டி ஹூக் பள்ளியில் 27 குழந்தைகள் சுட்டுக் கொலை. இது செய்தி. இனித் தொடருங்கள் அறிவு பெருக்கு மிடத்தில் குருதிப் பெருக்கு குறுத்துக்கள் 27 குருதிச் சேற்றில் இனி குண்டு துளைக்காக் கவசங்கள் குழந்தை உடையாகலாம் வகுப்பறைகள் வழக் கொழியலாம் அரிசி அளவு மென் பொருளே ஆசிரிய ராகலாம் ‘பள்ளிக் கூடம்’ ‘பள்ளித் தோழன்’ போன்ற சொற்கள் அகராதியி லிருந்து அகற்றப் படலாம் கொலை யாளியே தன்னைக் கொன்று […]

கவிதைகள்

This entry is part 15 of 26 in the series 30 டிசம்பர் 2012

இடப்பெயர்ச்சி கண்கள் கூசுவதிலிருந்து தப்பித்தேன் குளிர்க்கண்ணாடிகள் மூலம் வன்முறைகள் நிரம்பிய உலகில் இரக்கம் பறவையின் இறகுகளாய் உடலை மென்மையாய் வருடியது கரங்களை நனைத்த தண்ணீர் குருதியைவிட அடர்த்தியாய் இருந்தது பீழை தான் வாழ்வு சுமக்கும் பாரத்தை கைத்தாங்கலாக இறக்கி வைப்பார் யாருமில்லை வியர்வை நெடி விலகி ஓடத் தோன்றும் நெருங்கி வருபவர்களையும் தலையை அனுசரணையாய் கோதுபவர்களையும் அவயங்களை காமத்தின் வடிகாலாக கருதுபவர்கள் ஸ்படிக நீரில் சகதியைத் தேடுவர் கருவறையின் புனிதத்தை கெடுத்தவர் உறவுக்கு அவப்பெயர் கொடுத்தவர் சத்யநெறி […]