படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும், சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற, வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின் மன உணர்வுகளை வைத்து, இரண்டு நபர்களின் மேல், கதையின் பாரத்தைப்போட்டு, வண்டியை இழுத்துச்செல்கின்றார் டைரக்டர். திஜாவின் கதைகளில் வரும் மண்வாசனை இதிலும் தெரிகின்றன. வீடு என்பது, வெறும் கல்லும் மண்ணம் கட்டிய வஸ்து அல்ல. அதற்கும் உயிர் உண்டு. அதுவும் அம்மா அப்பாவோடு பேசும். அக்கா தங்கை தம்பியோடு உறவாடும். வளர்க்கும் நாய் பூனையோடு […]
குரு அரவிந்தன் மாருதி என்ற புனைப்பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர் இரங்கநாதன் சென்ற 27 ஆம் திகதி யூலை மாதம் தனது 85 வது வயதில் புணே நகரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மராத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த விமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தீவிர இலக்கிய ஆர்வலர்கள் எப்படி ஒரு […]
ப.சகதேவன் நமது இப்பிறவியை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் தமியாளம் மொழியில் வெளிவந்துள்ள ’நண்பகல் நேரத்து மயக்கம்’ இந்தப் பிறவியில் நமது அடையாளமாக இருக்கின்ற எல்லாமும் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. நமது மொழி, இனம், மரபுகள், அந்நியரோடுள்ள உறவுகள் என எல்லாவற்றுனுள்ளும் நிகழும் குழப்பம்- ஒரு வரலாற்றுக் குழப்பம் சினிமா மொழியில் சொல்லப்படுகிறது. இப்படத்தின் கதை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் பழனி- ஒட்டஞ்சத்திரத்திற்குஅருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடக்கின்றன.. அங்கிருந்து […]
மதுவந்தி lemon Orzo எலுமிச்சை ஆர்ஸோ இது பொதுவாக எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. இதில் உங்கள் விருப்பத்துக்கேற்ப மாறுதல்களையும் செய்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் ஆலிவ் எண்ணெய் பூண்டு சிக்கன் ப்ராத் அல்லது வெஜிடபிள் ப்ராத் ஆர்ஸோ உப்பு மிளகு தேவையான அளவு ஒரு எலுமிச்சை பார்ஸ்லி மேலே அழகுக்கு தூவ செய்முறை
குரு அரவிந்தன் ஓவியர்கள் கற்பனையிலும் ஓவியம் வரைவார்கள், இல்லாவிட்டால் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைவார்கள், ஆனால் அவர்களின் கண் பார்வையே பறிபோய்விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படியான ஒரு சோகமான சூழ்நிலைதான் ஓவியர் மனோகருக்கு ஏற்பட்டது, ஆனாலும் அவர் அதற்காக உடைந்துபோய் உட்கார்ந்து மௌனமாகி விடவில்லை, தன்னால் முடிந்தளவு ஓவியங்களை இறுதிவரை வரைந்து கொண்டே இருந்தார். கடைசிக் காலத்தில் கறுப்பு வெள்ளைக் கோட்டு வரைபடங்களை வரைவதில் அதிக அக்கறை காட்டினார். தமிழக இதழ்களில் வெளிவந்த எனது கதைகளுக்குப் […]