மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

  மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் ஜூன் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு   -லதா ராமகிருஷ்ணன்           சொல்லவேண்டிய சில….. வாழ்க்கைக்குக் கவிதை தேவையா? வாழ்க்கைக்குக் கவிதையால் என்ன பயன்? வாழ்க்கைக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு? கவிதையைப் படிப்ப தால் என்ன கிடைக்கிறது? கவிதை எழுதுவதால் என்ன கிடைக்கிறது _ இவற்றிற்கும் இவையொத்த பிறவேறு கேள்விகளுக்கும் நம்மிடம் உள்ள ஒரே பதில் […]

தொடுவானம் 26. புது மனிதன் புது தெம்பு

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

            நாடகம் வெற்றிகரமாக நடந்தேறிய மகிழ்ச்சியில் ஒரு நாள் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்து பங்குபெற்ற அனைவரும் கூடினோம்.           அப்போது சிங்கப்பூர் ஆசிரியர் கழகம் நான்கு மொழி  நாடகப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.அதன் விளம்பரம் தமிழ் முரசில் வெளிவந்திருந்தது. அந்தப் போட்டியில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்தேன். அது கேட்டு அனைவரும் உற்சாகமானார்கள்.           நாடகத்தின் கதை […]

அருளிச்செயல்களில் அறிவுரைகளும் அரசளித்தலும்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

‘இராவணாதி கும்ப கருணர்களைவ தம்செய்யவளைமதில்அயோத்தியில் தயரதன் மதலையாய்த் தாரணி வருகுதும்’என்று தேவர்களுக்கு வரமளித்த வண்ணம் திருமால் ஸ்ரீஇராமபிரானாக அவதரித்தார். விஸ்வாமித்திரருடன் கானகம்சென்று தாடகைவதம் செய்து தவமுனியின் வேள்விகாத்து அகலிகைக்கு சாபவிமோசனம் கொடுத்து, மிதிலை சென்று வில்முறித்து ஜானகியை மணம் புரிந்தார். அயோத்தி வந்தபின் தயரதன் தன்மகன் இராமபிரானுக்கு முடிசூட்ட எண்ணி பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தார். ஆனால்மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயியின் வரங்கள் மூலம் இராமன் வனம் ஏகினார். தண்டகாராணியம் வந்த தசமுக இராவணன் சீதாபிராட்டியைச் சிறை […]

கவனங்களும் கவலைகளும்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

  எஸ். ஜெயஸ்ரீ இனிமையான இசையை வெளிப்படுத்தும் தந்திக் கருவியில், ஒவ்வொரு கம்பியும் ஒவ்வொரு சுரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் கலவையின் வெளிப்பாடு அருமையான, இனிமையான இசையாகும். அதுபோல சிறுகதை, நாவல், கட்டுரை, பக்தி இலக்கியம், நவீனகவிதை, மரபுக்கவிதை, சொற்பொழிவு என ஏழுதந்திகளால் இழுத்துக்கட்டப்பட்ட இலக்கிய இசைக்கருவியைத் தன்னகத்தே கொண்டுள்ளவர் வளவ. துரையன். தன்னுடைய பதினெட்டு வயதிலிருந்து இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ள இவர், தன்னுடைய நாற்பத்தேழாம் வயதிலிருந்து புத்தகங்கள் எழுதி வெளியிடத் தொடங்கி உள்ளார். தற்போது அறுபத்தைந்து வயது […]

மொழிவது சுகம் ஜூலை 26 2014

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

              1. பிரான்சில் என்ன நடக்கிறது? :       கச்சைக் கட்டி நிற்கிறார்கள் ‘மார்புக் கச்சை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் ‘soutien -Gorge’. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு support என்றும் Gorge என்பதற்கு bosom என்றும் பொருள். தற்போது இச் சொல்லைப் பன்மையில் எப்படி எழுதலாம் என்பதில் பிரெஞ்சு அகராதிகளுக்குள் பெரும் பிரச்சினை. கச்சை என்ற பொருள் குறித்த வார்த்தையில் இணைந்துள்ள மார்பு என்ற சொல்குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. வருடா […]

கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

  பாவண்ணன் ’பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள். ஒளவையார் சுட்டிக்காட்டிய பத்து குணங்களில் […]

வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

பாவண்ணன் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் ’மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு சிறையில் அகப்பட்ட ஒருவன், விடிந்தால் தண்டனை என்கிற நிலையில் தன் பிரியமான மனைவிக்குக் எழுதும் கடிதம்தான் அச்சிறுகதை. வேலை தேடிச் சென்ற அரபுநாட்டில், உரிய பதிவுச்சீட்டு இல்லாமல் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு தப்பித்தப்பி ஓடி, […]

திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, 630561 அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக […]

ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும் செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர். ரேமண்ட் […]

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1

This entry is part 19 of 26 in the series 13 ஜூலை 2014

        (Michael Baigent) இதுதான் மெய்யியல் என்று மெய்யியலுக்கு திட்டவட்டமான வரையறை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. பொருட்களின் உண்மை குறித்து ஆய்வது மெய்யியல் என்கிறார் திருவள்ளுவர். கண்ணால் கண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம்மிடம் ஒரு முதுமொழி உண்டு. இவ்விடத்து மெய் என்பது உண்மை, என்ற சொல்லுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. ஆனால் உண்மை மட்டும்தான் மெய்யியலா? எது உண்மை? உண்மையை […]