‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’

This entry is part 3 of 31 in the series 31 மார்ச் 2013

‘அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது….அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான்.’ நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் […]

தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து

This entry is part 20 of 29 in the series 24 மார்ச் 2013

  1)அன்வர்பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எழுத்துப்பிரதி. வாழ்வின் மீது படிந்துவிட்ட கசப்பையும், ஆற்றாமைகளையும் பேசுகிறது. தோல்வியின் மீதான வலிகளின் பரப்பில் நாவல் தன்னை புனைந்துள்ளது. யதார்த்தமே பிரதியாக்கத்தில் மறுயதார்த்தமாக உருப்பெற்றுள்ளது. யதார்த்தத்தின் கதைமாந்தர்கள் மறுயதார்த்த பிரதியின் பரப்பினுள் நடமாடுகிறார்கள்.விளிம்போரத்தில் யாரும் கவனித்திராத ஒரு வாழ்வியல் தரிசனத்தை மிகுந்த துயரத்தோடு நாம் இதில் அனுபவிக்க முடியும். இந்து சாதீய காலனியாதிக்கத்தின் இறுக்கத்திலிருந்து விடுபடுதலின் அறிகுறியே முஸ்லிம் மதமாற்றம். இஸ்லாத்தின் ஒரிறை குறித்த நம்பிக்கை, இறை […]

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7

This entry is part 24 of 29 in the series 24 மார்ச் 2013

  செல்லப்பா, தன் சிஷ்யர்கள் எல்லோரையும் தன் அச்சில் வார்க்கப் பார்க்கிறார் என்று க.நா.சு. சொன்னாலும், அப்படிச் சொல்வதில் ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்தாலும், அதற்கு ஆதாரம் ஏதும் யதார்த்த நிகழ்வுகளில் இல்லை. அவர் எழுத்து பத்திரிகையில் வெளித்தெரிந்த, அவருக்கு மிக சந்தோஷம் அளித்த எவரும் அவரவர் தம் தனி வழியில் சென்றார்களே தவிர அவர் அடிச்சுவட்டில் சென்றவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தம் இலக்கிய ஜீவிதம் எழுத்து இதழில் தான் பிறந்தது என்பதில் மாறுபட்ட […]

செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’

This entry is part 18 of 29 in the series 24 மார்ச் 2013

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது. பெண்கள் அணியும் புறப்பொருள்கள். கற்புடைய பெண்கள் அவற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது.ஆனால் கூந்தலோ, அவள் பிறக்கும்போதே அவளுடன் சேர்ந்தே பிறந்து, அவள் வளரும்போது தழைத்து நீண்டு அவளுடனே சேர்ந்து வளர்ந்து அவள் முதுமை அடையும் காலத்து தானும் நரைத்து அவளுடனே சேர்ந்து மறையும் […]

தொல்காப்பியம் ஆந்திரசப்தசிந்தாமணி கூறும் எழுத்தியல் கோட்பாடு

This entry is part 11 of 29 in the series 24 மார்ச் 2013

  பி.லெனின் முனைவர்பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613010 தோற்றம் மொழியின் கூறுகளை விளக்குவதில் இலக்கணம இன்றியமையாத இடம் வகிக்கின்றது. ஒரு மொழியின் கூறுகளைக் காத்து அமைப்பு வழியில் நெறிப்படுத்துவதில் இலக்கணத்தின் பங்கு மிகப் பெரிது, ஒவ்வொரு மொழிக்கும் அடிப்டபடையாய் இருப்பவை ஒலிகள், ஒலி இன்றி மொழிகள் இல்லை. ஓலிகள் எழுத்து என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இவ்வெழுத்து பொதுவாக ஒலி வடிவத்தையும் வரி வடிவத்தையும் குறிப்பதாக அமைகிறது, அவ்வெழுத்து எழுத்தியல் சிந்தனையென்று […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 49

This entry is part 9 of 29 in the series 24 மார்ச் 2013

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்     வாழ்வியல் வரலாற்றை முழுமையாக எழுதப் புகுந்தால் ஓர் ஆழ்கடலின் ஆய்வு அறிக்கையாகிவிடும். முத்துச் சிப்பிகள் என்று அள்ளி வந்தோமானால் கூட சில சிப்பிகளில் மட்டுமே முத்துக்கள் காணப் படும். மற்றவைகள் வெற்றுச் சிப்பிகளாக இருக்கும்.. சமுதாயப் பிரச்சனைகளை என்னால் முடிந்த அளவு எழுதினேன். சாதி மதம், அரசியல், இயக்கங்கள், ஊழல், வன்முறைகள் இந்தப் பட்டியல் நீளமானது. எழுத்தால், பேச்சால் சீர்திருந்தும் நிலையைக் கடந்து […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……22 வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’

This entry is part 7 of 29 in the series 24 மார்ச் 2013

      கதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். அதைவிட அதிகம் பிடிக்கும் கடிதங்கள் எழுதுவது.       கதை எழுதினால், அது அச்சாக பத்திரிகையைத் தேடவேண்டும். அப்படியே கதை அச்சில் வந்தாலும் அதை எத்தனை பேர் படித்து ரசிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.       சில கதைகள் எவராலும் படிக்கப்படாமலே கூடப் போகலாம்.  ஆனால் கடித விஷயம் அப்படி அல்ல. அதைப் பெறுகிறவர் அதைப் படித்தே தீர்வார். அவர் அதில் உள்ள விஷயங்களை ரசித்து மகிழ்கிறாரா, படித்து […]

கடைசி வேரின் ஈரம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள். இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை […]

மெல்ல நடக்கும் இந்தியா

This entry is part 12 of 26 in the series 17 மார்ச் 2013

வேங்கட ஸ்ரீநிவாசன் மார்க் துல்லி – கல்கத்தாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பயின்ற ஆங்கிலேயர். பி.பி.சி.யின் தெற்காசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர். தற்போது புது தில்லியில் பத்திரிகையாளராக இருப்பவர்.   ஜில்லியன் ரைட் – இவர் துல்லியின் தோழி. இந்திய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருபவர்.   இந்த இருவரும் இணைந்து பல புத்தகங்களை எழுதியுள்ளனர். ‘No Full Stops in India’, ‘The Heart of India’ ஆகிய புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை.   2002-ஆம் […]

“தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்” )

This entry is part 22 of 26 in the series 17 மார்ச் 2013

எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, நியாயமாக, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக, […]