Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • நினைவுகளின் சுவட்டில் – (87)

  நினைவுகளின் சுவட்டில் – (87)

  இல்லஸ்ட்ரேட்டட் வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன. அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி மக்களின் அபிமான பத்திரிகையாகவும் ஆக்கின. ஒன்று அதில் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் […]


 • அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்

  ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல் தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத் தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இன்றும் சரி, இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கிம், பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை அடுத்தடுத்து […]


 • இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்

  இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்

  முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். பெருங்கதையாடல்போல் உடனடிப் பார்வைக்கு குறுக்கும் நெடுக்குமாக விவாதங்கள் அலைபாயும் ஒரு கலைக்களஞ்சியமாக உருவாகி உள்ளது. முத்துமோகனின் ஆய்வியல் பயணத்தில் இந்தியத்தத்துவமரபு, ஐரோப்பியத்துவ மரபு, தமிழ்தத்துவமரபு ஊடாட்டம் கொள்கின்றன. எமிலிதர்கைமும், மாக்ஸ்வேபரும் மதம்பற்றி பேசியதை உரையாடல் செய்கின்றன. தத்துவங்கள், மதங்கள், அமைப்பியல், பின்நவீனத்துவம், பின்காலனியம் சார்ந்த விவாதங்களை மார்க்ஸிய பின்புலத்தோடு வாசகனிடத்தில் உரையாட முன்வருகின்றன. எதிர்க்கதையாடல்களின் ஒலிகளை தன்னுள் நிரப்பி வைத்த எழுத்து உண்மை, […]


 • பழமொழிகளில் ஒற்றுமை

  பழமொழிகளில் ஒற்றுமை

  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இன்று மனிதர்கள் மதத்தால், இனத்தால், மொழியால், நிறத்தால், அரசியலால் பிளவுபட்டுத் தங்களுக்குள் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றனர். நாட்டிற்கு நாடு மக்கள் வேபட்டு மனம் குறுகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முனைகின்றனர். நாட்டுக்கு நாடு மட்டுமல்லாது ஒரே நாட்டிற்குள்ளும் இத்தகைய நிலைமையே அதிகரித்துள்ளது. நாட்டிற்குள்ளும், மாநிலத்திற்குள், மாவட்டத்திற்குள், வட்டம், ஊர், கிராமம், தெரு, வீடு, உறவுகள் என இவ்வேற்றுமை என்ற பகையுணர்ச்சி […]


 • ஜென் ஒரு புரிதல் – பகுதி 31

  ஜென் ஒரு புரிதல் – பகுதி 31

  “காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரசித்தி பெற்ற “ஸுஸுகி” என்னும் ஜென் சிந்தனையாளரால் ஈர்க்கப் பட்டவர். இவரது கவிதைகளில் சில ஒரு மேற்கத்தியரின் ஜென் பற்றிய புரிதலாகக் காணக் கிடைக்கின்றன. ஸ்னைடர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த […]


 • சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘

  சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘

  3 இடியட்ஸ் மற்றும் நண்பன் தழுவலுக்கு சொந்தக்காரர் சேத்தன் பகத். கரீனா கபூரைப் பார்க்க, ஆமீர்கானும், தமிழில் விஜய்யும், புரொபசர் வீட்டுக்குச் செல்வது உட்பட சில காட்சிகள் இவர் கதையிலிருந்து சுட்டதுதான். அதைப் பற்றி ஒரு சர்ச்சை எழுந்து, அமைதியாக செட்டில் ஆகிப் போனது படம் வெளிவந்தவுடன். இந்த முறை கொல்கத்தா போன என் மகள், பிடித்துக் கொண்டு வந்த புத்தகம் தான் இது. அப்படிப் படித்ததுதான் காலேட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள். இப்போது சேத்தன் பகத். […]


 • நினைவுகளின் சுவட்டில் – 86

  நினைவுகளின் சுவட்டில் – 86

  நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ஓவியங்களின் கலர் பதிவுகளையும் முக்கிய மாகச் சொல்ல வேண்டும். நான் 1950 […]


 • பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

  பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

  நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார் என்று சொல்வதைவிட மும்பை மண்ணும் மும்பை மனிதர்களும் அவர் கதைகளின் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் அதுவே அவர் எழுத்துகளின் தனித்துவமான அடையாளமாக இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற மானுடன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளி இதே இந்த மும்பை மண்ணில் எழுத ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் தீபம் இதழில் […] • ”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.

  ”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” எழுதியவர் ஸ்ரீநிவாஸ். ஓவியர் ஜெ. பிரபாகர்.

  ”மகாபலிபுரம்.. உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி” என்ற நூல் படித்தேன். நாம் சாதாரணமாக சென்று அவசரம் அவசரமாக ஒரு சரித்திரச் சின்னத்தைப் பார்த்து வருகிறோம். அதற்கு எல்லாம் இப்படி ஒரு வழிகாட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே எனத் தோன்றச் செய்த நூல் இது. இது தங்கத்தாமரை பதிப்பகம் வெளியீடு ( சுபா — எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணனுடைய பதிப்பகம்). இந்நூலை வடிவமைத்தவர் பா. கணேஷ். மிக அருமையான வடிவமைப்பு. இந்த மாதிரி ஓவியங்களோடு கூடிய […]