தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 பெப்ருவரி 2017

‘இலக்கியக்கட்டுரைகள்’ படைப்புகள்

இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்

. இரட்ணேஸ்வரன் சுயாந்தன் “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற முதுமொழியில் வரும் ‘சித்திரம்’ என்ற சொல்லுக்கு மலையாளத்தில் ‘திரைப்படம்’ என்று பொருள் கூறுவார்கள். ஏனென்றால் கேரளாவில் அவர்கள்  உருவாக்கும் திரைப்படங்களில் பாதிக்குமேல் சமூக மட்டத்தில் உயரிய சிந்தனை நோக்கினைக் கொண்டதாகவும் சிறப்பான அறிவுத்தூரிகை கொண்டும் செதுக்கி [Read More]

படித்தோம் சொல்கின்றோம் — கிரிதரனின் குடிவரவாளன் கதை –

படித்தோம் சொல்கின்றோம் — கிரிதரனின் குடிவரவாளன் கதை –

முருகபூபதி – அவுஸ்திரேலியா     அகதியாக தஞ்சம் கோருபவர்களின் வாழ்வுக்கோலங்களை  சித்திரித்த தன்வரலாற்று நாவல்                                                முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நான் மெல்பனில் வாடகைக்கு இருந்த அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எனது வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. முதல் நாள் மாலை  வேலைக்குச்சென்று,  அன்று  அதிகாலை 3 [Read More]

2016 : சுப்ரபாரதிமணியனின் சமீப 3 நாவல்கள் :நூல்கள்

மனோ * நைரா  – சுப்ரபாரதிமணியனின்  நாவல். ( நைரா- நைஜீரிய  ரூபாய் ) உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். [Read More]

தொடுவானம் 151. முதல்வர் கலைஞர்

தொடுவானம்     151. முதல்வர் கலைஞர்

  அண்ணாவின் மறைவிற்குப்  பின்பு தமிழ் நாடு துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா தலைமையில் அருமையாக புதுமையான வகையில் ஆட்சி செய்தது. அண்ணா கழகத் தலைவர்களை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். இடையில் ஈ. வெ. கி.சம்பத்தும் கவிஞர் கண்ணதாசனும் மட்டுமே கழகத்தை விட்டு வெளியேறி தமிழ் தேசியக் கட்சியை ஆரம்பித்தனர். மற்ற தலைவர்கள் அண்ணாவின் தலைமையை ஏற்று [Read More]

“கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே”

————————————————————————————————————— கோவை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் : கருத்தரங்கில் பேசியது. ——————————————————————————————————————   “கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே” என்ற  சார்த்தரின் வாசகம் கடந்த சில நாட்களாய் என்னைத் [Read More]

வேத விமர்சனங்கள் (பொன்னியின் செல்வன் எழுதிய இருக்கு வேதம், யஜுர் சாம வேதங்கள் நூல் பற்றிய விமர்சனப் பார்வை)

  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை, 9442913985 இந்தியாவின் மெய்ப்பொருளியல் என்பது தொன்மை சார்ந்தது. அதுமட்டுமில்லாமல் உலக அளவில் நடைபெற்ற மெய்ப்பொருளியல் தேடல்களுக்கு இணையானது. சமண, பௌத்த, வேத, சைவ, வைணவ, அசீவக, சாங்கிய, உலகாயுத நெறிகள் அதற்கேற்ற வழிகளில் மெய்ப்பொருளியலைத் தேடின. இம்மெய்ப்பொருள் தேடலை வேதம் சார்ந்தமைவன, [Read More]

ஒப்பீட்டு நோக்கில் திருக்குறள் வேமன சதகம் : கற்பித்தலும் மதிப்பீடும்

  முனைவர் சி.சாவித்ரி இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர் – தமிழ்நாடு அற இலக்கியங்களை வகுப்பறையில் கற்பிக்கும் முன்பாக கற்கின்ற மாணவர்கள் எந்நிலையுடையவர்கள் என்பதை அறிந்து அவர்கள் தேவைக்கேற்ப கற்பித்தல் முறைகளை கையாளுவது ஒரு சிறந்த ஆசிரியரின் தகுதியாகும். அவ்வகையில் முதுகலை தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு இந்திய [Read More]

இலக்கியங்களில் நண்டுகள்

  இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு, போன்ற பெயர்களில் குறிக்கப்படுகிறது. ”ஐங்குறுநூறு” என்னும் சங்க இலக்கிய நூலில் மருதத்திணையைப் பாடிய ஓரம்போகியார் நண்டு குறித்துப் பத்துப் பாக்கள் “கள்வன் பத்து” என்னும் பெயரில் எழுதி உள்ளார். நண்டின் செயல்கள் எல்லாவற்றையும் அவற்றில் அவர் காட்டுகிறார்.   கள்வன் பத்தின் நான்காம் பாடலில் “தாய் சாவப் பிறக்கும் [Read More]

அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்

அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை –  நூல் அறிமுகம்

முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம், திருமுறை, தத்துவம், திருப்புகழ் போன்றன கோயில்களின்  ஒலிநிலை உயர்வுகள். புராணம், இதிகாசம், [Read More]

தொடுவானம் 150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.

தொடுவானம்  150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.

மீண்டும் விடுதி வாழ்க்கை. தேர்வு முடிவுகள் வந்திருந்தன. எதிர்பார்த்தபடியே சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியியலும்  பாடத்தில் நான் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து எழுதி தேர்ச்சி பெறலாம். நஞ்சியியலில் அதிகம் கவனம் செலுத்தினால் போதும். ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும், நான் ஐந்தாம் வருடம் வகுப்பில் சேரலாம். இது எங்களுக்கு இறுதி ஆண்டு! இந்த ஆண்டு [Read More]

 Page 4 of 173  « First  ... « 2  3  4  5  6 » ...  Last » 

Latest Topics

தொடுவானம் 158.சிதைந்த காதல்

         மீண்டும் நீண்ட விடுமுறை. இந்த முறை [Read More]

புனித ஜார்ஜ் கோட்டையும், மன்னார்குடி மங்காத்தாவும்.

புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சிறப்புமிக்க [Read More]

கோடிட்ட இடங்கள்….

அருணா சுப்ரமணியன் அழகிய கவிதை  எழுதிட [Read More]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் [Read More]

Popular Topics

Insider

Archives