(1) இடப்பெயர்ச்சி
____________________________________________
நான் தூரத்திலிருந்து பறந்து வந்த இலை
இங்கே காற்றில் அலைந்து திரிகிறேன்
இங்குள்ள கடல், மலைகள் மற்றும் மரங்களுக்கு
தெரியாத, தெரியாத, அந்நியன்
தூரத்திலிருந்து வரும் கடல் காற்று போல
இடம்பெயரும் பறவைகள் தூரத்திலிருந்து வருகின்றன
தூரக் காட்டில் இருந்து வாசனை வருகிறது
பழங்கால மலர்…
நான் தூரத்திலிருந்து பறந்து வந்த இலை
நானும் சூடாக இருக்கிறேன்
மிகப் பெரும் நெருப்பில் தேவன் சூரியனின்
மிகப்பெரும் பிரபஞ்சம் என் நெற்றியில் முத்தமிட்டுள்ளது
ஒரு மரக்கிளையுடன் மீண்டும் சேர விரும்புகிறேன்
நான் வசந்தத்தின் நிறத்தைப் பெற விரும்புகிறேன்
புதிய நிலம்
புதிய தாவரங்களுக்கு
நன்றி சொல்ல வேண்டும்
நான் தூரத்திலிருந்து பறந்து வந்த இலை.

ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவஸ்தவா
தமிழில் : வசந்ததீபன்

(2) குழந்தை
____________________________________________
குழந்தை தனக்கு தானே குறைந்தபட்சம் என்ன வேண்ட முடிகிறது?
ஒரு நிலா
ஒரு சிங்கம்
ஏதோ
உபகதையில் தனது பங்களிப்பு
அல்லது உங்களுடைய காலணி.
நீங்கள் அக்குழந்தைக்கு
அதிகபட்சம் என்ன கொடுக்க முடிகின்றது?
நீங்கள் அக்குழந்தைக்கு கொடுக்க முடிகின்றது ஒரு பொருள் மட்டும் _
உங்களுடைய காலணி :
பாக்கி மூன்று
பொருள்கள் என்று
நீங்கள் புத்தகத்தை
ஒப்படைத்தீர்கள்
பின்னர் அந்தக் குழந்தை வாழ்வு முழுக்க நினைத்துக் கொண்டிருக்கிறது
தனது காலை எதில் வைப்பது… ?
அந்த புத்தகத்தில்
அல்லது
உங்களுடைய காலணியில் .
ஹிந்தியில் : அவதேஷ் குமார்
தமிழில் : வசந்ததீபன்