முத்துக்குமார்
அசாத்தியமான உழைப்பு தந்து உருவாக்கியுள்ள படைப்பு.
மூன்று பாகங்களாக அமைந்துள்ளது.
தெரசம்மா – புஷ்பராஜ் குடும்பத்துக் கதை வழியே நொய்யல் நதி, கொங்கு பிரதேச வாழ்க்கை, கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியே ஒட்டுமொத்த இந்திய நிகழ்வுகளும் பேசப்படுகின்றன.
ஒரு செயலின் / நிகழ்வின் மூலம் புது கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவது தனித்துவமான சிறப்பான உத்தி.
குட்ட நோயால் பாதிக்கப்பட்ட உறையூர் சோழன் கரிகாலன், தன் காலணியை ஊர்வலமாக்கி கப்பம் வசூலித்த ஔரங்கசீப்.
நிலவரி பட்டா முறையை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய கவர்னர் மன்றோ, பாளையக்கார முறை ஒழிந்து ஜமீந்தார் முறை அறிமுகம், சங்கமேஸ்வர் கோயில் பவானி ஈஸ்வரி கோயில் அம்மன் – ஆங்கிலேய கவர்னர் வழிபடுதல். தேவமாதா அருளினால் கல்வியறிவு பெற்ற சபரிப்புலவன். கொடுமுடியில் சிவபோதகம் அருளிய அகத்தியர்.
மார்வார் ராஜ்ஜியம் – ராஜபுத்திர அரசன் அஜித்சிங் எரி பொருளுக்காக வன்னி மரங்களை வெட்ட ஆணையிடுதல், மரங்களை கட்டிப்பிடித்து போராடிய அம்ருதா தேவி, 363 பேர் மரங்களோடு வெட்டப்படுதல். கால்நடை வைத்தியம்.
பழனிமலை தண்டாயுதபாணி சுவாமிக்கு –100 ஊர்கள், 8 மங்கலன் 12 பள்ளிகள் காணிக்கையாக கொடுத்த வையாபுரி நாட்டு அதிபர் சின்னப்ப நாயக்கர் –
ஆண் பெண் குழந்தைகளையும் கொன்று அவர்களது மூக்குகளை உதடுகளோடு சேர்த்து கத்தரித்து அனுப்பியவர்களுக்கு பரிசளித்த மைசூர் அரசன் (சாமராஜ உடையார்)
காங்கிரஸ் கொடியை கைவிட மாட்டேன் என்று போராடிய திருப்பூர் குமரன்
தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை
பவானி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் திருப்பூர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்த காமராஜர், கீரணி ஆபிஸ் சுப்பையா, கே.ஏ.பி. (நகராட்சி தலைவர்)
தேர்தலின் போது வாக்காளர்களை வேனில் அழைத்து வந்ததற்காக மன்னிப்பு கேட்ட அவினாசிலிங்கம் செட்டியார், கந்தசாமி செட்டியார், தீக்கதிர் சந்தாதார்ர்களைச் சேர்த்த தோழர் அற்புதசாமி, எலக்ஷன் டைகர் என்ற வண்டிமேஸ்திரி காதர் பாட்ஷா, கம்பம் சுத்தி ஆடும் சுப்பண்ணா உடையார்.
அவிநாசி பிரசாரகர் மெகருபான் மாணிக்கம், ராஜாஜியை எதிர்த்து சிறை சென்ற என்.ஜி.ராமசாமி, வங்க நிவாரண குழு பாடகர் கோவை ராமதாஸ், உணவு பதுக்கல் எதிர்த்த ஆண்டிப்பாளையம் ஈஸ்வரமூர்த்தி, மில் போராட்டங்களை ஒருங்கிணைத்த வழக்கறிஞர் பாசுதேவ், மட்டர்கானா கிருஷ்ணசாமி.
கம்யுனிஸ்ட் தோழர்களாக கே.டி.கே.தங்கமணி, கே.ரமணி, என்.ஜி.ராமசாமி, உமாநாத், கே.பாலதண்டாயுதம், மைதிலி சிவராமன் (வீரகாவியம் பிரசுரம்), துப்பாக்கி சூட்டில் பலியான தியாகி பரமேஸ்வரன், கம்யுனிஸ்ட் கருப்பண்ணன், கல்யாணசுந்தரம்,
போராட்டங்களின் போது பேச்சு வார்த்தை நடத்திய தொழிலாளர் மந்திரிகளாக வி.வி.கிரி, பிற்காலத்தில் மாதவன்.
நெசவு தொழில் செய்தவர்களாக வேதாத்திரி மகரிஷி, பாண்டிச்சேரி அனந்தரங்கம் பிள்ளை.
நாவல் பேசுகின்ற சில முக்கிய விஷயங்கள்..
நெசவாளர்களுக்கு அதிக வரி – உற்பத்தி அடிப்படையில். செம்பூர் பஞ்சம் – ஊர்களைக் காலி செய்தல்.
தஞ்சாவூரிலிருந்து கிறுஸ்துவர்கள் தாராபுரத்துக்கு புலம் பெயர்தல்
இலங்கை மலேசியா தேயிலைத்தோட்டத்திற்கு புலம் பெயர்தல்
தொழிலாளர் மந்திரி வி.வி.கிரி பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு..
MATERNITY BENEFIT ACT, WORKMENS COMPENSATION ACT, COURT OF ENQUIRY..
உணவுப் பொருள் பதுக்கல், 2ம் உலக யுத்தம், SOCIALIST, COMMUNIST, CONGRESS SOCIALIST..
பைக்காரா நீன் மின் திட்டம், சூலூர் விமான நிலைய தீவிபத்து, ஜப்பான் ரேடியோ, அரிசி ஆலைகள் ஆரம்பம், வங்க தேசத்து பஞ்சம், வங்க நிவாரண குழு.
32 மில்கள், 40000 தொழிலாளர்கள் கொண்டு மில்கள் போராட்டம் ஒருங்கிணைத்தவர் வழக்கறிஞர் பாசுதேவ்
ப்ளேக் நோய், அரிசிப் பஞ்சம், கோவை மாவட்ட பொதுஜன உணவு மாநாடு, பி.ராமசாமி ஏற்படுத்திய தொண்டர் படை, பெண்கள் தையற்பயிற்சி, அழகு நிலையம், உடவர்ட்ஸ் கிரைப் வாட்டர், வடவள்ளி வரதராஜ பெருமாள் கோயில் வரலாறு.
தனலெட்சுமி மில் & ஸ்டேன்ஸ் மில் போராட்டம், துப்பாக்கி சூடு. 11 பேர் சாவு. உமாநாத் தலைமறைவு வாழ்க்கை. நேரு எதிர்ப்பு – சி.ஏ.பாலன் கைது.
கூட்டுறவு சங்கங்கள் தோற்றம். புதுச்சேரி சங்கம் மேற்பார்வையாளர் நைனியப்பன் மீது ஊழல் குற்றச்சாட்டு. பிரான்ஸ் அரசாங்கம் விசாரனை. நிரபராதி என விடுவிப்பு.
மலுக்கம்மா, மலுக்க நாடார் பரம்பரை, வெற்றிலை வியாபாரம், கருப்பசாமி கோயில், சீலைக்காரி அம்மன் வழிபாடு, அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா,
பெரியநாயக்கன் பாளையம் ரயில் விபத்து. கொத்தடிமை ஒழிப்புத் திட்டம்
திருப்பூர் கள்ளுக்கடை போராட்டம், ராமசாமி நாயக்கர் கள்ளுக்கடை போராட்டம்
ரோஸ் மில், ராம் ஸ்பின்னிங் மில், சுகுணா பஞ்சாலை, ஸ்டேன்ஸ் பஞ்சாலை, காளீஸ்வரா ஆல், சரோஜா மில், தனலெட்சுமி மில் – ஆரம்பம். கிரைண்டர் அறிமுகம் (ராஜாமணி எண்டர்பிரைஸ்ஸ்). போர்வெல் இயந்திரங்களின் வருகை. வண்ணான் தொழில் முடங்கி – டிரை கிளினர்ஸ் வருகை.
திருட்டு, சீட்டாட்டம், கள்ள சாராயம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உஷார் கமிட்டி, கள்ளுக்கடை, லாட்டரி அறிமுகம்
சர்க்கரை செட்டியார் படிப்பகம் – எஸ்.ஏ.டாங்கே படிப்பகம் என மாறி பின்னர் வெண்மணி படிப்பகம் என்று மாறியது.
பூதலூர் பஞ்சம். தறிக்கு ரூ.100/- மானியம். 127 நாட்கள் நடந்த பணியன் தொழிலாளர்கள் போராட்டம். கேக், ரொட்டி வழங்கி பசியாற்றிய மோகன்ராஜ் பேக்கரி
Trunk line errection. fiber அறிமுகம். BSNL ஆரம்பம். house keeping, outsourcing, contract labours, labours union, struggles.
DEMONITASATION, GST IMPLEMENTATION – சிறுகுறு தொழில் பாதிப்பு
சிறு குறிப்புகளுடன் இடம்பெறும் கிராமங்கள்..
பரமேஸ்வரன் பாளையம், முருகம்பாளையம், தொட்டிப்பாளையம், கருமத்தம்பட்டி, பள்ளபாளையம், கோம்பைக்காடு, வாழையூர், பேரூர், காடையூர், போத்தனூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தெற்குப் பாளையம், தாதனூர், அமரம் பூண்டி, காமதேனுபுரம், சென்னியங்கிரி, சோமையாநல்லூர், கணுவக்கரை, செங்கத்துறை, அய்யம்பாளையம், சோமனூர், கொடிவேரி, செகடந்தாளி, புக்குளிபாளையம், புதூர், வேட்டுவபாளையம், தவனகிரி, நஞ்சன்கூடு, குண்டூர், அய்யன்கோவில், பூண்டி, அப்பிச்சியார், சாத்தூர், ஆவுடையார்புரம், முள்ளுப்பட்டி, துறையூர், புங்கவர்த்தம், வேலாயுதபுரம், கைக்கோளபாளையம், ரங்கசாமிகவுண்டன் பாளையம், உடையாம்பாளையம், உருமண்டாம்பாளையம், சிங்கிரிபாளையம், தெலுங்குபாளையம், பள்ளிபாளையம், எளச்சிபாளையம், புக்குவபாளையம் வேட்டுப்பாளையும், செம்மாண்டம்பாளையம், வலையர் மேட்டுப்பாளையம், வஞ்சிபாளையம், பாப்பநாயக்கன்பாளையம், புளியம்பட்டி, நாதேகவுண்டன் பாளையம், கணக்கம்பாளையம், வாலிபாளையம், பெருமாநல்லூர், காரமடை, கொங்கணகிரி, திருச்செங்கோடு, எடப்பாடி, நங்கவள்ளி, தளவாய்பட்டி, குத்தூஸ்புரம், ஒடக்காடு, குமாரனந்தபுரம், நெசவாளர் காலனி, பத்மாவதிபுரம், சாமுண்டிபுரம்.
முத்தாய்ப்பு ;
சுய தேவை, சுயநிதி தவிர வேற அடிப்படைகள் மனிதனுக்கு அவசியம். ஹெகல் – இயற்கை, தனி மனிதன், மனித சமூகங்கள் எல்லாவற்றையும் கருத்து முதல் மெய் பொருளின் வெளிப்பாட்டுப் பகுதியாய் பார்த்தப்போ – டார்வின் மனிதனை இயற்கைச் சக்தியின் போராட்டக் களமாகவும், கருவியாகவும் பார்த்தார். சிக்மண்ட் ப்ராய்ட் பாலியல் நாட்டங்கள், வன்முறைகளின் உந்துதலின் கைதியாக மனிதனைப் பார்த்தார். கார்ல் மார்க்சும், ஏங்கல்சும் வேற வகை.
மனிதன் சுதந்திரமாக சூழ்நிலைகளை மாற்றவும் வெல்லவும் இன்றேல் அழிந்துபடவும் ஓயாமல் தன்னைத்தானே உந்திக் கொண்டு ஒரு தவறான ஆனால் துணிச்சலான முடிவை – இன்னொரு தவறான ஆனால் மேலும் துணிச்சலான முடிவால் நிராகரித்துக் கொண்டே கூட முரண்பட்டு நச்சுச்சுழலில் உழல்வதற்குச் சபிக்கப்பட்டவன்.
..
நன்றி. Muthukumar, Virudhunagar..j
0
தோழருக்கு அன்பு வணக்கம்.
சிலுவை நாவல் வாசித்து முடித்துள்ளேன்.
அற்புதமான அனுபவம்.
அசாத்தியமான உழைப்பு.
மிகுந்த பாராட்டுகள்.
தலை வணங்கி வாழ்த்துகிறேன்.
நாவலை வாசிக்கும் போது – எனது நினைவுக்கு வந்த நாவல்கள் இரண்டு.
ஒன்றை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்..
திரு பொன்னீலனின் தாயார் அழகியநாயகி அம்மாள் எழுதிய – கவலை (எங்கள் கதை)
திரு பூமணி எழுதிய – அஞ்ஞாடி = நாவல் எனது நினைவுக்கு வந்தது.
..
இந்த நாவல் ஒரு வரலாற்று ஆவணம்.
கொங்கு பிரதேசம், நொய்யல் ஆறு செல்லும் ஊர்களின் வரலாறு.
அனைத்து சிறு ஊர்களும் தேவையான குறிப்புகளுடன் இடம் பெறுகின்றன.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இடம் பெற்றுள்ளது.
ஒரு அற்புதமான அனுபவம்.
அனைவரும் வாசித்து – பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான நூல்.
என் வாசிப்பு அனுபவத்தை சிறு குறிப்புகளாக அனுப்பியுள்ளேன்.
இத்தகையதொரு வாய்ப்பை தந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
முத்துக்குமார்.
- 2 மொழிபெயர்ப்பு கவிதைகள்
- அந்த 100 நாள்கள் (அரசியல்)
- மழை புராணம் : 47
- மெச்சூரிட்டி
- ஒன்று புரிந்தது – உண்மைச் சம்பவம்
- கிணறு
- சிலுவை – சுப்ரபாரதி மணியன் எழுதிய நாவல்