This entry is part 3 of 7 in the series 13 செப்டம்பர் 2026

தங்கராஜ் வாத்தியார் பிரம்பு அடி

கருமேகத் திரளின் பின்னால்
ஊதும் காற்று அலைய
பூமி தகிக்க
மழை நீர் ஊரெங்கும் பொழிய
நடு நடுவே மின்னலொன்று
ஆறாம்வகுப்பு லால்குடி பள்ளியில்
அந்நாள் தங்கராஜ் வாத்தியார் பிரம்பு போல் தாக்க
நல்லவர் அல்லார்க்கும்
வணங்கினார்க்கும் வணங்காதார்க்கும்
அறிந்தார்க்கும் அறியாதார்க்கும்
நடுநின்று பெய்யும் மழை
வெட்டவெளியில் தனியே ஆடும் ஊஞ்சல் ஆமோதிக்க.

***

Series Navigationஅந்த 100  நாள்கள் (அரசியல்)மெச்சூரிட்டி