வடுக்கள், வேதனைகள், அவலங்கள் ஒரு வரலாறாகி தார்மீகக் கோபத்துடன் நிற்கின்றன முருகபூபதியின் ” சொல்ல மறந்த கதைகள் ”

This entry is part 30 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

                                                  எம்.ஜெயராமசர்மா – மெல்பேண்          நாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள்கதைகள் எழுதினார்.கட்டுரைகள் எழுதினார் விமர்சனங்கள் எழுதினார்.நாவலும் எழுதினார்.   செய்திகளையும் தொகுத்து எழுதிவந்துள்ளார்.          ( எம்.ஜெயராமசர்மா) இப்பொழுது எங்களுக்காக தமிழிலே புதிய ஒரு வடிவத்தில் தனது எழு த்தைத் தந்திருக்கிறார்.   அந்த முயற்சிதான் ” […]

ஸ்ரீஆண்டாள்பிள்ளைத்தமிழ்

This entry is part 20 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  தமிழ் நவீன இலக்கியத்தின் எழுத்தாளர்களில் முக்கியமானவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான நாஞ்சில் நாடன் அண்மையில் ’சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் 14 வகைச் சிற்றிலக்கியங்களை மிகுந்த தேடலுக்குப்பின் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார். அந்நூலில் ‘பிள்ளைத்தமிழ்’ என்னும் வகையில் பல பிள்ளைத்தமிழ் நூல்களை அவர் காட்டுகிறர். அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் எனும் நூலாகும். நாஞ்சிலின் நூலைப்படிக்க இயலாதவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத் தமிழ் பற்றி அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும் […]

காலம் தோறும் இசைக்கும் தமிழ் மற்றும் தொன்ம வளங்களும்

This entry is part 19 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  செந்தில் (முகவுரையாக ஒரு கருத்தையும் கவிதையையும் முன்வைத்து இக்கட்டுரையை தொடங்குகின்றேன். இந்தியாவின் மத ஆன்மிக நூல்கள் குறிக்கும் இறை தத்துவங்களும், தெய்வங்களும், மக்கள் வழிபாட்டு முறைகளும் பண்டய இந்திய துணகண்டத்தில் தோன்றிய அறிவியல், தத்துவ புரிதல்களின் குறியீட்டு (Metaphors) வெளிப்பாடே எனலாம்). உண்மை யாது? (ஐம்பெரும் காப்பியங்களின் பெயர்களினால்) வளையாத பதி எது? சிலம்பு சொல்லும் அதிகாரம் எது? குண்டு அலகேசி எது? மேகலையும் மணி எது? சீவகத்தில் உள்ள சிந்தாத மணி! மேற்சொன்ன வரிகளில் […]

நீர் வழிப்பாதை

This entry is part 18 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

(போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2014 முதல் பரிசு கதை) இன்று தீர்ப்பளிக்க வேண்டிய தினம். எந்த வழக்கும் இந்த அளவுக்கு மனதை நெருடியதில்லை. எனக்கு கிடைக்கப் பெற்ற இந்த பதவிக்கு சாதி.. மதம்.. இனம்.. மொழி.. மாநிலம்.. என்ற எந்த பாகுபடுதலுமின்றி தார்மீக நியாயங்களின் அடிப்படையில் நியாயம் செய்திருக்கிறேன் என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு. அதை எந்நாளும் தொடர செய்ய வேண்டும் என்பதில் ஏற்பட்ட பதட்டம் தான் இந்த நெருடலோ என எண்ணிக் […]

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

This entry is part 16 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

–     இரா.உமா   ​ “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு […]

நாயினும் கடையேன்நான்…

This entry is part 17 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

ஒரு அரிசோனன்   நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த சோற்றைப் போடுவார்களா என்று அலைந்து திரியும் — வீசி எறிந்த எச்சில் இலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சோற்றுப் பருக்கைகளை நக்கித் தின்ன அலையும் பொறுக்கி நாய்தான் நான். ஒரு இரவில், வழக்கப்படி ஒரு அம்மா தன் குழந்தைக்கு நிலவைக்காட்டிக் கதை சொல்லிக்கொண்டு […]

சகவுயிர்

This entry is part 21 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

      பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள். தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி. வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல் அவளை அதிகமாய் அழச்செய்தது. “இல்லை, என் வள்ளி தான் எனக்கு வேண்டும்… எத்தனை வலித்திருக்கும் அவளுக்கு..” என்று திரும்பத்திரும்ப அரற்றினாள் சிறுமி. சுற்றிலுமிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பாயிருந்தது. ‘குவிக்ஃபிக்ஸி’ல் தலையைக் கழுத்தோடு விரைந்தொட்ட முயன்றார் தந்தை. முடியவில்லை. சற்றே தொங்கிய பொம்மைத்தலையை யொருவர் அவசர அவசரமாக அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டார். ’உச்சகட்ட வன்முறைக்காட்சிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ள […]

ஒரு கல்யாணத்தில் நான்

This entry is part 22 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  கற்றுக்குட்டி   “வாருங்கள் வாருங்கள், வந்திருந்து பிள்ளைகளை வாழ்த்துங்கள், வாழ்த்துங்கள்” என்று அழைத்ததனால் போரடிக்கும் கல்யாணம் என்று தெரிந்திருந்தும் போனேன் புதுச்சலவை மணக்கின்ற வேட்டியுடன்   மண்டபமோ பிரம்மாண்டம், அலங்கரிப்போ அபாரம் அண்டியிருந்தோர் ஆடைகளோ, அடடா ஓ அடடா. சென்னைக் கடைகளேறி ‘செலெக்ட்’ செய்து வாங்கியதாம் சென்னிறக் கூரை மற்றும் ஜிலுஜிலுக்கும் ஜிப்பாவும்.   கழுத்திலொரு அட்டிகை, காதுகளில் வைரம், கட்டியிருக்கும் சேலைமேல் ஒட்டியுள்ள ஒட்டியாணம் கொழிப்பான அரைவயிறு சரிந்திருக்கும் சேலைக்குள் செழிப்பாக இருக்கிறார் சொந்தங்களும் […]

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014

This entry is part 27 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

  இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆண்டுதோறும்  அவ்வாண்டின் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. இவ்வாண்டில்  சுப்ரபாரதிமணியனின் நாவல்  ” தறி நாடா “சிறந்த நாவலுக்கானப் பரிசைப் பெற்றது.நல்லி குப்புசாமி பரிசுகளை வழங்கினார்.குறிஞ்சி வேலன், பாவைச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பிற நூல்களுக்கானப் பரிசு பெற்றவர்களில் சிலர்: ஆட்டனத்தி,  க.ப அறவாணன்,( சிறுகதை ),     யூமா வாசுகி            ( மொழிபெயர்ப்பு ), தஞ்சாவூர் கவிராயர் ( கவிதை ), தேவி நாச்சியப்பன் ( சிறுவர் […]

பேசாமொழி 20வது இதழ்

This entry is part 28 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

பேசாமொழி 20வது இதழ் வெளியாகிவிட்டது.  இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_20.html நண்பர்களே, தமிழில் மாற்று திரைப்படங்களுக்கான களமாக செயல்பட்டு வரும், பேசாமொழி இணைய இதழின் 20வது இதழ் வெளியாகியிருக்கிறது. இந்த இதழ் ஆனந்த் பட்வர்தன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சாரு நிவேதிதாவின் “லத்தீன் அமெரிக்க சினிமா” தொடர் இந்த இதழில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. ஆனந்த் பட்வர்தனின் மூன்றுவிதமான நேர்காணல், லெனின் விருது விழா பற்றிய கட்டுரை, என இந்த இதழ் முழுக்க முழுக்க மாற்று சினிமாக்கள் பற்றிய கட்டுரைகளோடு வெளியாகியுள்ளது. […]