பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்

This entry is part 21 of 26 in the series 9 டிசம்பர் 2012

நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள் நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்தான் சென்ற வருடம் தன் மகள் ஷமின் இறந்தாள் என்பதை ஜினோ ஒப்புகொள்ள கஷ்டப்படுகிறார். “என்னுடைய மகள் இறக்கவேண்டிய அவசியமில்லை” என்று பத்து குழந்தைகளுக்கு தாயான 62 வயது ஜினோ மெல்ல சொல்கிறார். ”சமிமின் பாவங்களை என்னால் மன்னிக்க முடியுமா என்று தெரியவில்லை. […]

வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை

This entry is part 22 of 26 in the series 9 டிசம்பர் 2012

தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை 94442913985 நகரத்தார் திருமண நடைமுறைகளில் மிக முக்கியமான திருமணச் சடங்கு வேவு எடுத்தல் என்பதாகும். நகரத்தார் திருமணங்களைக் கண்டு ரசிக்க வரும் வெளிய+ர்க்காரர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வு என்ன என்று வினவாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் இன்றியமையாத நிகழ்வு இதுவாகும். சிலேட்டு விளக்கு என்ற காற்றில் அணைந்து போகாத விளக்கினை வீட்டின் முன்புறத்தில் வைத்து இந்தச் சடங்கு முறை செய்யப்படும். இந்த […]

அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)

This entry is part 6 of 26 in the series 9 டிசம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா     28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக்  காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள் எழுதியிருக்கிறார். ராமர் ஓர் அவதார புருஷன் என்றே நானும் நம்புகிறேன். மச்சாவதாரம் தொடங்கி அனைத்து அவதாரங்களும்  சார்ந்த இலக்கியங்கள் இந்தப் புவியில் உயிரினங்களின் தோன்றத் தொடங்கியதிலிருந்தான பரிணாம வளர்ச்சியையே எடுத்துச் சொல்லுகின்றன.  மனிதனாய்ப் பிறக்கும் எவரும் ராமனைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்பதையே […]

சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்

This entry is part 19 of 26 in the series 9 டிசம்பர் 2012

” இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே வாங்கு ! இந்தியனாக இரு. இந்தியப் பொருட்களையே வாங்கு ! ” ” டேய் யார்றா அது. நேரம் காலம் தெரியாம கூவறது ? ” ” ஏனப்பா ? தேச பக்திச் சாரம் மிக்க வார்த்தைகளைத் தானே சொல்கிறேன் ? தவறென்ன இதில் ? ” ” பார்லிமெண்டே அமளி துமளி படுது ! எதிர்க் கட்சிக்காரவங்க எல்லாம் அன்னிய முதலீடு சில்லறை வணிகத்தில கூடாதுன்னு கத்தறானுங்க . இதுல […]

அக்னிப்பிரவேசம் -13

This entry is part 26 of 26 in the series 9 டிசம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இன்டர் பரீட்சைகளை நன்றாக எழுதினாள் சாஹிதி. முதல் வகுப்புக் கண்டிப்பாய் வரும். மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வுகள் உண்டு. அதற்காக விடுமுறையில் கோச்சிங் கிளாசில் சேர வேண்டும். நிர்மலாவை அந்த விஷயமாக கேட்டாள். ‘அங்கிள் வரட்டும் சாஹிதி. அவரைக் கேட்டுவிட்டு சேர்ந்துகொள்” என்றாள் நிர்மலா. “நுழைவுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கும்மா. உடனே சேர வேண்டும். அங்கிள் இன்னும் […]

பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.

This entry is part 25 of 26 in the series 9 டிசம்பர் 2012

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] [ஆர்க்டிக் வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்] சூட்டு யுகம் பூதமாகிப் புவிக்கு வேட்டு வைத்து மீளுது ! நாட்டு நகரம், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது ! புயலை எழுப்ப மூளுது ! பேய்மழை யைக் கொட்டி அழிக்குது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க வருகுது ! கடல் வெப்பம், மட்டம் ஏற்றி […]

ஆத்ம சோதனை

This entry is part 23 of 26 in the series 9 டிசம்பர் 2012

மு.கோபி சரபோஜி இலக்கணம் படித்து இலக்கியம் படைக்க வா என்றபோது இடித்துரைத்தோம். மரபுகளை கற்று மரபை மீறு என்றபோது மறுப்பு செய்தோம். புதுக்கவிதை செய்து புது உலகம் படைக்க புறப்பட்டவர்கள் நாங்கள் – என்றோம். இறுக்கங்களை இலகுவாக்கி மறுப்புகளை மரபாக்கியவர்களோடு சேர்ந்தோம். நம் கூட்டணியின் கூட்டல்களில் குயில்களின் கூவல்களை கேட்க வைத்தோம். கால ஓட்டத்தில்………… பாதை காட்டியவர்கள் பயிராய் வளர பாதசாரியாய் வந்த நாமோ பதர்களாகி போனோம். அளவில்லா கற்பனையில் அர்த்தமில்லா அனுமானத்தில் அவரவர் இஷ்டத்திற்கு எழுதிக் […]

வந்த வழி-

This entry is part 20 of 26 in the series 9 டிசம்பர் 2012

-முடவன் குட்டி ” வேய்..  கலீல் …வேய்..” – தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு. தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா  நான் என்ன செவுட்டுப் பெயலா..? ஏன் இப்படி சத்தம் போடுறீரு..? என்றார். காட்டுவா மேல் மூச்சு வாங்க, மேலும் தொடர்ந்தார்-சத்தமாகவே.: “பெரிய தெரு சேயன் வூட்ல, ரஜப் பதினாலுல கல்யாணம்.. ஆறு மாசத்துக்கு பெறவு இப்பதான் கல்யாணம்  வருது. பெரிய தெருக்காரங்க […]

நம்பிக்கை ஒளி! (10)

This entry is part 18 of 26 in the series 9 டிசம்பர் 2012

  ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று மெல்ல மெல்ல புதிய சொந்தங்களும், பந்தங்களும் ஒட்டிவர வாய்ப்பு அமைந்தும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சின்னம்மாவிடம் நேரில் சென்று பேச வாய்ப்பில்லாதலால், முத்தழகு அண்ணனைப் பற்றிய தகவலை போனில் விவரமாகச் சொன்னாள். விசயம் அறிந்தவர் உள்ளம் நெகிழ்ந்து, “மாலு ஆண்டவன் […]

22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )

This entry is part 17 of 26 in the series 9 டிசம்பர் 2012

ஏமாற்றிக் கெடுத்தவனை, ஏமாந்தவள் ஒருத்தி, பழி வாங்கும் பழைய கதை. ஆனால் பழைய பானையில் புதிய கள்ளு என்பது போல், வ்¢த்தியாசமான திரைக்கதை, நடிப்பு எல்லாமே. டெஸ்ஸா ஆப்ரகாம் ( ரீமா கலிங்கல் ) பெங்களூர்¢ல் வேலை பார்க்கும் இளம் செவ்¢லித்தாய். அவளுக்கும், அவளைப் போன்றோருக்கும், ஒரே கனவு, கனடா போய் செட்டில் ஆவது. அறைத் தோழி ஒருத்தி சிரில் ( ·பகாத் ·பாசில் ) என்பவனின் டிராவல் ஏஜென்சி மூலமாக, கனடா போகும் வாய்ப்பைப் பெறுகிறாள். […]