சுவரில் வாசகம் ”நோட்டீஸ் ஒட்டாதீர் மீறினால் தண்டிக்கப்படுவீர்” சூரியன் சுவற்றில் வரைந்த நிழல் ஓவியத்திற்கு யாரை தண்டிப்பது?
சமீபத்தில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு பொருள் வாங்க செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய உணவு பொருளை வீட்டுக்கு சென்று பிரித்து பார்த்தபோது தரமில்லாமல் இருப்பது தெரிந்தது. சரி, சிரமத்தைப் பார்க்காமல் திருப்பி கொடுத்து விட்டு, தரமான பொருளை விற்க வலியுறுத்தலாம் என்று தோன்றியது. மறு நாள் கடையின் மேலாளரை சந்தித்து பொருளின் தரக்குறைவை தெரிவித்தேன். புளுவை பார்ப்பது போல் பார்த்தார். எங்கே பொருள் என்று கோபமாக கேட்டார்? பொறுமையாக பொருளை எடுத்துக்கொடுத்தேன். இப்படி அப்படி பார்த்தார். நான் பொய் […]
மாநகர பஸ்ஸில் ஜன்னலோர பயணம் முன்னால் போனது இரண்டு சக்கர வாகனம் அம்மாவின் மடியில் மூன்று வயது பெண் குழந்தை சிக்னலில் நின்றது வாகனங்கள் குழந்தையை பார்த்து நாக்கை துருத்தினேன் குழந்தை திரும்பி நாக்கை துருத்தினாள் முகத்தை அஸ்ட கோணலாக்கி ஒரு சிரிப்பு வேறு சிக்னல் மாறி வண்டி கடந்து விட்டது நான் வாசித்ததிலேயே இன்றளவும் சிறந்த கவிதை அது தான்
ஒரு மரம் விடவில்லை ஒரு சுவர் விடவில்லை ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ் முதல்வர் கலந்து கொள்கிறாராம் ஊரே விழாக்கோலம் பூண்டது சிறுவன் படித்துக்கொண்டிருந்தான் காகிதம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது விழாவின் பெயர் ஏதோ “மரம் நடுவிழாவாம்”. அ.லெட்சுமணன்.
சமீபத்தில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 100 கணினி ”வல்லுனர்கள்” சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து தங்கள் கணினி அலுவலகத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் தங்களுக்கு 2 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என்றும் முறையிட்டார்கள். குறைகளை கேட்டறிந்த ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டு குறைகளை ஒரு மனுவாக எழுதி தரும்படி கேட்டிருக்கிறார். யாருக்குமே என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள். மறுநாள், இது செய்தியாக சில தினசரிகளில் வெளியாகி […]
நான் (பிரதம மந்திரி) சர்வ வல்லமை பொருந்தியவன் எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. சரி. முதலில் என் வருத்தத்தை சொல்லி விடுகிறேன். கால் பிரதமராகிய என்னிடம் பத்து கேள்விகளை கேட்கிறீர்களே, முக்கால் பிரதமரிடம் ஏன் முந்நூறு கேள்விகளை கேட்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. (எனக்கு வருத்தப்படக்கூட உரிமை இல்லையா என்ன?) சரி. அதிருக்கட்டும். நான் ஒன்றும் உங்கள் குறைகளை தீர்க்கப்போவதில்லை. ஆனால், எனக்கும் கேள்வி […]
எப்போதும் ஏதேனும் சாதித்தவர்களை பற்றி மட்டும் தான் எழுத வேண்டுமா? ஒரு சாதாரண மனிதனை பற்றி எழுதலாமே என்று தோன்றியதன் விளைவுதான் இக்கட்டுரை. கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு சிறிய ஊரில் வாழ்ந்த ஒரு தாத்தாவின் வாழ்க்கை பற்றிய குறிப்பு இது. தாத்தாவின் பிரதான தொழில் கை வண்டியில் ”வெள்ள முறுக்கு” விற்பது. பெரும்பாலும் சின்ன வயதில் தாத்தாவின் வெள்ள முறுக்கு இல்லாமல் ஒரு நாள் முடிவடைவதே இல்லை. வெள்ள முறுக்கு என்பது வட்டமானது. […]
சென்னை போன்ற பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை காண முடிகிறது. கடைநிலை ஊழியர்களுக்கான வாகனம் சைக்கிள் என்றாகிவிட்டது. தபால்காரர், கொத்து வேலை செய்பவர், பிளம்பர் போன்றோர்கள் தான் சைக்கிள் உபயோகிக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் சைக்கிள் உபயோகிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. என் நண்பன் ஒருவன் பள்ளிக்கூடம் போகும் போது வாங்கிய சைக்கிளை இன்றும் சென்னையில் வைத்திருக்கிறான். சரஸ்வதி பூஜை அன்றைக்கு மட்டும் துடைத்து பொட்டு வைப்பான். வாகனம் என்பது அவரவர் வசதியை(convenient) […]
சாதாரணமாக துவங்கிய ஒரு நாளின் பகல் பொழுதில் அலுவலக சிற்றுண்டி சாலையில் கல்லூரி கால நண்பனை 15 ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக சந்தித்தேன் சிரிக்க சிரிக்க பேசினோம் கடற்கரைக்குப் போவது என்று முடிவானது தத்தம் மனைவிக்கு அலைபேசியில் அழைத்து இரவு சாப்பாடு வெளியில் என்றும் தாமதமாக வீடு திரும்புவோம் என்றும் தெரிவித்தோம் குழந்தை, குடும்பம், வேலை, கல்லூரி ஆசிரியர் ராமசாமி, கல்லூரி கால நண்பர்கள் சத்திய நாரயணன், அருண்குமார், கருப்பையா, நண்பிகள் பற்றிய சுவாரசியங்கள் எல்லாம் […]