வடித்த கவிதைகளை வரலாறுகண்ட ஒரு வாரஇதழுக்கு அனுப்பினேன் தேரவில்லை நூலாக்கினேன் கவிக்கோவின் கட்டைவிரலாம் நான் அணிந்துரை சொன்னது என் கவிதைகள் குறிஞ்சி மலர்களாம் குற்றாலச் சாரலாம் ஒரு திரைக்கவி மெச்சினார் பைரனின் நகலாம் நான் ஒரு பேராசிரியர் புகழ்ந்தார் மின்சாரம் எனக்குள் மிருதங்கம் இசைத்தது விழாவில் கொஞ்சம் விற்றது மிச்சம் தோற்றது இன்றுவரை கேட்பார் எவருமில்லை என் கவிதைகளை தேர்வு செய்யாத அந்த வாரஇதழ்களின் […]
குளத்தங்கரை வாகைமரம் நான் விரல்பிடித்து நடந்த இன்னொரு கரம் உச்சிக்கிளையில் கிளிகளின் கூச்சலில் காட்சியும் கானமுமாய் விடிகிறது என் காலை பனம்பழம் சுட்டது பட்டம் விட்டது பதின்மக் காதலைப் பகிர்ந்துகொண்டது நட்புகள் பிரிவுகள் முகிழ்ந்தது முடிந்தது இன்னும் இன்னுமென்று வாகையடியே வாழ்க்கையானது தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள் தாவத் தயாராய் தவளைகள் முதுகு சொரியும் வாத்துக்கள் சுழிக்கும் மீன்கள் கலையும் அலைகளில் உடையும் முகில்கள் அத்தனையும் அதிகாலைத் தூறலில் மனவெளி […]
நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் …….எனக்குப் புரிகிறது நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன …….எனக்குப் புரிகிறது மருத்துவர் பதிக்கும் ஸ்டெத்தோடு பதிகின்றன விரல்கள் …….எனக்குப் புரிகிறது கடைக்காரர் சில்லரை தருகிறார் சீண்டுகின்றன விரல்கள் …….எனக்குப் புரிகிறது எடிஎம்மில் எனக்கு முன்னால் நிற்பவர் வழிவிட்டு வழிகிறார் …….எனக்குப் புரிகிறது ரயிலில் இடம்விட்டு எழுகிறார் இடிப்பதுபோல் நிற்கிறார் …….எனக்குப் புரிகிறது நாற்பதைத் தாண்டியவள் நான் எனக்கே […]
வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள் வெள்ளமும் வெயிலும் சுழற்சி மையத்தண்டாக மக்களாட்சி ஆட்காட்டி விரல்களால் மாறியிருக்கிறது ஆட்சித் தோட்டத்தின் அதிகாரங்கள் சில புதிய மரங்கள் சேர்க்கப்படலாம் சில பழைய மரங்கள் கழிக்கப்படலாம் அதற்குமுன் ஆணிவேரைத் தோண்டிய பெருச்சாளிகளை விரட்டுங்கள் இல்லையேல் அசாதாரண வெற்றிக்கும் அற்ப ஆயுளே இந்தியாவின் இமயம் மக்களாட்சி இமயம் இருக்கும்வரை இந்தியா பேசப்படும் அமீதாம்மாள்
குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம் காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது நேற்று நடந்த ஓர் அவமானத்தை ஓர் இழப்பை ஒரு துரோகத்தை கிளறிக் கிளறித் துடிக்கிறது கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம் எப்படி எரிப்பது? இதோ மனோவியல் ஞானி ஜேகேயின் ஜெயிக்கும் வார்த்தைகள் காணும் பொருளாக காண்பவன் மாறிவிட்டால் கிளறும் வேலையை மறக்கும் மனம் பின் ஜெயிப்பது நிஜம் […]
மலையுச்சியில் அந்த மங்கைக் குரங்கு மலையடியில் அந்த மன்மதக் குரங்கு ஒரு நாள் மன்மதன் மலைக்குச் சென்றான் கண்களிலெல்லாம் காதல் பொறியாய் மங்கையிடம் வீழ்ந்தான் மன்மதன் மலையடியின் சுளைகளையும் கனிகளையும் மங்கையிடம் கொட்டினான் தழைகளால் பந்தல் செய்தான் கொடிகளால் ஊஞ்சல் செய்தான் ராணியானாள் மங்கை சேவகனானான் மன்மதன் கருவுற்றாள் மங்கை ஒன்று இரண்டு மூன்று அடிக்கடி மலையடி செல்லும் மன்மதன் அப்பா முதுகு சொறிவான் அம்மாவுக்குப் பேன் பார்ப்பான் பாட்டி […]
ஆறாம் வகுப்பில் களவாடப்பட்டது என் முதல் பேனா சந்தேகித்தேன் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தியை ஆசிரியரிடம் சொன்னேன் என் அப்பா முதலாளி அவன் அப்பா கூலி நம்பினார் ஆசிரியர் ஆசிரியர் கிச்சாவைக் குடைந்தார் ‘நீ இல்லையென்றால் கூட்டிப் பெருக்கும் ருக்குப் பாட்டிதான் ஒளிக்காமல் சொல்’ எடுத்தேன் என்றோ இல்லை யென்றோ சொல்லாமல் ஊமையாய் நின்றான் கிச்சா அது திமிரின் அடையாளமாம் முட்டியில் அடித்தார் மண்டி போட வைத்தார் அடுத்த […]
1960களில் நாவற்பழம் விற்கும் பாட்டியின் நங்கூரக் குரலால் தெருக்கோடி அதிரும் ‘நவ்வாப்பழோம்……’ உழக்கரிசிக்கு உழக்குப் பழம் பள்ளிக் கூடத்திலும் ஒரு தாத்தா நாவற் களிகளை கூறு கட்டி விற்பார் செங்காயை உள்ளங்கைகளில் உருட்டி கனிந்துவிட்ட தென்று களித்த காலங்கள் அவை ஒரு நாள் விளையாட்டாய் விதைத்து வைத்தேன் ஒரு நாவல் விதையை இரண்டே மாதத்தில் இரண்டடி வளர்ந்தது புதிதாய்ப் பிறக்கும் பொன்தளிர் கண்டுதான் என் பொழுதுகள் புலர்ந்தன இருபது ஆண்டுகளில் இருபதடி […]
பொத்திக் கிடந்த பூவித்து புறப்பட்டது-மண் வழிவிட்டது நாளும் வளர்ச்சி நாலைந்து அங்குலம் ஆறேழு தளிர்கள் அன்றாடம் பிரசவம் தேதி கிழித்தது இயற்கை புதுச் சேதி சொன்னது செடி முகம் கழுவியது பனித்துளி தலை சீவியது காற்று மொட்டுக்கள் அவிழ்ந்து பூச்சூட்டியது பட்டாம்பூச்சிக் கெல்லாம் பந்தியும் வைத்தது முதுகுத் தண்டில் பச்சைப் பூச்சிகள் கிச்சுச் செய்தது தேன் சிட்டொன்று முத்தமிட்டது கூசுகிறதாம் சிரித்தது செடி உதிர்ந்தன சருகுக் கழிவுகள் திமிறிய […]
புரையோடிய புண்ணையும் புன்னகையால் கழுவி களிம்பிட்டுக் கட்டுவார் ஆறேழு நாளில் ஆறிவிடு மென்று நம்பிக்கை விதைப்பார் நலம் கூட்டுவார் அந்த மருத்துவ மனையில் புண்ணாற்றும் பிரிவில் இது பதினேழாம் ஆண்டு அந்தத் தாதிக்கு ஒரு நாள் அவர் குடும்பம் பற்றிக் கேட்டேன் ‘பல்கலையில் மகனாம் உயர்நிலையில் மகளாம் அப்பா முகமே அறியாராம் அவர் எங்கேயோ யாரோடோ’ என்றார் ‘இரண்டு சிறகுகள் இயற்கையம்மா இணைந்து வாழுங்கள்’ என்றேன் அவர் […]