This entry is part 6 of 20 in the series 23 மே 2021
அமீதாம்மாள் சிறகு சிறை இரண்டுமே இதுதானாம் துளிர்களே இங்கு வேர்களாம் வியர்வையே இங்கு ‘கொடை’ களாம் செலவுகளே இங்கு வரவுகளாம் கண்ணீரே இங்கு உறவுகளாம் தலைமுறைப் பாலங்கள் இங்குதானாம் கோடையோடு வசந்தமும் இங்குதானாம் நடவும் அறுவடையும் இங்குதானாம் பூட்டும் சாவியும் இடம் மாற்றிக் கொள்வது இங்குதானாம் அறுசுவையும் இங்குதானாம் நவரசமும் இங்குதானாம் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சிவப்பு தத்துவமாவது இங்குதானாம் விளக்கு எண்ணெய் திரி பொறி விளக்கமாவது இங்குதானாம் மன்னிப்பேகூட தண்டனையாவது இங்குதானாம் நீ உண்ண நான் […]
ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி பூமியின் விசிறி புன்னகையின் பொருள் வடிவங்களின் வண்ணங்களின் வாசனைகளின் களஞ்சியம் கோடிக்கோடி உயிர்களின் குடை உடை வீடு கூடு மருந்து விருந்து இலைகள் இல்லாதிருந்தால் செவ்வாயாகி யிருக்கும் பூமிப் பிரதேசம் மொத்த உயிர்களும் செத்துப் போயிருக்கும் காற்றுவெளியை கழிவாக்கும் உயிர்கள் கழுவிப் போடும் இலைகள் இயற்கையின் குளிப்பிடம் இலைகள் ‘இலைகள் உதிக்கும் உழைக்கும் உதிரும்’ ஓர் இலைபோல் வாழ் ஈருலகம் உனக்கு ‘துக்கம் ஏக்கம் பயம் சோகம் […]
அந்த சமூகமன்றத்தின் சாதாரண உறுப்பினன் நான் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவனின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மூவாயிரம் திரட்டி முதியோர் இல்லத்திற்கு தரும் ஏற்பாடுகள் நடந்தன நினைவு நாள் அன்று தலைவர் நிதியளித்தார் பெற்றுக்கொண்டார் இல்ல நிர்வாகி நிகழ்ச்சி முடிந்தது அந்த நிர்வாகியை நெஞ்சோடு அணைத்து நிழற்படம் எடுத்தேன் ‘முதியோர் இல்ல நிதியளிப்பு விழாவில் நானும் அதன் நிர்வாகியும்’ என்ற வாசகத்துடன் நிழற்படத்தைப் பதிவிட்டேன் முகநூலில் அந்த நிதிதிரட்டில் எள்மூக்கு கூட என் பங்கில்லை ‘கொடை வாழ்க’ ‘கொற்றம் […]
அங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது ஐம்பது வெள்ளி பார்த்தான் ஒருவன் பறந்து எடுத்தான் வேறொருவன் ‘என் காசு’ என்றான் பார்த்தவன் ‘இல்லை அது என் காசு’ என்றான் எடுத்தவன் அடாவடிப் பேச்சு அடிதடியில் முடியலாம் ‘ஆளுக்குப் பாதியே நியாயம்’ என்றான் இன்னொருவன் ‘முடியாது நீ முடிந்ததைப் பார்’ எடுத்தவன் ஓடுகிறான் பார்த்தவன் விரட்டுகிறான் ‘அம்மா… அம்மா… அடிக்கா தீங்கம்மா…. சூடு வெக்காதீங்கம்மா….. சம்பாரிச்சு குடுத்திர்றேம்மா…. அம்மா….அம்மா….’ தொலைத்த சிறுவன் வீட்டில் துவைக்கப் படுகிறான் அமீதாம்மாள்
மாலை ஒன்று வாங்கினேன் வரிசை வரிசையாய் மல்லிகை ‘வணக்கம் வணக்கம்’ என்றது ரோஜாக்கள் சுற்றி வந்து ‘ஆரத்தி’ என்றது நாணில் கொத்துப் பூக்கள் ‘நலமா..நலமா..’ என்றது அதன் மோகனப் புன்னகையில் நான் மேகமென மிதந்தேன் மாலையில் ஒரு விழா… தலைவரின் கழுத்தில் மாலையைத் தவழவிட்டு ‘வாழ்க தலைவர்’ என்றேன் விழா முடிந்தது வீடு திரும்பினேன் யாரது கூப்பிட்டது? திரும்பிப் பார்த்தேன். கோணிச் சாக்கில் பிதுங்கி கழுத்து நீட்டி கண்ணீர் விட்டது என் மாலை அமீதாம்மாள்
எனக்கும் என் மகனுக்குமிடையே அரைநூற்றாண்டு இடைவெளி அப்பா-மகன், குரு-சீடன் இப்படித்தான் நாங்கள் குருவாக அப்பாவாக என்மகன் எங்கள் மல்லிப்பூ உரையாடலில் முட்கள் இருந்ததில்லை கின்னஸ்களில் அவர் வாழ்க்கை கிண்ணத்தில் என் வாழ்க்கை போயிங்கில் அவர் பயணம் பொட்டு வண்டி என்பயணம் அவரின் ரசிகர்கள் மின்மினிகள் என் ரசிகர்கள் மினுக்கட்டான்கள் அவரின் அசைவுகளுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் சிதறிய ஒன்றிரண்டே எனக்கு அவர் சம்பளம் கொடுக்கிறார் நான் சம்பளம் பெறுகிறேன் மனங்களால் அவர் மாலை மலர்களால் என் மாலை நான் […]